'அரசியல் லாபத்துக்காக ஐயப்ப சுவாமி பெயரை பயன்படுத்துவதா?'- திருவாபரண பாதை பாதுகா...
Mark: "வளர்ச்சி அடைந்தால் சில பிரச்னைகள் வரும்னு கேள்விப்பட்டிருக்கேன்; இப்போ.!" - யோகி பாபு
கிச்சா சுதீப்பின் 'மார்க்' திரைப்படம் இம்மாதம் கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்கு வருகிறது.
இயக்குநர் விஜய் கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படத்தில் நவீன் சந்திரா, யோகி பாபு ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு படம் குறித்தான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் யோகி பாபு ப்ரோமோஷன்களில் பங்கேற்பது குறித்தும், அவர் சந்திக்கும் பிரச்னைகள் தொடர்பாகவும் பேசியிருக்கிறார்.

யோகி பாபு குறித்து நடிகர் கிச்சா சுதீப், "யோகி பாபு சாருக்கு ஒரு கால் இங்க இருக்கு. இன்னொரு கால் வேற செட்ல இருக்கும். எங்க படப்பிடிப்பு தளத்தில ரொம்ப பிஸியான நடிகர் அவர்தான்.
அவர் இன்ஸ்டால்மெண்ட்ல படப்பிடிப்பு தளத்துக்கு வருவாரு. நீங்க ஒரு வண்டி வாங்கினால், அதற்கான பணத்தைத்தான் நீங்க இன்ஸ்டால்மெண்ட்லதானே கட்டணும்.
ஆனா, யோகி பாபு இன்ஸ்டால்மெண்ட் முறையிலதான் படப்பிடிப்பு தளத்துக்கு வர்றாரு. நாங்க ஷூட் முடிச்சிட்டு கிளம்பினதுக்குப் பிறகு இயக்குநர் யோகி சார் வந்திருக்கார்னு நடிக்கக் கூப்பிடுவார்கள்.
நான் காத்திருந்தாலும், அதற்கான விஷயங்கள் அவர்கிட்ட இருக்கு." என்றார்.
யோகி பாபுவிடம் செய்தியாளர் ஒருவர், "படங்களின் ப்ரோமோஷனுக்கு நீங்க சரியாக வருவதில்லைனு சொல்றாங்களே.." எனக் கேள்வி எழுப்பினார். பதில் தந்த யோகி பாபு, "அந்தப் படக்குழுவினரைக் கூட்டிட்டு வாங்க நான் உங்க கேள்விக்கு நான் பதில் சொல்றேன்.

இந்த 'மார்க்' படத்துல என்ன விஷயங்கள் செய்திருக்கோம் என்பதைப் பத்தி இங்க நம்ம பேசுவோம். சத்யஜோதி நிறுவனத்திடம் நான் ஆரம்பத்துல இருந்து வாய்ப்புகள் கேட்டிருக்கேன். அவங்க குடும்பத்துல ஒருவனாகத்தான் நான் இருக்கேன்.
அவங்க சொல்ற நேரத்துக்கு நாங்களும் வந்திடுவோம். இது மாதிரி தயாரிப்பாளர்களுக்கு நாங்க சப்போர்ட்தான் பண்ணிட்டு இருக்கோம்." என்றவர், "சினிமாவுக்கு வந்து 22 வருடங்கள் ஆகிடுச்சு.
வளர்ச்சி அடைந்தால் சில பிரச்னைகள் வரும்னு கேள்விப்பட்டிருக்கேன். அந்தப் பிரச்னைகள் என்னுடைய லைஃப்ல வரும்போது நான் கொஞ்சம் வளர்ச்சி அடைந்திருக்கேன்னு நினைக்கிறேன்." எனப் பேசினார்.




















