செய்திகள் :

சீரியல் நடிகை ராஜேஸ்வரி மறைவு; குடும்ப பிரச்னையில் விபரீத முடிவு? - ரசிகர்கள் அதிர்ச்சி!

post image

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `சிறகடிக்க ஆசை'. இந்தத் தொடரில் போலீஸ் அருணின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் ராஜேஸ்வரி. இவர் `பாக்கியலட்சுமி', `பனிவிழும் மலர்வனம்' உட்பட பல தொடர்களில் நடித்திருக்கிறார். தவிர வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். 

சிறகடிக்க ஆசை ராஜேஸ்வரி

ராஜேஸ்வரி குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

ராஜேஸ்வரி வெள்ளித்திரை, சின்னத்திரை எனத் தொடர்ந்து பயணித்து வந்திருக்கிறார். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2 பெரிய பிள்ளைகள் இருக்கிறார்கள்.

தன் கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தன்னுடைய தாய் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார் ராஜேஸ்வரி. இந்நிலையில் நேற்று அளவுக்கதிகமாக ரத்த அழுத்த மாத்திரையை எடுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அவரை மீட்டு சைதாப்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றிருக்கிறார்கள். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் ராஜேஸ்வரி உயிரிழந்தார்.

ராஜேஸ்வரி

அவருடைய மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் ராஜேஸ்வரியின் மறைவுக்கு இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.

இரங்கல்கள் ராஜேஸ்வரி! 

`நான் செய்ததை மத்தவங்க செய்யணும்னு இல்லையே!' - 'ஆடுகளம்','இலக்கியா' தொடர்களில் இருந்து விலகிய சதீஷ்

சன் டிவியில் 'ஆடுகளம்', 'இலக்கியா' கலைஞர் டிவியில் 'கௌரி' என ஒரே சமயத்தில் முன்று சீரியல்களில் நடித்து வந்த நடிகர் சதீஷ் சன் டிவி சீரியல்களில் இருந்து விலகியிருக்கிறார். 'ஆடுகள'த்தில் சதீஷுக்குப் பதில... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 66: ``என் மேல தப்பான இமேஜ் கிரியேட் பண்றாரு" - முறையிட்ட ஆதிரை

ஆதிரை தொடுத்த வழக்கில் ‘குத்தத்தை ஒப்புக்கறேங்கய்யா’ என்று எஃப்ஜே சொன்னது ஒரு சாமர்த்தியமான டிஃபென்ஸிவ் ஆக்ட். இதன் மூலம் அதிக குப்பைகள் கிளறப்படாது. பெயர் டேமேஜ் ஆகாது. பாரு தொடர்ந்த வழக்கில், தன் பெ... மேலும் பார்க்க

``'ஓசி சேலை’னு என்னை எப்படி அவங்க பேசலாம்; புகார் தரலாம்னு இருக்கேன்!” – நடிகை கம்பம் மீனா

’பாக்கியலட்சுமி முதலான பல சீரியல்களில் நடித்தவர் நடிகை மீனா. கம்பத்தைச் சேர்ந்த இவர் சினிமாவிலும் நடித்து வருகிறார்.இவர் குறித்து சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ கடந்த இரு தினங்களாக சுற்றி வருகிறது.அதாவது ... மேலும் பார்க்க

BB Tamil 9: "அரோராவைப் பார்த்து பயம்'னு ஒத்துக்கோங்க"- பார்வதியை சாடிய விக்ரம்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 66 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக இருக்கிறார்.மே... மேலும் பார்க்க