செய்திகள் :

Microsoft: இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு; சத்யா நாதெல்லாவின் அறிவிப்பும் மோடியின் பதிலும்

post image

இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு செய்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகளாவிய பெருநிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்திருக்கின்றன.

சமீபத்தில் இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பங்களிக்கும் அடுத்த கட்ட பாய்ச்சலாக, சுமார் ₹1.25 லட்சம் கோடி ($15 Billion) வரை முதலீட்டில் கூகுளின் 'Google AI hub data centre'-ஐ ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் கட்டமைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதைத்தொடர்ந்து தெலங்கானா அரசும் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய முதலீடுகளைக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறது. 30,000 ஏக்கர் பரப்பளவில் தொழில்நுட்பத்தில் மிகவும் மேம்பட்ட 'பாரத் ஃபியூச்சர் சிட்டி' ஹைதராபாத்தில் அமையவிருக்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனம்
மைக்ரோசாப்ட் நிறுவனம்

இந்த வரிசையில் இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கான கட்டமைப்பு, திறன் மேம்பாட்டிற்கான முதலீடு ஆகியவற்றில் ரூ.1.57 லட்சம் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. ஆசியாவிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடு இதுதான் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்திய வம்சாவளியும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சத்யா நாதெல்லா, "இந்தியாவின் AI வளர்ச்சி குறித்த ஊக்கமளிக்கும் உரையாடலுக்காக பிரதமர் மோடி அவர்களுக்கு எனது நன்றிகள்.

மைக்ரோசாப்ட் ஆசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீடாக 17.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவின் AI முதல் எதிர்காலத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு, திறன்களை உருவாக்கவிருக்கிறது" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதற்கு பிரதமர் மோடி, "செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை, இந்தியா மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. சத்யா நாதெல்லாவுடன் மிகவும் பயனுள்ள கலந்துரையாடல் நடந்தது. ஆசியாவிலேயே மைக்ரோசாப்ட் தனது மிகப்பெரிய முதலீட்டைச் செய்யும் இடமாக இந்தியா இருப்பதைக் காண்பதில் மகிழ்ச்சி.

செயற்கை நுண்ணறிவின் சக்தியைப் புதுமைப்படுத்தவும் பயன்படுத்தவும் இந்திய இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்கள்" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்த மைக்ரோசாப்ட்டின் மிகப்பெரிய முதலீடு இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமையப்போகிறது என்பது குறித்தான அறிவிப்புகள் விரைவில் வரும் என்று கூறப்படுகிறது.

'Cloudflare'-ன் சேவையில் திடீர் துண்டிப்பு; அச்சத்தில் ஆடிய நிதி நிறுவனங்கள்; என்னதான் பிரச்னை?

உலகெங்கும் இருக்கும் பல மில்லியன் நிறுவனங்களின் இணையதளங்கள் பாதுகாப்பாகவும், வேகமாகவும் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் முன்னணி கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க்கான 'Cloudflare'-ன் சேவையில் இன்று காலை 1... மேலும் பார்க்க

``இந்தியாவின் 2-வது ஏஐ டீச்சிங் அசிஸ்டன்ட்'' -துணிக்கடை பொம்மையில் அரசு பள்ளி மாணவர் சாதனை

உலகில் ஒரு மூளைமுடுக்கு எங்கும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ).அதற்கேற்ப, ஏஐ-ன் நன்மைகளையும் அதன் பயன்பாடுகளையும் புரிந்துகொண்டு, பல்வேறு கண்டுபிடிப்புகளை ஆர்வத... மேலும் பார்க்க

Sanchar Saathi App: சுற்றும் சர்ச்சைகள்; அந்த ஆப்பில் அப்படி என்ன இருக்கிறது?

> இனி உற்பத்தி ஆகும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் அரசின் சைபர் பாதுகாப்பு ஆப்பான 'சஞ்சார் சாத்தி' கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். > இந்த ஆப்பை பயனாளர்கள் அன்இன்ஸ்டாலோ, டிஸ்ஏபிளோ செய்ய முடியாத... மேலும் பார்க்க

WhatsApp: புதிய கெடுபிடி; 'இதை' செஞ்சுடுங்க மக்களே! - மத்திய அரசின் அதிரடி

வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல், அரட்டை, ஸ்நாப்சாட், ஷேர்சாட் உள்ளிட்ட ஆப்கள் பயன்பாட்டிற்கு புதிய கெடுபிடிகளை விதித்துள்ளது மத்திய அரசு. அவை என்ன? > இந்த ஆப்களை எந்த மொபைல் போன் நம்பரில் இயக்குகிறோ... மேலும் பார்க்க

Fei-Fei Li: நிறுவனம் ஆரம்பித்த ஓரே ஆண்டில் ஒரு பில்லியன் டாலர்! - யார் இந்த AI உலகின் `ராஜமாதா'?

எங்கும் ஏஐ... எதிலும் ஏஐ... என தற்போது ஏஐ துறை அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. அந்தத் துறையில் முக்கியமான ஒருவர் தான் ஏஐ துறையின் 'ராஜமாதா' என்று அழைக்கப்படும் ஃபெய் - ஃபெய் லி. யார் இந்த ஃபெய் - ஃபெய் ... மேலும் பார்க்க