`ஏன் பாரதி, என் பாரதி..!' - மகாகவி குறித்து நெகிழ்ந்து பேசிய பாவலர் அறிவுமதி!
"கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து திமுக வாய் திறக்கவில்லை" - தவெக சி.டி.ஆர் நிர்மல் குமார்
பனையூரில் உள்ள தவெக-வின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. மாநில அளவிலான நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர்.
இதையடுத்து பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார், "அடுத்த 3 மாதங்களுக்கான தேர்தல் பணிகள் குறித்தும் சவால்கள் குறித்தும் பேசினோம். திமுக என்ன மாதிரியான இடையூறுகளை கொடுக்கும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினோம்.

தலைவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வோருடன்தான் கூட்டணி. ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லாததால், கூட்டம் நடத்தவே அனுமதி கேட்கிறோம். ஆனால், காவல்துறை மூலம் மற்ற கட்சிகளுக்கு இல்லாதவாறு முட்டுக்கட்டை போடுகின்றனர்.
ஜனவரி, பிப்ரவரியில்தான் விருப்ப மனு விநியோகமெல்லாம் நடக்கும்.
கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து திமுக வாய் திறக்கவில்லை. இதையெல்லாம் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம். செந்தில் பாலாஜி கைதின் போது தொட்டுப்பார் சீண்டிப்பார் என முதல்வர் வீடியோ வெளியிட்டார். நேரு விவகாரத்தில் ஏன் வாய் திறக்கவில்லை.

திமுகவின் தலைமையின் பெயரை சொல்லி 'Party Fund' எனக் கூறிதான் நேரு பணம் வாங்கியிருக்கிறார். லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதில் என்ன பிரச்னை?
பாமக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வது பற்றி தலைவர் முடிவெடுப்பார்." என்று பேசியிருக்கிறார்.



















