பழைய Actorகிட்ட இருக்கிற dedication புதுசா வர்றவங்ககிட்ட...! - Actress Egavalli ...
``'ஓசி சேலை’னு என்னை எப்படி அவங்க பேசலாம்; புகார் தரலாம்னு இருக்கேன்!” – நடிகை கம்பம் மீனா
’பாக்கியலட்சுமி முதலான பல சீரியல்களில் நடித்தவர் நடிகை மீனா. கம்பத்தைச் சேர்ந்த இவர் சினிமாவிலும் நடித்து வருகிறார்.
இவர் குறித்து சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ கடந்த இரு தினங்களாக சுற்றி வருகிறது.
அதாவது பொட்டிக் வைத்திருப்பவர்களிடம் நைசாகப் பேசி ஓசியில சேலை ஜாக்கெட் முதலானவை வாங்கி விட்டு அவர்களுக்கு புரமோஷனும் தராமல் ஏமாற்றி விடுவதாக அந்த வீடியோவில் ஒரு பெண் பேசியிருக்கிறார்.
என்ன நடந்தது என்ன மீனாவிடமே கேட்டோம்.
‘’இன்ஸ்டா மூலம் பொட்டிக் வச்சிருக்கிற பலரும் அறிமுகம் ஆகுறாங்க. அப்படி அறிமுகமானவங்கதான் அந்தப் பெண். அவங்களுக்கு ஒரு புரமோஷன் செய்து தர்றப்ப நமக்கு அதுக்கான டிமாண்ட் கேக்கறது வழக்கம்தானே. அப்படிதான் நானும் பண்ணிட்டு வர்றேன்.
இந்தச் சூழல்ல சில மாதங்களுக்கு முன்னாடி அப்படிப் பேசி சில சேலைகள் பிளவுஸ் தர்றதாச் சம்மதிச்சாங்க. முதல்ல ஒரு செட் அனுப்பி வச்சாங்க. அனுப்பி வச்சதுக்கு நான் புரமோஷன் கொடுத்துட்டேன்.
ஆனா திரும்ப பேசின மாதிரி தர மறுத்தாங்க. அதனால நானும் அங்களுடனான தொடர்பையே விட்டுட்டேன்.
இந்தச் சூழல்ல திடீர்னு ஒரு வீடியோ போட்டு நான் ஓசியில சேலை கேக்குறேன்னு பேசியிருக்காங்க.
வீடியோ வந்ததுமே அவங்களைத் தொடர்பு கொண்டு பேசினேன். போனை கட் பண்ணி விடுறாங்க.
ஒரு பிசினஸ்னா ரெண்டு பேருக்கும் சமமா ஏதாவது டிமாண்ட் இருக்கிறது வழக்கமானதுதான். அப்படி இருக்கிறப்ப என்னை ரொம்பவே அசிங்கப்படுத்தி வீடியோ போட்டுட்டு இப்ப போனை எடுக்காம இருக்கிறதால அவங்க மீது புகார் தரலாம்கிற முடிவுக்கு வந்திருக்கேன்’’ என்கிறார் இவர்.
















