செய்திகள் :

`ஏன் பாரதி, என் பாரதி..!' - மகாகவி குறித்து நெகிழ்ந்து பேசிய பாவலர் அறிவுமதி!

post image

பாரதியார் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம் மற்றும் இளம் பாரதி - 2025 விருது வழங்கும் விழா இன்று (11.12.2025) நடைபெற்றது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் உஷா கீர்த்திலால் மேத்தா அரங்கில் இந்த விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் இரா.இராஜவேல், துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் துர்கா சங்கர் மற்றும் திரைப்படப் பாடலாசிரியர், பாவலர் அறிவுமதி முதலான அறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

`ஏன் பாரதி... என் பாரதி' என்னும் தலைப்பில் உரையாற்றிய பாவலர் அறிவுமதி,

``நான் மட்டுமா பாடலாசிரியன்? பாரதியும் பாடலாசிரியன் தான்! அவனுக்கு இசையமைப்பாளர்கள் எல்லாம் யார் தெரியுமா? `ஏன் பாரதி, என் பாரதி' என்ற தலைப்பில் நான் ஏன் பேச எண்ணினேன் என்றால் அவனைப்போல் மொழிக்கு உயிர் ஊட்டவும் மொழிக்கு வெளிச்சம் தரவும் யாரும் கிடையாது.

உலகிலேயே முதன்முதலாகத் தோன்றிய என் தாய்மொழி தமிழ் இருட்டில் முடங்கிக் கிடந்த அந்த வரலாற்றுச் சுரங்கத்தை உள்வாங்கித் தன் பாடலுக்கு நல்லகாலம் வருது... நல்லகாலம் வருது என்று சொன்ன குடுகுடுப்புக்காரர்களிடம் போய் உன் மெட்டுக்கு நான் பாட்டு எழுதுகிறேன் என்று சொன்னான் பாரதி. நெல்லு குத்தும் நாட்டுத் தாய்களை இசையமைப்பாளர்களாக வைத்துக் கொண்டு அதற்குத் தமிழ் செய்தவன், உழைக்கும் மக்களிடமே சந்தம் வாங்கிப் பாடினான் பாரதி.

பெரியாரையும், பாரதியையும், பாரதிதாசனையும், வள்ளலாரையும் மறந்துவிட்டால் அது தமிழாகவும் இருக்காது, தமிழனாகவும் தமிழச்சியாகவும் வாழ முடியாது.

பாரதி தன் 39 அகவை வரைதான் இவ்வுலகில் வாழ்ந்திருக்கிறான், அதற்குள் நம் தமிழுக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறான் அவன்!

தன் சுயசரிதையை எழுதுகிறான், என் வாழ்க்கையும் அவன் வாழ்க்கையும் வெவ்வேறில்லை என்று கண்ணீரை சிந்தி சிந்தி பலமுறை படித்துக் கொண்டும், உயிருக்குள் இறக்கிக் கொண்டும் இருக்கிறேன், அந்த பாரதி என்னை வழி நடத்துகிற தாயாக மாறியது அந்தச் சுயசரிதையில் இருந்துதான்" எனக் கூறி நெகிழந்தவர், மேலும் பாரதியின் வாழ்விலிருந்து குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைக் கூறி தன் உரையை நிறைவு செய்தார்.

தொடர்ந்து பல்கலைக்கழக அளவிலான கவிதை, பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு இவ்விழாவில் `இளம் பாரதி விருது' வழங்கப்பட்டது.

கவிஞர் புலமைப் பித்தன் மனைவி காலமானார்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசவைக் கவிஞராக இருந்தவரும் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆருக்கு நெருங்கிய நண்பருமான மறைந்த கவிஞர் புலமைப் பித்தனின் மனைவி தமிழரசி, நேற்று கோயம்புத்தூரில் காலமானார். அவருக்கு வயது ... மேலும் பார்க்க

விடுகதை போட்டி! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

குறை நம் பார்வையில்தான்! - மன்னிப்பு கேட்க துடிக்கும் மனம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சாகித்ய அகாடமி விருது பெற்றக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்!

சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமாகியிருக்கிறார். உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் இன்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 92. கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாடக ஆசிரியர... மேலும் பார்க்க

சேலம்: புது பொலிவுடன் அரசு அருங்காட்சியகம்; என்ன ஸ்பெஷல், பார்க்க வேண்டிய அரிய பொக்கிஷங்கள் என்ன?

சேலம் மாவட்டம் மணக்காடு அருகில் ரூ.4.91 கோடி மதிப்பில் புதிய கட்டிடத்துடன் புது பொலிவில் மக்கள் பார்வைக்கு தயாராகி வருகிறது அரசு அருங்காட்சியகம் என்ற தகவலோடும், ஆர்வத்தோடும் என்ன நடக்கிறது அரசு அருங்க... மேலும் பார்க்க

அச்சச்சோ அதுக்குள்ள இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சா? - பேருந்தும் பாடல்களும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க