ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாள் விழா: போயஸ் கார்டனில் கொண்டாடிய ரசிகர்கள் | Photo ...
``திருமண ஆசைகாட்டி ரூ.2 கோடி பணம், தங்க நகை மோசடி'' - பெண் டி.எஸ்.பி மீது ஹோட்டல் அதிபர் புகார்
சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள தண்டேவாடா என்ற இடத்தில் டி.எஸ்.பி.யாக உள்ளவர் கல்பனா சர்மா. இந்த பெண் போலீஸ் அதிகாரி ஹோட்டல் உரிமையாளரை திருமண ஆசைகாட்டி பணமோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராய்கட்டில் ஹோட்டல்கள் நடத்தி வருபவர் தீபக் தண்டன். இவருக்கும் போலீஸ் அதிகாரி கல்பனா சர்மாவுக்கும் இடையே கடந்த 2021ம் ஆண்டு முதல் முறையாக அறிமுகம் ஏற்பட்டது.
திருமணமானவரான தீபக் தண்டனுடன் கல்பனாவிற்கு நெருக்கமான நட்பு ஏற்பட்டது.

இந்த நெருக்கத்தை பயன்படுத்தி தீபக்கை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.2 கோடி பணம், ரூ.12 லட்சம் மதிப்புள்ள வைரமோதிரம், ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் யுனோவா காரை வாங்கிக் கொண்டு மோசடி செய்துவிட்டதாக தீபக் குற்றச்சாட்டுச் செய்துள்ளார்.
அதோடு, ராய்ப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலை தனது சகோதரர் பெயருக்கு மாற்றிக்கொடுக்கும்படி நெருக்கடி கொடுத்ததால் ரூ.30 லட்சம் செலவு செய்து அந்த ஹோட்டலை கல்பனா வர்மா பெயருக்கு எழுத்துப்பூர்வமாக மாற்றிக்கொடுத்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, “தான் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுக்கவில்லையெனில் போலி வழக்கில் சிக்க வைத்துவிடுவேன்” என்று தன்னை மிரட்டுவதாக தீபக் போலீசில் புகார் செய்துள்ளார்.
தனது குற்றச்சாட்டுக்கு சாட்சியாக வாட்ஸ் ஆப் சாட்டிங் விவரங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக போலீசார் இரு தரப்பிலும் வாக்குமூலம் வாங்கி இருக்கின்றனர். ஆனாலும், இன்னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை.
கல்பனாவின் தந்தை ஹேமந்த் இரண்டு மாதங்களுக்கு முன்பு தீபக் தொழில் விஷயமாக அவரது மனைவி வங்கி கணக்கில் இருந்து கொடுத்த காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டதாக போலீசில் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கு இப்போது கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கல்பனா தன் மீதான குற்றச்சாட்டுக்களை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தனது தந்தைக்கும் தீபக்கிற்கும் இடையிலான தொழில் பிரச்னையில் தேவையில்லாமல் தனது பெயர் இழுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
தீபக் தாக்கல் செய்துள்ள சாட்டிங் தகவல்கள் போலியானவை என்றும், தனது சமூக ஊடகப் பக்கத்திலிருந்து புகைப்படங்களை திருடி இது போன்ற சாட்டிங் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தீபக் தாக்கல் செய்துள்ள சாட்டிங் தகவல்கள் போலியானவை என்றும், தனது சமூக ஊடகப் பக்கத்திலிருந்து புகைப்படங்களை திருடி இதுபோன்ற சாட்டிங் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார்.
தீபக் கார் கொடுத்ததாக கூறப்படுவது குறித்து கல்பனா கூறுகையில், தீபக் மனைவியிடமிருந்து முறைப்படி அந்த கார் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. தீபக் தான் கூறும் குற்றச்சாட்டுக்கு சாட்சியங்களை தாக்கல் செய்ய முடியுமா? கடந்த நான்கு ஆண்டுகளாக ஏன் புகார் செய்யவில்லை? காசோலை மோசடி வழக்கில் அவரது மனைவிக்கு நேரடி தொடர்பு இருந்தும் எந்தவித புகாரும் கொடுக்கவில்லை. தீபக்கின் புகார் அனைத்தும் கட்டுக்கதையாகும். சட்டச்சிக்கலில் இருந்து தப்பிக்க இதுபோன்று செய்துள்ளார்.

எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்று தீபக் செய்கிறார் எனத் தெரிவித்தார்.
இது குறித்து இருவரின் புகார்களையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கொடுக்கப்பட்ட பணத்தை திரும்ப கேட்டதால்தான் பிரச்சனை உருவானதாகத் தெரிகிறது.
தீபக்கும் கல்பனாவும் ஹோட்டலில் பல மணி நேரம் அமர்ந்து பேசியதாகவும், அடிக்கடி வீடியோ காலில் பேசிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இச்செய்தி சத்தீஷ்கர் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.




















