செய்திகள் :

மின்சாரம் தாக்கி மகன் உயிரிழப்பு; துக்கம் தாங்காமல் உயிரை மாய்த்த தந்தை - ராமநாதபுரத்தில் சோகம்!

post image

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீனவர் காலனியைச் சேர்ந்தவர் களஞ்சியம். இவர் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், வீட்டில் உள்ள மோட்டார் மின் சுவிட்சினை பழுது பார்த்துள்ளார். அப்போது களஞ்சியத்தின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனைக் கண்ட வீட்டில் இருந்தவர்கள் களஞ்சியத்தை மீட்டு மண்டபத்தில் உள்ள ஆரம்ப்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கிச் சென்றனர்.

அங்கு களஞ்சியத்தைப் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. மகன் உயிரிழந்த துக்கத்தினை தாங்க முடியாத களஞ்சியத்தின் தந்தை சேகர், மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தனிமையில் இருந்த சேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

களஞ்சியம்
தற்கொலை செய்துகொண்ட தந்தை சேகர்

தகவல் அறிந்த மண்டபம் போலீஸார், உயிரிழந்த மகன், தந்தை உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகன் உயிரிழந்த துக்கத்தினை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், மண்டபம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக சம்பவம் குறித்து மண்டபம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு: காதல் திருமணம்; தங்கையைக் கடத்திச் சென்ற அக்கா உள்ளிட்ட 5 பேர் கைது - விவரம் என்ன?

ஈரோடு மாவட்டம், எண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் சேதுராஜ் (25). பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும், அந்தியூர் மேல்தெருவைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரும் கடந... மேலும் பார்க்க

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர்; பலியான பெண் - விசாரணையில் வெளிவந்த திடுக் உண்மைகள்!

உத்தரப்பிரதேசத்தில் வயிற்றுவலி காரணமாக கிளினிக்கில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவர் யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்ததில் அப்பெண் உயிரிழந்தார்.இந்த சம்பவத்தில், அந்த மருத்துவர்கள் போலி மருத... மேலும் பார்க்க

பொள்ளாச்சியில் அச்சடித்து பொன்னானியில் சப்ளை; 10 லட்சம் பேருக்கு போலி சான்றிதழ் விற்ற மோசடி கும்பல்

கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், பொன்னானி பகுதியில் நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் உள்ள போலி சான்றிதழ்கள் தயாரித்து வழங்கப்படுவதாக போலீஸ் எஸ்.பி-க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில்... மேலும் பார்க்க

காதலனிடம் தப்பிக்க கார் ஓட்டுநர் மீது புகார் அளித்த நர்சிங் மாணவி - பெங்களூருவில் அதிர்ச்சி

பெங்களூருவில் கல்லூரி மாணவி ஒருவர், தனது கழுத்தில் இருந்த காயங்களை மறைப்பதற்காக, காதலனிடம் பொய் கூறியதுடன், கார் ஓட்டுநர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத... மேலும் பார்க்க

`ஊழல் புகார், வருமானத்திற்கு அதிகமாக சொத்து' - ஊராட்சி செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன் (48) என்பவர் பிள்ளையார்குளம் ஊராட்சியில் செயலாளராகப் பணியாற்றி வந்தார். இவர் வருமானத்திற்கு அதிகமாகச... மேலும் பார்க்க

கடையநல்லூர்: தையல் மெஷின் பெல்ட்டால் மனைவியைக் கொன்ற நபர்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலித்தநல்லூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன், வெள்ளதாய் தம்பதியினரின் மகள் வேல்மதிக்கும், கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமர் என்பவரு... மேலும் பார்க்க