செய்திகள் :

கரூர் சம்பவம்: `உயர் நீதிமன்றம் விசாரணைகளை நடத்திய முறையில் செயல்முறை மீறல்கள்..!’ - உச்ச நீதிமன்றம்

post image

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அமைத்த ஒரு நபர் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.

மதுரை உயர் நீதிமன்றம் அமைத்த SIT-ஐ எதிர்த்து தமிழக வெற்றி கழகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் இந்த விசாரணை நடைபெற்றது.

தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ``இந்த விவகாரத்தில் கடந்த முறை நீதிமன்றம் எட்டு வாரத்தில் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய கூறியது, சென்னை உயர் நீதிமன்றம் பதிவாளர் தரப்பிலும் பதிலளிக்க கூறியது.

அதை வேளையில் இந்த கரூர் சம்பவம் விவகார தொடர்பான விசாரணை என்பது தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றது” என வாதங்களை முன் வைத்தனர்.

கரூர் விஜய் பிரசாரம்

அப்போது நீதிபதிகள்

``சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரேனும் ஆஜராகி இருக்கின்றனரா?

அமர்வு, மதுரை உயர் நீதிமன்ற பதிவாளர் தரப்பு வழக்கறிஞர்கள் இங்கு உள்ளனர்களா?” என கேள்வி எழுப்பினர்

சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நோட்டீஸ் பிறப்பிக்காத காரணத்தினால் இந்த விவகாரத்தில் இதுவரை பதில் அளிக்கவில்லை அதற்கு பதில் அளிக்கப்பட்டது.

பின்னர் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் என்.ஆர் இளங்கோ ஆகியோர்,

``கரூர் சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆணையத்தை பொறுத்தவரைக்கும் விசாரணை அமைப்புகளின் புலன் விசாரணைக்குள் தலையிடாமல் தனியாக சுய தீன விசாரணையை நடத்தும் வகையில்தான் அமைக்கப்பட்டது

எனவே தனி நீதிபதி ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

மேலும், ``எதிர்காலத்தில் கூட்டங்கள் நடத்த விதிமுறைகளை வகுப்பதற்கும், நிவாரணம் பரிந்துரைக்கவுமே ஆணையம் அமைக்கப்பட்டது” என கூறினார்கள்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அப்போது பேசிய நீதிபதிகள், ``கரூர் சம்பவம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றம் விசாரித்த முந்தைய முறையீட்டில் குழப்பம் உள்ளது அவர்கள், சில தவறுகள் செய்திருக்கலாம்” என்று கூறினர்.

குறிப்பாக, ``உயர் நீதிமன்றம் விசாரணைகளை நடத்திய முறையில் செயல்முறை மீறல்கள் உள்ளதாக தெரிகிறது” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும், ``மதுரை அமர்வு இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை எவ்வாறு எடுத்துக்கொண்டது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்றும் கூறினர்.

உயர் நீதிமன்ற பதிவாளர், வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அடிப்படையை விளக்கும் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி, இந்த விவகாரத்தை முதலில் விசாரிப்போம் என கூறினர்.

எனவே, உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டனர்.

மேலும், பதிவாளரின் அறிக்கையின் நகல்களை அனைத்து தரப்பினருக்கும் வழங்குமாறும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

"ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல" - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

"பல்கலை பட்டமளிப்பு விழாவில், ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல, இதை தவிர்க்கும் வகையில் வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்" என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிக... மேலும் பார்க்க

"திருமண வயதை எட்டும் முன்னரே Live-in உறவில் இருக்கலாம்"- 18, 19 வயதினர் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

திருமண வயதை எட்டவில்லை என்றாலும் இரண்டு வயதுவந்த நபர்கள் மனம் விரும்பி 'லிவ்-இன்' உறவில் (Live-in Relationship) வாழ்வது அவர்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமை என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்" - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு

ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும்.ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை தீபம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஏற்ற அனு... மேலும் பார்க்க

53 வயதில் திருமணமாகி 4 நாள்களில் பிரிவு; 14 ஆண்டுகள் போராடி ஜீவனாம்சம் பெற்ற பெண்

கணவன்–மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டால், விவாகரத்துக்காக இருவரும் பல ஆண்டுகள் கோர்ட் படியேறுவது வழக்கமாக உள்ளது. மனைவியுடன் சில நாள்கள் மட்டுமே வாழ்ந்தாலும், விவாகரத்து ஏற்படும் போது கணவன்... மேலும் பார்க்க

``சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் BJP, RSS வழக்கறிஞர்களுக்கு கொலீஜியம் பரிந்துரை" - திருமா

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் நெருக்கமாக உள்ள வழக்கறிஞர்களை கொலீஜியம் பரிந்துரைப்பதாகவும், இதில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் வி.சி.க தலைவர் எம்.ப... மேலும் பார்க்க

ரயிலில் தள்ளி மாணவி கொலை: குற்றவாளியின் தண்டனையை குறைத்த உயர் நீதிமன்றம் - காரணம் என்ன?

தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவங்களில் ஒன்று, பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கு. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு விதிக்கப்பட்... மேலும் பார்க்க