செய்திகள் :

Mask: ``வெற்றிமாறன் சார் இல்லாமல் எதுவும் நடந்திருக்காது'' - ஆண்ட்ரியா

post image

கவின் நடிப்பில் அறிமுக இயக்குநர் விக்கர்னன் இயக்கியுள்ள மாஸ்க் படத்தின் இசை வெளியீட்டு விழா நவ. 7 அன்று நடைபெற்றது.

வெற்றிமாறன் வழங்கும் இந்த படத்தை ஆண்ட்ரியா மற்றும் எஸ்.பி சொக்கலிங்கம் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் நடிகையாகவும் மிக முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றுளார் ஆண்ட்ரியா.

"ஜிவியின் ஃபன்னான ஆல்பம் இதுதான்" - Andrea

MASK

இசைவெளியீட்டு விழாவில் பேசிய ஆண்ட்ரியா, "நான் ஆடியோ லான்ச்சில் கலந்துகொண்டு ரொம்ப நாள் ஆகிட்டு. தமிழில் பெரிய ஸ்கிரீன் ரிலீஸ் இல்லை.

இந்த படம் கவினுக்கு அவரது கேரியரில் முக்கியமான திரைப்படம். ருஹானிக்கு தமிழில் அறிமுகப்படம், விக்கர்னனுக்கும் முதல் படம்.  சொக்கலிங்கம் சாருக்கு தயாரிப்பாளரா முதல்படம். உங்கள் ஆசியோடு இது பெரிய வெற்றிபெற வேண்டும்.

இது எதுவும் வெற்றிமாறன் சார் இல்லாமல் நடந்திருக்காது. அவர்தான் பெரிய மாஸ்டர் மாதிரி, நாங்கள் எல்லாம் அவருடைய பப்பெட்ஸ். எல்லாவற்றுக்கும் நன்றி சார். 

MASK Team
MASK Team

ஜிவி சொன்ன மாதிரி எங்களுக்கு நீண்டகால தொடர்பு இருக்கு. அவர் சமீபத்தில் பண்ணியதிலேயே ஃபன்னான ஆல்பம் இதுதான். இது யூத்தோட கனக்ட் ஆகும். நவம்பர் 21ம் தேதி வெளியாகுற படம் வெற்றிபெறணும்னு எல்லாருடைய ஆசியையும் வேண்டிக்கிறேன்" எனப் பேசினார்.

Mask: "ஆடுகளம் தனுஷ்தான் வெற்றி சார்; நான் அவர் கையில் இருக்கும் சேவல்" - கவின்

கவின் நடிப்பில் அறிமுக இயக்குநர் விக்கர்னன் இயக்கியுள்ள மாஸ்க் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. வெற்றிமாறன் வழங்கும் இந்த படத்தை ஆண்ட்ரியா மற்றும் எஸ்.பி சொக்கலிங்கம் இணைந்து தயாரித்துள்ளனர். ... மேலும் பார்க்க

MASK: 'அரசன் அப்டேட், நெல்சன் - கவின் ரிலேஷன்ஷிப்’ - வெற்றிமாறன் பேச்சு!

கவின், ருஹானி சர்மா நடிப்பில் அறிமுக இயக்குநர் விக்கர்னன் இயக்கியுள்ள மாஸ்க் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. வெற்றிமாறன் வழங்கும் இந்த படத்தை ஆண்ட்ரியா மற்றும் எஸ்.பி சொக்கலிங்கம் இணைந்து தயா... மேலும் பார்க்க

Mask: "ஆண்ட்ரியா எங்க ஸ்கூல் கல்சுரல்ஸ்லயே ஃபேமஸ்" - ஜிவி பிரகாஷ் பேச்சு

கவின் நடிப்பில் விக்கர்னன் இயக்கியுள்ள மாஸ்க் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. வெற்றிமாறன் வழங்கும் இந்த படத்தை ஆண்ட்ரியா மற்றும் எஸ்.பி சொக்கலிங்கம் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் இசை... மேலும் பார்க்க

Mask: "வெற்றி மாறன் சாரை ஏமாற்றியது பெரிய விஷயம்" - நெல்சன் கலகல பேச்சு

கவின் நடிப்பில் விகர்னன் அசோக் இயக்கியுள்ள மாஸ்க் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் நடிகர் கவினை மனதார பராட்டிப் பேசினார். அவர், "மாஸ்க் ஐடியா பேசும்போ... மேலும் பார்க்க

டாப் ஹீரோக்களுக்கு வருவாயில் பங்கு மட்டுமே; யூடியூப் சேனல்களுக்கு எதிராக நடவடிக்கை - TFPC முடிவுகள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் (TFPC), பெரிய பட்ஜெட் படங்களில் நாயகன் மற்றும் முக்கிய படக்குழு உறுப்பினர்கள் வருவாய் பகிர்வு முறையில் மட்டுமே பணியாற்ற வேண்டுமென்றும் திரைப்படத்திலிருந்து வரும் லாப... மேலும் பார்க்க