செய்திகள் :

Kaziranga: தாயை பிரிந்து சாலையில் பரிதவித்த குட்டி யானை; கூட்டத்துடன் சேர்க்க வனத்துறை செய்த மேஜிக்!

post image

பாட்டி யானை என்றழைக்கப்படும் மூத்த பெண் யானைகள் மூலமே ஒவ்வொரு யானை குடும்பமும் வழிநடத்தப்படுவதுடன், மத யானைகள் நீங்கலாக குட்டிகளுடன் மொத்த குடும்பத்தையும் பாட்டி யானைகளே வலசை அழைத்துச் சென்று பாதுகாப்பு அளிப்பதை ஆய்வுகள் நமக்கு தெரிவிக்கின்றன. பச்சிளம் குட்டிகள் மீது தாய் யானை மட்டுமின்றி மொத்த குடும்பமும் அதீத பாசத்துடனும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து எச்சரிக்கை உணர்வுடன் கவனித்து வருவதையும் காண முடியும்.

தாயை பிரிந்த யானை குட்டி

ஆனால், அதையும் மீறி சில சமயங்களில் குட்டிகள் தாயையும், தம் குடும்பத்தையும் விட்டுப் பிரியும் துயரம் நேர்கிறது. வேதனையான இந்த சூழலில் களமிறங்கும் வனத்துறை, எப்படியாவது குட்டிகளை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியைப் போராடி மேற்கொள்கின்றனர். மிகவும் சவாலான அந்தப் பணி சில நேரங்களில் வெற்றியடைகிறது. பல நேரங்களில் தோல்வியடைந்து முகாம் யானைகளாக மாறும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவின் புகழ்பெற்ற தேசிய பூங்காக்களில் ஒன்றான காசிரங்கா தேசிய பூங்காவில் தாயைப் பிரிந்து சாலையில் பரிதவித்துக் கொண்டிருந்த பச்சிளம் யானை குட்டியை மீண்டும் தாயுடன் சேர்க்க வனத்துறை மேற்கொண்ட ஸ்மார்ட் வொர்க் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அசாம் மாநிலம், காசிரங்கா தேசிய பூங்காவில் தாயைப் பிரிந்து சாலையில் பரிதவித்து வந்த யானை குட்டியை மீட்ட வனத்துறையினர், அதன் குடும்பம் நடமாடும் பகுதியைக் கண்டறிந்துள்ளனர்.‌ அந்த கூட்டத்தில் பாலூட்டும் பருவத்தில் தாய் யானைகள் சில இருந்தாலும் குட்டியில்லாமல் தவித்த குறிப்பிட்ட அந்த யானையை குறிப்பிட்ட சில அறிகுறிகள் மூலம் கண்டறிந்து நெருக்கமாக கண்காணித்து வந்துள்ளனர்.

தாயை பிரிந்த யானை குட்டி

குட்டியின் தாய் யானை எது என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்த வனத்துறையினர், மனித வாடையைப் போக்கும் விதமாக அந்த தாய் யானையின் சாணத்தை குட்டியின் மீது பூசி காட்டிற்குள் அனுப்பி வைத்திருக்கிறார்கள். மாயம் நிகழ்ந்தைப்போல் அடுத்த சில நிமிடங்களில் தாய் யானை வந்து குட்டியை அழைத்துச் சென்றிருக்கிறது. தாயையும் அதன் காட்டையும் மீண்டும் ஒப்படைத்த வனத்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Birds: அழிவின் விளிம்பில் 500 பறவை இனங்கள்; ஆராய்ச்சியில் அதிர்ச்சி முடிவுகள்; காரணம் என்ன?

காலநிலை மாற்றம் மற்றும் வாழ்விட இழப்பு போன்ற காரணங்களால் அடுத்த நூற்றாண்டுக்குள் 500-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அழிவின் விளிம்பில் தள்ளப்படும் என்று இங்கிலாந்து நாட்டின் ரீடிங் பல்கலைக்கழக (Universi... மேலும் பார்க்க

மலப்புரம்: 53 நாள் தேடல், கூண்டுக்குள் சிக்கிய ஆக்ரோஷ புலி; சுட்டுக்கொல்ல போராடும் மக்கள் ஏன்?

கேரள மாநிலத்தில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் மாவட்டங்களின் பட்டியலில் மலப்புரமும் இடம்பெற்றிருக்கிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சிப்‌ பணிகளால் வனவிலங்குகளின் வாழிட... மேலும் பார்க்க

கடல் போல் காட்சியளிக்கும் பவானி கூடுதுறை; காவிரி - பவானி சங்கமத்தின் அழகிய காட்சி! | Photo Album

காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை காவிரி - பாவனி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை ... மேலும் பார்க்க

Hogenakkal: ஆர்ப்பரித்து கொட்டும் ஒகேனக்கல் அருவி! - Drone visuals

ஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிகள்ஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓகனேக்கல் அருவிஓக... மேலும் பார்க்க

மதகுகள் வழியாக சீறி பாயும் நீர்; பிரம்மிப்பூட்டும் மேட்டூர் அணை - சிறப்பு புகைப்பட ஆல்பம்!

மேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணைமேட்டூர் அணை மேலும் பார்க்க

பழிவாங்குமா கதண்டுகள்; ஏன் கடிக்கின்றன; கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்? | InDepth

'கதண்டு கடித்து பலி' என்கிற செய்தி அடிக்கடி நம் கண்களில் பட்டுக்கொண்டே இருக்கிறது. சில தினங்களுக்கு முன்னால்கூட திருநெல்வேலியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் கதண்டு கடித்து உயிரிழந்துவிட்டான். கதண்டு பற்றிய... மேலும் பார்க்க