செய்திகள் :

Karuppu: 'எனக்கும் தயாரிப்பாளருக்கும் சண்டைனு போடுறாங்க!' - 'கருப்பு' பட அப்டேட் தந்த ஆர்.ஜே. பாலாஜி

post image

சூர்யா, த்ரிஷா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் 'கருப்பு' படத்தின் ரிலீஸுக்காகத்தான் சூர்யா ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

ஆர்.ஜே.பாலாஜி எங்கு சென்றாலும், அவரை கருப்பு படத்தின் அப்டேட் தொடர்பான கேள்வியும் பின்தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

'கருப்பு' படத்தின் முதற்கட்டப் பணி, படப்பிடிப்பு, இறுதிக்கட்டப் பணி என இயக்குநர் ஆர்.ஜே.பி பிஸியாக இருந்ததனால் சமீப நாள்களாக கிரிக்கெட் வர்ணனையில் பெரிய அளவில் பங்கேற்கவில்லை.

சூர்யா - கருப்பு திரைப்படம்
சூர்யா - கருப்பு திரைப்படம்

பிறகு, டி20 உலகக் கோப்பை போட்டிக்காக மீண்டும் கமென்டரி பக்கம் வந்திருந்தார். நேற்றைய இறுதிப் போட்டியின் வர்ணனைப் பணிகளை முடித்துவிட்டு இன்று காலை சென்னை திரும்பியிருக்கிறார். தற்போது 'கருப்பு' திரைப்படம் தொடர்பாகப் பேசி ஒரு காணொளியையும் வெளியிட்டிருக்கிறார்.

ஆர். ஜே. பாலாஜி பேசுகையில், "உங்களுடைய அன்புக்கு ரொம்ப நன்றி. ரெண்டு வருஷம் கழிச்சு கிரிக்கெட் வர்ணனைனு இப்போதான் வெளில வர்றேன். மறுபடியும் இந்த வேலைக்கு வந்ததுக்குப் பிறகு அவ்வளவு லவ் கொடுத்திருக்கீங்க!

சமூக வலைதளங்களிலும், நேரிலும் வந்து பலரும் நேர்மறையான விஷயங்களைப் பேசுறாங்க. 'கருப்பு' படத்தோட வேலைகளை மறுபடியும் தொடங்குறோம். சூர்யா சார் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தோடு இருக்கீங்கனு எனக்குத் தெரியும். நீண்ட நாட்களாகக் காத்திருக்கீங்க.

நானும் ரெண்டு வருஷமா இந்தப் படத்துல வேலை பார்த்திட்டிருக்கேன். உங்களுடைய காத்திருப்பு வொர்த்தாக இருக்கும்.

கருப்பு திரைப்படம்
கருப்பு திரைப்படம்

இன்னும் நிறைய டைம் எடுத்துக்கிற ஐடியாவில் நான் இல்ல. இன்னும் 1 வாரம் அல்லது 10 நாட்களில் படம் ரிலீஸ் உள்ளிட்ட பல அப்டேட்களோடு உங்களை வந்து சந்திக்கப் போறோம்.

ஏப்ரல் 10 திரைப்படம் ரிலீஸ் கிடையாது. ரிலீஸ் தேதி மாதிரி, எனக்கும் தயாரிப்பாளருக்கும் சண்டை, நான் தயாரிப்பாளரை பொளந்து அடிக்கிறதுனு நிறைய விஷயங்களை அவங்களாகவே பேசிட்டு இருக்காங்க" எனச் சிரித்தவர், "நீண்ட நாள் காத்திருப்பு உங்களுக்கு கோபத்தைக் கொடுத்திருக்கும்னு எனக்குப் புரியுது.

நான் முழுமையாக அதை மதிக்கிறேன். சீக்கிரமாகவே அப்டேடோடு உங்களை மீட் பண்றேன். உங்களுக்கு இந்தப் படம் கண்டிப்பா பிடிக்கும்." எனப் பேசியிருக்கிறார்.

Jananayagan: 'உடல்நிலை சரியில்லை'; ரிவைசிங் கமிட்டி ஒத்திவைப்பு - தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'?

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் பொங்கல் வெளியீடாக திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தது, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். ஆனால், படத்திற்கு சென்சார் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்... மேலும் பார்க்க

"தரம் தாழ்ந்த சொற்கள் பேசுபவரையே வெளிச்சம் போட்டுக்காட்டும்"- நடிகரின் கருத்துக்கு த்ரிஷா கண்டனம்

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் த்ரிஷா குறித்து நடிகர் ஒருவர் பேசியது சர்ச்சையாகி இருந்தது. இந்நிலையில் த்ரிஷா அதற்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும... மேலும் பார்க்க

'சின்னத்திரையில் 3000 எபிசோடுகள் இயக்கியிருக்கிறேன், ஆனால்'- அங்கீகாரம் குறித்து சமுத்திரக்கனி

'zee5' ஓடிடி தளத்தில் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான சீரிஸ் ‘தடயம்’. நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ள ‘தடயம்’ சீரிஸில், சமுத்திரக்கனி எஸ்ஐ அதியமான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரு... மேலும் பார்க்க

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில் கடந்த ஆண்டு ‘பாரத் சேவா’ என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நேற்று (மார்ச்.7) சென்னையில் நடைபெற்றது... மேலும் பார்க்க

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ... மேலும் பார்க்க