செய்திகள் :

KYV முடிக்காமல், Fastag பயன்படுத்துவதில் சிக்கலா? இனி கவலை வேண்டாம்; NHAI-ன் புதிய மாற்றங்கள் இதோ!

post image

KYV முடிக்காதவர்களுக்கு ஃபாஸ்ட் டேக் சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்தச் சிக்கல்களைக் களையும் விதமாக, ஃபாஸ்ட் டேக் நடைமுறையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது தேசிய நெடுஞ்சாலைத் துறை.

> இதுவரை வாகனங்களுக்கு KYV (Know Your Vehicle) நடைமுறையை முடிக்கவில்லை என்றால், ஃபாஸ்ட் டேக்கை பயன்படுத்த முடியாது... அதன் செயல்பாடு நிறுத்தப்படும்.

ஆனால், இனி அப்படியில்லை KYV-ஐ முடிக்கவில்லை என்றாலும், ஃபாஸ்ட் டேக் பயன்பாட்டில் இருக்கும். அதை அப்டேட் செய்வதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்படும்.

நெடுஞ்சாலை
நெடுஞ்சாலை

> KYV நடைமுறையின் போது, வாகனத்தின் பல கோண புகைப்படங்களை அப்லோடு செய்ய வேண்டும் என்பதில்லை. வாகனத்தின் நம்பர் பிளேட், ஃபாஸ்ட் டேக் தெரிவது போன்ற, வாகனத்தின் முன்பக்க போட்டோ மட்டும் அப்லோடு செய்தால் போதுமானது.

> இந்த நடைமுறை Vahan என்கிற தேசிய வாகன தரவுகளிலும் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், KYV நடைமுறையின் போது, வாகனத்தின் எண், சேசிஸ் எண் அல்லது மொபைல் எண்ணை நிரப்பினாலே, தானாக ஆர்.சி வந்துவிடும். அதை சரிபார்த்தால் மட்டும் போதுமானது.

> ஒரே மொபைல் எண்ணில் பல வாகனங்கள் இணைக்கப்பட்டிருந்தாலும், KYV நடைமுறையின் போது, குறிப்பிட்ட வாகனத்தை மட்டும் தேர்ந்தெடுத்து கொள்ள முடியும்.

> KYV நடைமுறைக்கு முன்பு, ஃபாஸ்ட் டேக் பெற்றவர்கள் தொடர்ந்து அதே ஃபாஸ்ட் டேக்கை பயன்படுத்தலாம். தவறாக பயன்படுத்தப்பட்டாலும், வங்கிகள் ஏதேனும் புகார்களைப் பெற்றாலும் தான், அந்த ஃபாஸ்ட் டேக் சேவை ரத்து செய்யப்படும்.

> KYV நடைமுறைகளில் ஏதேனும் சிக்கலை சந்தித்தால், வங்கிகள் பயனாளர்களுக்கு இந்த நடைமுறைகளில் உதவலாம்.

> KYV முடிக்கவில்லை என்றாலும், உங்களது ஃபாஸ்ட் டேக்குகள் பயன்படுத்தப்படும் போது, உங்கள் மொபைல் எண்ணிற்கு மெசேஜ்கள் வரும்.

`இனி ரயில்களில் Lower Berth இவர்களுக்குத்தான் கிடைக்கும்' - ரயில்வேயின் புதிய அறிவிப்பு

இந்திய ரயில்வே நிர்வாகம் லோயர் பெர்த்களுக்கான புதிய விதிமுறைகளை இப்போது வெளியிட்டுள்ளது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம். லோயர் பெர்த் யாருக்கு கிடைக்கும்?பெரும்பாலும் லோயர் பெர்த்கள் அதிகம் தேர்ந்தெட... மேலும் பார்க்க

`90 நாள்களுக்கு கறுப்பு நிற உடைகளை அணியுங்கள்' - தாய்லாந்து அரசு பரிந்துரை

தாய்லாந்து, இந்திய சுற்றுலா பயணிகளுக்கு பிரியமான இடமாக திகழ்ந்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி தாய்லாந்தின் முன்னாள் ராணி சிரிகித் 93 வயதில் உயிரிழந்தார். இதனையடுத்து 30 நாள்கள் தேசிய ... மேலும் பார்க்க

பட்ஜெட்டில் உலகைச் சுற்றலாம்: இந்தியர்களுக்கான மலிவான சர்வதேச சுற்றுலாத் தலங்கள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Liechtenstein: விமான நிலையம், நாணயம் இல்லாத சிறிய நாடு; பணக்கார நாடுகளில் ஒன்றாக இருப்பது எப்படி?

ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் வலிமையை அதன் பரந்த நிலப்பரப்பு, ராணுவ பலம், சொந்த நாணயம் மற்றும் சர்வதேச விமான நிலையங்களைக் கொண்டு அளவிடுவது வழக்கம். ஆனால், சுவிட்சர்லாந்துக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையி... மேலும் பார்க்க

ஊட்டி மலை ரயில் சேவை ரத்து - என்ன காரணம்?

கனமழை காரணமாக நீலகிரி மலைப்பாதையில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் பாதையில் கடந்த மூன்று நாட்களாக பாறைகள் சரிந்து விழுந்ததால், மலை ரயில் சேவை முழுமைய... மேலும் பார்க்க

Camping: ரூ.1,500தான்.. பிச்சாவரம், ஏலகிரி... 'கேம்பிங்' - நியூ இயருக்கு இப்போவே பிளான் பண்ணுங்க!

இன்னும் இரண்டு மாதங்களில் கிறிஸ்துமஸ், நியூ இயர் விடுமுறைகள் வரப்போகின்றன. அதற்கு இப்போதிருந்தே பிளான் பண்ணத் தொடங்கியிருப்பீர்கள். அந்த விடுமுறையைக் கொண்டாட வெளிநாடு, வெளிமாநிலத்திற்குத்தான் போக வேண்... மேலும் பார்க்க