``IIT மெட்ராஸ் பறை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்'' - விருதுநகரில் பறை இச...
`` ஈரோடு வரும் விஜய்; காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள்" - தேதியை அறிவித்த செங்கோட்டையன்
தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். வாரி மஹால் அருகே இருக்கும் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் கடிதங்கள் வழங்கப்பட்டன.
ஆனால், காவல்துறை தரப்பில் 84 விதிகள் கொடுக்கப்பட்டுள்ளதால் அதற்கு உரிய பதிலை கொடுத்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குத் தாமதமாகி வந்தது. "எவ்வளவு பேர் வருகிறார்கள், அவர்களின் பெயர்கள் என்றெல்லாம் கேள்விகள் கேட்கிறார்கள். கூட்டத்திற்கு வருபவர்களின் பட்டியலை எப்படி கொடுக்க முடியும்." என்று செங்கோட்டையன் தனது ஆதங்கத்தை வெளிப்பட்த்தியிருந்தார்.
இந்நிலையில், டிசம்பர் 18ஆம் தேதி தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “தவெக தலைவர் விஜய் வருகிற 18ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருகிறார். ஈரோட்டில் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல் கேட் அருகே ‘சரளை’ என்ற இடத்தில் விஜயின் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.
“காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள் பிரசாரம் நடைபெறும். ஏற்பாடுகளை நாங்கள் தீவிரமாக செய்து வருகிறோம். கூட்டம் நடத்த எந்தத் தடையும் இல்லை. தவெக தலைவர் விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்றவர்கள் கூட்டணிக்கு வரலாம். யாரை கூட்டணியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை விஜய் முடிவு செய்வார்,” என்று கூறியுள்ளார்.
மேலும், “இந்தக் கூட்டத்தின் ஏற்பாட்டை சீரோடும் சிறப்போடும் செய்து வருகிறோம். அரசு அதிகாரிகள் விதித்த கட்டுப்பாடுகளின் படி, ஈரோட்டில் விஜய் பங்கேற்கும் பரப்புரை கூட்டத்தில் பல்வேறு பணிகளை நிறைவேற்றி தர தயாராக இருக்கிறோம். புதுச்சேரிக்குப் பிறகு முதன்முதலில் ஈரோட்டைத் தேர்வு செய்திருக்கிறார்கள். விஜயின் இந்த அரசியல் சுற்றுப்பயணம் பெரும் வரலாறாக இருக்கும்,” என்று தவெக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.


















