"நன்றி திருவனந்தபுரம்"- சிபிஎம் கோட்டையைக் கைப்பற்றிய பாஜக; வாழ்த்து தெரிவித்த ப...
BB 9: `ஹவுஸ் மேட்ஸூம், பிக் பாஸூம் தராத பிரைவசியை நான் தரேன்’ - பார்வதி, கம்ருதீனிடம் காட்டமான வி.சே
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 68 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக இருந்தார்.
மேலும் இந்த வாரம் 'வழக்காடு மன்றம்' டாஸ் பிக் பாஸ் வீட்டில் நடைப்பெற்றது.

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் வாரம் முழுவதும் மைக்கை சரியாக மாட்டாதக் காரணத்திற்காக பார்வதி, கம்ருதீன் இருவரையும் விஜய் சேதுபதி கோபமாக கேள்வி கேட்கிறார்.
"மக்கள் உங்க பேச்சக் கேட்க கூடாதுன்னு முடிவு எடுத்துட்டீங்க, அப்புறம் எதுக்கு உங்களுக்கு மைக். ஹவுஸ் மேட்ஸூம், பிக் பாஸூம் தராத பிரைவசியை நான் உங்களுக்கு தரேன்.

மத்தவங்க கஷ்டப்பட்டாலும் உங்களுக்கு பிரச்னை இல்ல. எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்ல. ப்ளீஸ் மைக்கை கழட்டிடுங்க" என்று விஜய் சேதுபதி கோபமாக பேசுகிறார்.



















