Messi Tour of India: "நிகழ்ச்சி திட்டமிடலில் AIFF ஈடுபடவில்லை" - இந்திய கால்பந்த...
Bigg Boss Tamil 9: பிக் பாஸ் வரலாற்றில் முதல் ட்ரிபிள் எவிக்ஷன்? - பரபரக்கும் வீக்எண்டு!
விஜய் டிவியில் அறுபது நாள்களைக் கடந்து விட்டது பிக்பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம்.
இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார்.
பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் வெளியேறினர். முதலில் எவிக்ஷன் மூலம் வெளியேறிய ஆதிரை பிறகு சர்ப்ரைஸ் என்ட்ரியாக மீண்டும் நிகழ்ச்சிக்குள் சென்றார்.

முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால் நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால் டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு என்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர்.
இவர்களில் பிரஜின் சென்ற வாரம் எவிக்ட் ஆகி வெளியில் வந்து விட்டார். சென்ற வாரமே பிரஜினுடன் எஃப் ஜே,வும் வெளியில் வருகிறார் என முதலில் தகவல் வெளியானது.
ஆனால் ஆதிரை திரும்பவும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததால் எஃப்.ஜே – ஆதிரை – வியானா என முக்கோண ரிலேசன்ஷிப்பில் கன்டென்ட் கிடைக்கும் என எதிர்பார்த்ததால் கடைசி நிமிடத்தில் அந்த முடிவை கை விட்டு விட்டார்கள் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த வாரம் எவிக்ஷனுக்கான ஷூட் இன்று காலை சென்னை பூந்தமல்லியில் இருக்கும் வேல்ஸ் ஃபிலிம் சிட்டியில் அமைந்துள்ள பிக்பாஸ் செட்டில் தொடங்கியது.
நாமினேஷன் பட்டியலில் ரம்யா, சாண்ட்ரா, வியானா, எஃப்.ஜே உள்ளிட்டோர் இருந்த நிலையில் இந்த வாரம் மூன்று பேர் வெளியேறலாம் என்ற ஒரு தகவல் நமக்குக் கிடைத்தது.
அதன்படி எஃப்.ஜே. ரம்யா, வியானா மூன்று பேருமே இந்த வாரம் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களில் ஒருவர் இன்றைய எபிசோடிலேயே கூட அனுப்பப் பட அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
மூன்று பேரும் வெளியேறும் பட்சத்தில் பிக்பாஸ் வரலாற்றில் முதல் ட்ரிபிள் எவிக்ஷன் எனச் சொல்லலாம்.!

















