``25 வருடங்களாக ஷூட்டிங், வீடு என்றுதான் வாழ்ந்து வருகிறேன்'' - மனம் திறந்த நடிக...
தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது! - என்ன நடந்தது?
தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள், இன்று கலைஞர் சமாதி முன்பாகவும் தலைமைச் செயலகம் முன்பாகவும் போராடி காவல்துறையால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

மண்டலங்கள் 5 மற்றும் 6 இரண்டிலும் தூய்மைப் பணியை சென்னை மாநகராட்சி தனியாருக்கு ஒப்பந்தமாக வழங்கியிருக்கிறது. இதை எதிர்த்து தாங்கள் பழைய நிலையிலேயே மாநகராட்சியின் கீழே தொடர வேண்டுமென தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ரிப்பன் பில்டிங்கின் முன்பு போராடிய தூய்மைப் பணியாளர்களை ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். அதன்பிறகு, சென்னை அல்லிக்குளம், உழைப்பாளர் சிலை, ஆட்சியர் அலுவலகம், எழும்பூர் பெரியார் மணியம்மை சிலை உட்பட பல இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி கைதாகினர்.







போராட்டம் 100 நாட்களை கடந்த நிலையில், உயர்நீதிமன்ற அனுமதியோடு அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு கலைஞர் சமாதி முன்பும், மதியம் 1 மணியளவில் தலைமைச் செயலகம் முன்பும் கூடி போராட முயன்றனர்.
தனியார்மயமாக்கலை எதிர்த்து கோஷம் போட்டு கோரிக்கைகளை முன்வைத்த அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக பேருந்துகளில் ஏற்றி கைது செய்தனர்.















