``IIT மெட்ராஸ் பறை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்'' - விருதுநகரில் பறை இச...
`பீகாரால் முடியாமல் போகலாம்; ஆனால் மேற்கு வங்க மக்களால் முடியும்’ - பாஜக-வை சாடிய மம்தா
இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு, மேற்கு வங்கம் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று (11-ம் தேதி) மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாங்கரில் நடந்த பொதுகூட்டத்தில், உரையாற்றிய முதல்வர் மம்தா பானர்ஜி, ``SIR என்ற பெயரில் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் உரிமைகளைப் பறிப்பீர்களா? தேர்தலின் போது டெல்லியில் இருந்து போலீஸை அழைத்து வந்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை மிரட்டுவார்கள்.
தாய்மார்களே, சகோதரிகளே, உங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டால், உங்களிடம் சமையலுக்குப் பயன்படுத்தும் கருவிகள் இல்லையா... உங்களிடம் வலிமை இல்லையா... உங்கள் பெயர்கள் நீக்கப்பட்டால் அதை நீங்கள் கடந்து செல்லமாட்டீர்கள் தானே? அந்தப் போராட்டத்தில் பெண்கள் முன்னணியில் நின்று போராடுவார்கள். ஆண்கள் அவர்களுக்குப் பின்னால் நிற்பார்கள்.
நான் வகுப்புவாதத்தில் நம்பிக்கை கொண்டவள் அல்ல. மதச்சார்பின்மையை நம்புகிறேன். தேர்தல் நெருங்கும் போதெல்லாம், பா.ஜ.க பணத்தைப் பயன்படுத்தி மற்ற மாநிலங்களிலிருந்து மக்களை அழைத்து வந்து பொதுமக்களிடம் பிளவு ஏற்படுத்த முயற்சிக்கிறது.
நீங்கள் எங்களைத் தாக்கினால், பதிலடி எப்படி கொடுப்பது என்பதும் எங்களுக்குத் தெரியும். அநீதியை எப்படி தடுத்து நிறுத்துவது என்பதும் எங்களுக்குத் தெரியும். நினைவில் கொள்ளுங்கள், பீகாரால் முடியாமல் போகலாம். ஆனால் நீங்கள் என்ன செய்தாலும் அதை முறியடிக்க எங்கள் மேற்கு வங்க மக்களால் முடியும்," என்று அவர் மேலும் கூறினார்.
















