செய்திகள் :

Tax: ``இந்திய பொருள்களுக்கு 50% வரி" - மெக்சிகோ அறிவிப்பால் அதிக பாதிப்பு யாருக்கு?

post image

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூடுதல் வரி, அபராதம் என விதித்திருந்தது விவாதமான நிலையில், இப்போது மெக்சிகோவும் இந்தியா மீது 50% வரி விதித்திருக்கிறது.

இது தொடர்பாக வெளியான தகவலில், மெக்ஸிகோவுடன் முறையான வர்த்தக ஒப்பந்தம் இல்லாத நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 1,400 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு வரிகளை உயர்த்தும் புதிய கட்டண முறைக்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

ட்ரம்ப் வரி விதிப்பு

கார் ஏற்றுமதி சந்தையில் தென்னாப்பிரிக்கா, சவூதி அரேபியாவுக்குப் பிறகு மூன்றாவது இடத்தில் இருக்கும் நாடு இந்தியா. எனவே, மெக்சிகோவின் ஆசிய நாடுகளின் இறக்குமதிகள் மீதான வரி ஒப்புதல், இந்திய வாகன உற்பத்தியாளர்களை அதிகம் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

மெக்சிகோவின் 50 சதவீதம் வரை வரிகளை உயர்த்தும் முடிவு, வோக்ஸ்வாகன் மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட முக்கிய இந்திய கார் ஏற்றுமதியாளர்களின் 1.8 பில்லியன் டாலர் (தோராயமாக 14,940 கோடி) மதிப்புள்ள ஏற்றுமதிகளை பாதிக்கும்.

அதனால், மெக்சிகோவின் கட்டண நடவடிக்கையைத் தடுக்க வேண்டும் என இந்தியத் தரப்பை வலியுறுத்த கார் ஏற்றுமதி தொழில்துறை முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

கார் ஏற்றுமதி:

டிரேடிங் எகானமிக்ஸ் வழங்கியிருக்கும் தகவலின்படி, 2025-ம் ஆண்டில் இந்தியா $5.63 பில்லியன் டாலர் (ரூ5,085 கோடி) மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களில் வாகனங்களே அதிகம். 2025ம் ஆண்டில் இந்தியா மெக்சிகோவிற்கு ஏற்றுமதி செய்த பொருட்களில், வாகன ஏற்றுமதியின் மதிப்பு மட்டும் $1.86 பில்லியன் டாலர். அதற்கு அடுத்தடுத்த இடங்களில்தான்

ஏற்றுமதி
ஏற்றுமதி
  • மின்சாரம், மின்னணு உபகரணங்கள் - $612.38 மில்லியன் டாலர்

  • இயந்திரங்கள், அணு உலைகள், பாய்லர்கள் - $560.87 மில்லியன் டாலர்

  • கரிம இரசாயனங்கள் - $388.04 மில்லியன் டாலர்

  • அலுமினியம் - $386.03 மில்லியன் டாலர்

  • மருந்து பொருட்கள் - $211.20 மில்லியன் டாலர்

இது தொடர்பாக பேசிய ஸ்கோடா ஆட்டோ நிறுவனத் தலைவர் பியூஷ் அரோரா, ``இந்தியா பல ஆண்டுகளாக வலுவான ஏற்றுமதி தளமாக இருந்து வருகிறது. எங்கள் நிறுவனம் மட்டும் இங்கிருந்து 40 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

ஸ்கோடா கைலாக்
ஸ்கோடா கைலாக்

நாங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் மெக்சிகோ முக்கியமான ஏற்றுமதி சந்தைகளில் ஒன்று. அங்கு அதிகரித்து வரும் தேவை, எங்கள் தயாரிப்பின் மீதான ஈர்ப்பு ஆகியவை அதற்கு முக்கிய காரணம்" என்றார்.

மெக்ஸிகோவிற்கு இந்தியாவின் மொத்த கார் ஏற்றுமதியில் ஸ்கோடா ஆட்டோ கிட்டத்தட்ட 50% ஏற்றுமதி செய்கிறது, அதைத் தொடர்ந்து ஹூண்டாய், நிசான் மற்றும் சுஸுகி ஆகியவை அடுத்த இடங்களைப் பிடிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அனுராக் தாகூர் காட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து அமைப... மேலும் பார்க்க

``IIT மெட்ராஸ் பறை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்'' - விருதுநகரில் பறை இசைத்த ஆளுநர் ரவி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில், தமிழக ஆளுநரின் விருப்ப நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் பத்மஸ்ரீ விருதுபெற்ற பறை இசை கலைஞர் வேலு ஆசான் மூலம் கட்டப்பட்டுள்ள பாரதி பறை பண்பாட்டு மைய... மேலும் பார்க்க

`` ஈரோடு வரும் விஜய்; காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள்" - தேதியை அறிவித்த செங்கோட்டையன்

தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். வாரி மஹால் அருகே இருக்கும் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் க... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: சுட்டிக்காட்டிய விகடன்; சீரமைக்கப்பட்ட தார் சாலைகள் - மக்கள் நிம்மதி!

திருப்பத்தூர் மாவட்டம், லண்டன் மிஷன் பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த தார்சாலைகள் குறித்து, 11/10/2025 அன்று விகடனில், "சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும்ப... மேலும் பார்க்க

”குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: 2027-ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும்”-இஸ்ரோ தலைவர் நாராயணன்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இஸ்ரோ தலைவர் நாராயணன் வருகை புரிந்தார். அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அ... மேலும் பார்க்க

"கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து திமுக வாய் திறக்கவில்லை" - தவெக சி.டி.ஆர் நிர்மல் குமார்

பனையூரில் உள்ள தவெக-வின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. மாநில அளவிலான நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்க... மேலும் பார்க்க