ஐஸ்வர்யா ராய்: "பொறுத்துக்கொள்ள முடியாது" - விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு அபி...
BB Tamil Day 67: பாருவுக்கு சார்பாக அமித்; அடங்காத பாரு - கம்மு ஜோடி; 68வது நாளின் ஹைலைட்ஸ்!
பாரு எப்படியும் டாப்-5-ல் வருவார். ஏனெனில் அவர்தான் இந்த சீசனின் கன்டென்ட் கிங். ஆனால் அவரது திறமை முழுக்க நெகட்டிவிட்டியாகத்தான் இருக்கிறதே ஒழிய, துளி கூட கிரியேட்டிவிட்டி இல்லை.
காதல் சேட்டை, புறணி, பொறாமை, வஞ்சம், வன்மம், வேலை செய்யாமல் டபாய்த்தல் என்று பிக் பாஸிற்கு உரிய அனைத்து கல்யாண குணங்களும் இருக்கின்றன.

பாரு கம்மு ரொமான்ஸ் அலப்பறைகளை பிக் பாஸும் விசேவும் கண்டிப்பது போல் பாவனை மட்டுமே செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. அப்போதுதான் ‘ச்சே.. என்னப்பா இந்தப் பொண்ணு இப்படிப் பண்ணுது..’ என்கிற எரிச்சலில் பார்வையாளர்கள் தொடர்ந்து பார்ப்பார்கள். ‘bad publicity is better than no publicity’ என்றொரு பழமொழி இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 68
இன்னமும் மீதமிருக்கிற 9 வழக்குகளில் ஒரு வழக்கை மட்டுமே விசாரிக்க முடியும் என்கிற அறிவிப்பை வெளியிட்டார் பிக் பாஸ். அதில் பெரிய கேஸ் என்று பார்த்தால், பாரு -கம்மு ரொமான்ஸ் காரணமாக வீட்டார் தண்டனை அனுபவிப்பது. மற்றதெல்லாம் சில்லறை கேஸ்கள்.
எனவே அனைவருமே கோரஸாக இந்த வழக்கைத்தான் விசாரிக்க வேண்டும் என்று முட்டையை இழந்த எரிச்சலில் கத்தினார்கள். ‘ஏன் இந்த வன்மம் குழந்தைகளா?’ என்று சிணுங்கினார் பாரு.

‘புரோட்டின் இல்லாம நான் கஷ்டப்படறேன்’ என்று சான்ட்ரா சொல்ல ‘அடிப்பாவி.. நான் கூட பிரஜின் இல்லாமத்தான் கஷ்டப்படறேன்னு நெனச்சேன்’ என்று டைமிங்கில் ஜோக் அடித்தார் சபரி. மனிதருக்கு ரொமான்ஸ்தான் வரவில்லையே தவிர, எப்போதாவது ஜோக் அடிக்க வருகிறது.
சுபிக்ஷா, திவ்யா, சான்ட்ரா, ரம்யா ஆகியோர் இணைந்து தொடுத்த இந்தப் பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையெல்லாம் விசாரிக்க வேண்டாம். பாரு - கம்முவிற்கு எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லை. பிக் பாஸ் எத்தனையோ முறை கண்டித்தும் கூட இன்னமும் தேனிலவு தம்பதியினர் போலத்தான் சுற்றுகிறார்கள். அரோரா சொன்னது போல இது கண்றாவியான காதல் என்பதாகவே எரிச்சலைக் கிளப்புகிறது.
பாருவிற்கு சார்பாக மல்லுக்கட்டிய வக்கீல் அமித்
ஏறத்தாழ ஒட்டு மொத்த வீடும் பாரு-கம்முவிற்கு எதிராக இருக்கும் இந்த வழக்கில் அவர்களுக்குச் சார்பாக வாதிடுவது சிரமம். ஆனால் அமித் இதைச் சிறப்பாக எதிர்கொண்டார். ‘இது வேடிக்கையான வழக்கு. அவர்கள் செய்த தவறுக்கு வீட்டார் இணைந்து ஏற்கெனவே தண்டனை கொடுத்து அவர்களும் அந்தப் பணிகளை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார்கள். பிறகு ஏன் இதை பொதுவில் வர வேண்டும்? அவர்களை அவமானப்படுத்துவதான் நோக்கமா?” என்று சிறப்பான பாயிண்ட்டுகளை எடுத்து வைத்தார் அமித்.
ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், பாருவை வேலை செய்ய வைக்க தலையால் தண்ணீர் குடிப்பவரே அமித்தான். அந்த அளவிற்கு பாரு டபாய்க்கிறார். ஆனால் வக்கீல் என்பதால் பாருவிற்குச் சார்பாகப் பேச வேண்டிய துர்ப்பாக்கிய நிலை அமித்திற்கு. பாவம்.

"தட்டில இருந்த பாதி முட்டையைக் கூட பிடுங்கிட்டாங்க” என்று சுபிக்ஷா கண்கலங்க, “அப்ப உங்க மனநிலை எப்படி இருந்தது?” என்று நீயா நானா கோபிநாத் போல வாயைக் கிளறினார் சபரி.
அமித் திறமையாக பாயிண்ட்டுகளை எடுத்து வைத்தார் என்று சொன்னேன் அல்லவா? ஆனால் அதை ரப்பர் போட்டு அழிக்க வேண்டும் என்கிற அளவிற்குப் பிறகே அவரே சொதப்பினார். “ஏம்மா.. சுபிக்ஷா… ரவா கஞ்சி மட்டும் சாப்பிட்டு உங்களால இருக்க முடிஞ்சுதுல்ல. அப்புறம் பால் இல்லாம இருக்க முடியாதா?” என்று கேட்டது அபத்தம்.
“அது டாஸ்க்கிற்காக செஞ்சது. பிக் பாஸிற்காக செய்யலாம். பாருவின் ரொமான்ஸிற்கு நான் ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்?” என்று அமித்தை நோஸ் கட் செய்தார் சுபிக்ஷா.
‘மைக் மறைச்சுட்டு பைனான்ஸ் விஷயம் பேசினோம்’ - பாருவின் அந்தர்பல்டி
“என்னால காஃபி இல்லாம இருக்கவே முடியாது” என்று ரம்யா சிணுங்க, “ஏம்மா.. நீங்க இன்னமும் வாழ்ந்துட்டுதானே இருக்கீங்க?” என்று சொதப்பினார் அமித். “அப்ப அவங்களைச் சாகச் சொல்றீங்களா?” என்று டைமிங்கில் உள்ளே வந்தார் வினோத்.
"மைக்கை மூடி வெச்சுட்டு அப்படி என்னதாம்மா பேசுவீங்க?” என்று கேட்கப்பட்டதற்கு, பாரு சொன்னார் பாருங்கள் ஒரு விளக்கம். “நான் பர்சனல் மேட்டர்.. பணம் சம்பந்தப்பட்ட விஷயம்லாம் பேசுவேன்” என்று அப்பட்டமாகப் புளுகினார் பாரு.
“பிக் பாஸ் உள்ளே வரும்போது ஒரு அக்ரிமெண்ட் சைன் பண்ணியிருப்பீங்கள்ல.. இதையெல்லாம் பேசக்கூடாதுன்னு?” என்று நீதிபதி வியானா பாருவை மடக்க, சபையில் பலத்த கைத்தட்டல் கேட்டது.

“என்னால மத்தவங்களுக்கு தண்டனைன்னு தெரிஞ்சப்ப கண்ணீர் முட்டிக்கிச்சு. வீட்டார் கொடுத்த தண்டனையையும் ஏத்துக்கிட்டோம். ஆனா க்ரூப்பிஸம் பண்ணி நிறைய வேலை வாங்கறாங்க” என்று ஆகாசப் புளுகு புளுகினார் பாரு. (யப்பா... உலக நடிப்புடா சாமி!).
பாரு பொதுவில் இப்படி மழுப்பி பொய் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும். பார்வையாளர்களுக்கு நன்றாகவே தெரியும், பாரு என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என்று. எனில் ‘மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களே. அவர்களுக்குத் தெரியுமே.. இருந்தும் நாம் இப்படி அபாண்டமாகப் புளுகுகிறாேமே’ என்கிற பதட்டமோ குற்றவுணர்ச்சியோ பாருவிடம் துளி கூட இல்லை.
அது மட்டுமில்லை. இந்த வழக்கே பாருவும் கம்முவும் இணைந்து செய்த ரொமான்ஸ் சேட்டைகளின் மூலம் கிடைத்த தண்டனைக்காகத்தான். ஆனால் கோர்ட்டில் கூட இந்த ஜோடி ஒன்றாகவே அமர்ந்து நெருக்கமாக உரசிக் கொண்டு தொடர்ந்து ரகசியம் பேசிக் கொண்டிருந்த கொடுமையை என்னவென்று சொல்வது?
பிக் பாஸின் தண்டனை, வீட்டார் கண்டனம் - எதற்கும் அடங்காத பாரு - கம்மு ஜோடி
“இவங்க பேசிக்கிட்டே இருக்காங்க” என்று மற்றவர்கள் புகார் செய்த போது ‘தனியா வந்து உக்காருங்க பாரு’ என்று நீதிபதி சொன்னால் கூட பாரு அதற்குச் சம்மதிக்கவில்லை. ‘எங்களை யாரும் பிரிக்க முடியாது’ என்கிற மாதிரி அழிச்சாட்டியமாக அமர்ந்திருந்தார்.
“மத்தவங்க யாராவது இப்படி மைக்கை மறைச்சு பேசறதைப் பார்த்திருக்கீங்களா?” என்கிற கேள்வியை எழுப்புவதின் மூலம் பாருவிற்கு சப்போர்ட் செய்ய முயன்றார் அமித். “ஆமாம். அரோரா, துஷார் கிட்ட அப்படி பேசியிருக்கா” என்று பாரு சொல்ல, “அதனால்தான் துஷாரோட தல பதவி பறிக்கப்பட்டது" என்கிற பாயிண்டை சிறப்பாக ஞாபகப்படுத்தினார் வியானா.
கோர்ட்டிலேயே பாருவிற்கும் FJ-விற்கும் இடையில் அவ்வப்போது முட்டிக் கொண்டது. "அவங்கதான் பேசிட்டே இருக்காங்க” என்று ஸ்கூல் பிள்ளைகள் போல சண்டை போட்டுக் கொண்டார்கள். “குடும்பத்துல பேருக்கு மட்டும்தான் லாயர் போல” என்று முணுமுணுப்பாக கமெண்ட் அடித்தார் FJ. இதனால் கோபம் கொண்ட பாரு அதை ஆட்சேபிக்க, கோர்ட்டில் சலசலப்பு.

பாருவின் தந்தை வழக்கறிஞர் போல. இதைச் சுட்டிக் காட்டி FJ கிண்டலடித்ததால் பாருவிற்குக் கோபம் வந்தது நியாயம். “என் ஃபேமிலியையெல்லாம் இழுக்காத” என்று பிறகும் தனியாக வந்து ஆட்சேபித்தார் பாரு. ஆனால் ‘குடும்பத்திற்கே பால் ஊத்துவான் போல’ என்று FJவின் குடும்பம் பற்றி மிக மோசமாக பிரஜன் கமெண்ட் அடித்ததை வீக்கெண்ட் ஷோவில் அறிந்த FJ ஆத்திரப்பட்ட போது ‘ரொம்ப துள்றான் சார்’ என்று சொன்னவரும் இதே பாருதான்.
அதாவது தன் குடும்பம் பற்றி யாராவது சும்மா தொட்டு பேசினாலே ஆத்திரம் கொள்ளும் பாரு, FJ வின் குடும்பத்தினரின் இறப்பு அளவிற்கு ஒருவர் பேசும் போது அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி? அதேதான். தனக்கு வந்தால் ரத்தம்.
பாரு-கம்மு வழக்கு வரும் போதெல்லாம் இடைவேளை விட்டு விடுகிறார் பிக் பாஸ். இதன் மூலம் அவர்கள் இன்னமும் சுதாரித்துக் கொள்ள அவகாசம் தருகிறாரா என்று சந்தேகம் வருகிறது.

‘நான் ஒரு மொள்ளமாறி.. நான் ஒரு முடிச்சவிக்கி' - FJ - கம்மு சண்டை
இந்த பிரேக்கில் FJ-விற்கும் கம்ருதீனுக்கும் இடையில் பயங்கரமான சண்டை ஏற்பட்டது. “நீயும்தான் வியானா கூட மைக்கை மறைச்சு வெச்சு பேசியிருக்க. வாரா வாரம் ஒரு பொண்ணு கூட சுத்தறே” என்று கம்மு சொல்ல, “நான் எதையும் மறைச்சுப் பேசலை. ஓப்பனாத்தான் பேசறேன்” என்று FJ மல்லுக்கட்ட, “அதான் ஆதிரை கேஸ்ல தோத்து அசிங்கப்பட்டியே?” என்று கம்மு டிரிக்கர் செய்ய, “நான் ஜென்டில்மேனா மன்னிப்பு கேட்டேன். உங்களை மாதிரி தப்பு செஞ்சுட்டு ஒப்பேத்தலை” என்று FJ விடாமல் சண்டைக்கு வர, இருவரும் முட்டிக் கொள்ளும் அளவிற்கு நிலைமை போனது.
ஒரு கட்டத்தில் பாரு உள்ளே வர, அவரைப் போன்ற உடல்மொழியில், ‘ஸாரி.. ஸாரி’ என்று ஒழுங்கு காட்டிக் கொண்டே விலகிச் சென்றார் FJ. பாருவின் வாயில் இருந்து ஓர் ஆபாச வசவு வெளிப்பட்டது.
வழக்கு மீண்டும் தொடர்ந்தது. “எங்க ரெண்டு பேரையும் பேசக்கூடாதுன்னு நீங்க சொல்ல முடியாது. கம்யூனிகேஷனை கட் பண்ண உரிமை இல்லைன்னு பாரு சொன்னாங்க. ஆனா ஆடியன்ஸ் கூட கம்யூனிகேஷனை கட் பண்ண அவங்களுக்கும் உரிமை கிடையாது” என்று சரியான பாயிண்ட்டை வைத்தார் சபரி.
“அவங்க மனப்பூர்வமாக தங்களின் தவறை உணர்ந்து தண்டனையையும் ஏத்துக்கிட்டாங்க. வேலையை ஒழுங்கா செய்வாங்க.. அதுக்கு நான் கியாரண்டி” என்று தானாக வந்து தலையைக் கொடுத்தார் அமித். கோர்ட்டின் வெளியே பாருவை வேலை செய்ய வைக்க முடியாமல் அல்லாடப் போகிறவரும் அவர்தான்.

“ஒருத்தவன் நல்லவனா. கெட்டவனான்னு கண்டுபிடிக்கத்தான் இந்த கேம். இதுக்குப் பின்னாடி நூறு பேருக்கும் மேல வேலை செய்யறாங்க.. அதையெல்லாம் கெடுக்கறா மாதிரி ரெண்டு பேரும் நடந்திருக்காங்க. அதனால இந்த கேஸ் நால்வர் அணி சார்பா தீர்ப்பாகுது” என்று பாருவிற்கு எதிராக தீர்ப்பு கூறி வழக்கை முடித்து வைத்தார் வினோத்.
கோர்ட் வாசலில் ரொமான்ஸ் செய்த பாரு கம்ருதீன் - அடங்க மறு .. அத்து மீறு
அனைவரும் ஆக்ட்டிவிட்டி ஏரியாவை விட்டு வெளியே வரும் வரை காத்திருந்த பாரு, கம்முவை தனிப்பிரதேசத்திற்கு அழைத்து எதையோ செய்து கொண்டிருக்க, “ரெண்டு பேரும் வெளியே வாங்க” என்று பிக் பாஸ் எச்சரிக்க வேண்டியிருந்தது. (‘நாங்கள்லாம் கோாட்டிற்குள்ளேயே கொலை செய்வோம் மோமெண்ட்!). இத்துடன் கோர்ட் டாஸ்க் முடிந்தது.
பெஸ்ட் ஃபொ்பார்மர் தோ்வு இல்லாமல் நேரடியாக வொர்ஸ்ட் கேட்டகிரிக்கு சென்றார் பிக் பாஸ். (வீக்கெண்ட்டிற்காக இதை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் போல!) பெரும்பாலோனோர் ரம்யா பக்கம் கை காட்டினார்கள்.
“கேட்டையே தொறந்து வெச்சிட்டாங்க” என்று பாரு ஆரம்பிக்க, “அதை சொல்லாத. வேற எதையாச்சும் சொல்லு” என்று ஆத்திரமானார் ரம்யா.

இந்த வரிசையில் சான்ட்ராவின் பெயரை திவ்யா சொன்ன போதே தெரிந்து போயிற்று, சான்ட்ரா இது பற்றி அழுது புறணி பேசுவார் என்று. பிறகு அப்படியே நடந்தது. பாருவை அருகில் அமர்த்திக் கொண்டு சான்ட்ரா ஆத்திரத்துடன் புலம்பி மூக்கைச் சிந்த, ‘ஆமாக்கா.. இந்த திவ்யா இப்படித்தான். ஆளு எப்படின்னு இப்ப கரெக்ட்டா தெரிஞ்சுடுச்சு” என்று பின்பாட்டு பாடினார் பாரு.
உள்ளே வருவதற்கு முன்னால் பாருவின் அலப்பறைகள் பற்றி சான்ட்ராவிற்கு நன்றாகவே தெரியும். "என்னடி... இது வெளியிலிருந்து பார்க்கறத விட உள்ளே கொடூரமா இருக்கா?” என்று பாருவைப் பற்றி கமெண்ட் செய்ததும் இதே சான்ட்ராதான். ஆனால் இப்போது சான்ட்ராவின் நெருங்கிய தோழி யார் என்று பார்த்தால் அது பாரு. (என்ன கொடுமை பிரஜன்!).
திவ்யா - கம்ருதின் - போடா போடி - உக்கிரமான சண்டை
கார்டன் ஏரியாவில் மக்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். பெஸ்ட் ஃபர்பார்மர் ஏன் கேக்கலை?’ என்று பேச்சு ஆரம்பிக்க “திவ்யா மாதிரி தலயா யாராவது வந்து டார்ச்சர் பண்ணாம இருந்தா சரி” என்று கம்மு கமெண்ட் அடித்தார்.
தூரத்தில் இருந்து இதைக் கேட்டு விட்ட திவ்யா ஆவேசத்துடன் வந்து “ஒருத்தரை பத்தி ஒருத்தர் பேச வேணாம்ன்னு இருந்தோம்ல. ஏன் என் பெயரை இழுத்தீங்க” என்று கேட்க பதிலுக்கு கோபத்துடன் மல்லுக்கட்டிய கம்மு, ஒரு கட்டத்தில் ஸ்கூல் பையன் போல சேட்டைகள் செய்தார்.
கம்ருதீன் பேசிய பழைய வசவுகளையெல்லாம் நினைவுப்படுத்திய திவ்யா, ‘எப்படிப் பேசறாரு. பாருங்க. இதுதான் இவரோட அசல் முகம். யாருமே இதைக் கேட்க மாட்டீங்களா?” என்று அமித்தை இழுக்க ‘அய்யோ எனக்கும் கஷ்டமாத்தான் இருக்குது” என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டார் அமித். பேச்சுவாக்கில் ‘போடி’ என்று கம்மு சொல்ல, திவ்யாவின் உக்கிரம் அதிகமானது.

அமித் வந்து சமாதானம் பேச “அவனை வந்து மன்னிப்பு கேட்கச் சொல்லுங்க” என்றார் திவ்யா. வினோத் கம்முவை அழைத்து வர, மீண்டும் திவ்யா கத்த சமாதானத்திற்குப் பதில் சண்டை அதிகமானது. மீண்டும் போடா போடி வார்த்தைகள் விழுந்தன.
இந்தச் சண்டையின் போது திவ்யா அவமதிக்கப்படுவதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சான்ட்ரா. அதனாலும் கூட திவ்யாவிற்கு கோபம் அதிகமாகியிருக்கலாம்.
ஆரம்பத்தில் சில்லறை ரவுடி போல நடந்து கொண்ட கம்ருதீன், விசேவின் திட்டுகளுக்குப் பிறகு சற்று அடங்கி நடந்தார். அப்போது அரேரா கூட சகவாசம் இருந்தது. பிறகு பாருவின் பக்கம் ரொமான்ஸ் ‘ஓவர் ப்ளோ’ ஆகி சாய்ந்த பிறகு மீண்டும் ரவுடி அவதாரத்தை கையில் எடுத்திருக்கிறார். சகவாச தோஷம்.

திவ்யா மூச்சு விடாமல் கத்துவது ஒரு பக்கம் என்றால் ஒரு பெண்ணிடம் எப்படி பேசுவது என்கிற அடிப்படை நாகரிகம் கூட இல்லாமல் பொறுக்கித்தனமாக நடந்து கொள்கிற கம்ருதீனுக்கு இந்த வாரமாவது பலத்த கண்டனமோ அல்லது ரெட் கார்டோ கிடைக்குமா?


















