செய்திகள் :

BB Tamil 9: "அரோராவைப் பார்த்து பயம்'னு ஒத்துக்கோங்க"- பார்வதியை சாடிய விக்ரம்

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 66 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.

இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக இருக்கிறார்.

மேலும் இந்த வாரம் 'வழக்காடு மன்றம்' டாஸ் பிக் பாஸ் வீட்டில் நடந்து வருகிறது.

BB Tamil 9
BB Tamil 9

இந்த டாஸ்க்கில் நேற்று (டிச.9) ஆதிரை மீது வழக்கு தொடுத்திருந்த வினோத் வெற்றி பெற்றார்.

இதனைத்தொடர்ந்து பார்வதி, FJ மீது வழக்கு தொடுத்து வெற்றி பெற்றார். அதன் பிறகு ஆதிரை FJ மீது வழக்கு தொடுத்து வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் முதல் புரோமோவில் அரோரா பார்வதி மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். அரோராவிற்கு ஆதரவாக விக்கல்ஸ் விக்ரம் வாதாடுகிறார். வாதாடும் போது பேசிய விக்ரம், " பாரு அரோரா மேல அவதூறு பரப்புறாங்க.

 BB Tamil 9
BB Tamil 9

அரோராவை எப்படியாவது வெளியே அனுப்பணும்'னு கங்கணம் கட்டிட்டு இருக்காங்க. அரோராவை பார்த்து பயம்'னு ஒத்துக்கோங்க பாரு. உங்க முகத்திரை அனைத்தும் தெரிந்துவிட்டது. நீங்க யாருன்னு எல்லோருக்கும் நல்லாவே தெரியும்" என்று பார்வதியைக் கடுமையாக சாடியிருக்கிறார்.

BB Tamil 9 Day 66: ``என் மேல தப்பான இமேஜ் கிரியேட் பண்றாரு" - முறையிட்ட ஆதிரை

ஆதிரை தொடுத்த வழக்கில் ‘குத்தத்தை ஒப்புக்கறேங்கய்யா’ என்று எஃப்ஜே சொன்னது ஒரு சாமர்த்தியமான டிஃபென்ஸிவ் ஆக்ட். இதன் மூலம் அதிக குப்பைகள் கிளறப்படாது. பெயர் டேமேஜ் ஆகாது. பாரு தொடர்ந்த வழக்கில், தன் பெ... மேலும் பார்க்க

``'ஓசி சேலை’னு என்னை எப்படி அவங்க பேசலாம்; புகார் தரலாம்னு இருக்கேன்!” – நடிகை கம்பம் மீனா

’பாக்கியலட்சுமி முதலான பல சீரியல்களில் நடித்தவர் நடிகை மீனா. கம்பத்தைச் சேர்ந்த இவர் சினிமாவிலும் நடித்து வருகிறார்.இவர் குறித்து சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ கடந்த இரு தினங்களாக சுற்றி வருகிறது.அதாவது ... மேலும் பார்க்க

Exclusive: திரும்ப ரெண்டு தடவை பிக்பாஸ் கூப்பிட்டாங்க ஆனா.. - பிரதீப் ஆண்டனி

பிரதீப் ஆண்டனி. பிக்பாஸ் சீசன் 7 ல் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டவர். 'சிறப்பாக விளையாடுகிறார்' என வெளியில் பரவலாகப் பேச்சு எழத் தொடங்கிய ஒரு நாளில் அதிரடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.க... மேலும் பார்க்க

BB Tamil 9: "என்னை மன்னிச்சிடு"- ஆதிரையிடம் மன்னிப்பு கேட்ட FJ

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 65 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக தேர்வாகியிருக்... மேலும் பார்க்க