``25 வருடங்களாக ஷூட்டிங், வீடு என்றுதான் வாழ்ந்து வருகிறேன்'' - மனம் திறந்த நடிக...
"சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவதில் அரசுக்கு என்ன சிக்கல்?" - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!
தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று பாமக அறப்போராட்டத்தை நடத்தி வருகிறது.
சென்னையில் பாமக சார்பாக நடந்த அறப்போராட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், ஆளும் கட்சியினரிடம் பேசி சாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தேன் என்று பேசியிருக்கிறார்.

ராமதாஸ், "இட ஒதுக்கீடு இங்கு இருக்கும் சாதியினருக்கு சரியாகப் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும். இங்கு இருக்கும் 300க்கும் மேற்பட்ட சாதியினரை 6 தொகுப்புகளாகப் பிரித்து இட ஒதுக்கீட்டை பங்கிட வேண்டும்.

இதுதொடர்பாக கோட்டைக்குச் சென்று ஆளும் கட்சியினரிடம் பேசி சாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தேன். வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு வகுப்பு எடுத்தேன். இட ஒதுக்கீட்டால் தமிழக மக்கள் வளர்ச்சியடைந்தால் அது ஆளும் கட்சிக்குத்தானே பெருமை. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த எது தடுக்கிறது. அதில் இந்த அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது.
சாதிவாரிக் கணக்கெடுப்பில் ஒருசிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் சமூகநீதியைக் காக்க இதைத் தவிர வேறுவழியில்லை" என்று பேசியிருக்கிறார்.















