`ஏன் பாரதி, என் பாரதி..!' - மகாகவி குறித்து நெகிழ்ந்து பேசிய பாவலர் அறிவுமதி!
'OTT தளங்கள் ஏன் படங்களை வாங்குவதில்லை?' - ஆர்.கே.செல்வமணி கேள்வி!
'Zee5' தயாரிப்பில் வெளியாகும் புதிய வெப் சீரிஸான ’ஹார்ட்டிலே பேட்டரி’-யின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இதில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, Zee5 கெளஷிக் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். 'OTT தளங்கள் ஏன் படங்களை வாங்குவதில்லை?' என்ற விவாதங்கள் ஆர்.கே.செல்வமணி, Zee5 கெளஷிக் இடையே நடந்தது.

இதுகுறித்து ஆர்.கே.செல்வமணி, "இந்த வெப்சீரிஸ் தயாரிப்பு நிறுவனம் ஓடிடி தளம் என்பதால் இந்த மேடையில் மற்றொரு கோரிக்கையை முன்வைக்கிறேன். கடந்த காலங்களில் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நடிகர்களின் ஊதியத்தை ஓடிடி தளங்கள் 40 கோடி ரூபாய் வரை உயர்த்திவிட்டன.
இப்போது ஓடிடி தளங்கள் திரைப்படத்தை வாங்குவதில்லை என முடிவு செய்துவிட்டன. இருப்பினும் அந்த குறிப்பிட்ட நடிகர்களோ தங்களுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்ளாமல் அப்படியே இருக்கின்றனர். இதற்கு தயாரிப்பாளர்கள் மற்றும் ஓடிடி தளங்கள் இணைந்து பேசி நல்ல ஒரு முடிவினை எடுக்க வேண்டும்" என்று பேசினார்.

இதையடுத்துப் பேசிய Zee5 கெளஷிக், "படத்தோட கதைதான் ரொம்ப முக்கியம். அதை சரியாகத் தேர்ந்தெடுத்து தயாரித்தால் படம் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும். நல்ல படங்களை ஓடிடியில் போட்டால்தான் எங்களுடைய வாடிக்கையாளர்கள் எங்களை நம்பி சந்தா கட்டுவார்கள். நல்ல கதைகளை, நல்ல படங்களை மட்டுமே ஓடிடியில் வாங்குகிறோம். நல்ல கதைகளையே தயாரிக்கிறோம். அதைத் தவிர நாங்கள் ஏதும் செய்வதில்லை" என்று பேசியிருக்கிறார்.


















