செய்திகள் :

Naravane: பரபரப்பைக் கிளப்பும் 'Four Stars of Destiny'; நாரவனேயின் 'ஒற்றை' வாக்கிய பதில் என்ன?

post image

இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் நாரவனேயின் புத்தகம் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி'. இந்தப் புத்தகம்தான் கடந்த வாரத்தில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைப் பரபரப்பாக்கி வருகிறது.

இந்தப் புத்தகத்தில் 2020-ம் ஆண்டு நடந்த இந்தியா - சீனா தாக்குதலில் இந்திய அரசு ராணுவத்துடன் ஒத்துழைக்காதது குறித்து குறிப்பிட்டிருக்கிறார் நாரவனே.

இதை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி படிக்க முயன்றபோது, நாடாளுமன்றத்தில் அமளிதுமளியானது.

இதையடுத்து இந்தப் புத்தகம் இந்தியா முழுவதும் கவனத்தைப் பெற்றது.

Four Stars of Destiny
Four Stars of Destiny

பென்குயின் நிறுவனத்தின் பதில்

இந்தப் புத்தகம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அதன் நகல்கள் ஆன்லைனில் சுற்றி வருகின்றன.

இது குறித்து இந்தப் புத்தகத்தின் உரிமையை வைத்திருக்கும் பென்குயின் இந்தியா நிறுவனம், "நாங்கள் இந்தப் புத்தகத்தை எந்த வகையிலும் வெளியிடவில்லை. இந்தப் புத்தகத்தை வெளியிடும் உரிமையும் எங்களிடம்தான் இருக்கிறது" என்று தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

நாரவனே 'ஒற்றை' பதில்

இந்தப் புத்தகம் பரபரப்பாகப் பேசப்படத் தொடங்கியதில் இருந்து ஜெனரல் நாரவனே எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஆனால், நேற்று பென்குயின் நிறுவனத்தின் பதிவை ஷேர் செய்து, 'இதுதான் இந்தப் புத்தகத்தின் ஸ்டேட்டஸ்' என்று பதிவிட்டுள்ளார். இதற்கு மேல், அந்தப் புத்தகத்தைச் சுற்றி நடக்கும் எந்தவொரு விஷயத்திற்கும் அவர் பதிலளிக்கவில்லை.

``இந்தியாவை விற்க வெட்கமாக இல்லையா?" - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்ட `3' செய்திகள்!

இந்தியா அமெரிக்கா இடையே நடந்த முடிந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து பல்வேறு சலசலப்புகள் நீடித்துவரும் நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பிரதமர் மோடி தலைம... மேலும் பார்க்க

பாமகவுக்கு அடித்தளம் அமைத்த வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் | ‘வாவ்’ வியூகம் 05

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்‘வாவ்’ வியூகம் 5வன்னியர்களுக்கு சமூக நீதியை வென்றெடுப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களை `சுருக்கமாக, விரைவாக' என்று எந்த வடிவில் புரட்டிப் பார்த்தாலும் அதில் ராமதாஸை எள்ள... மேலும் பார்க்க

புதுச்சேரியில் நாளை பந்த்! ஸ்தம்பிக்கப்போகும் `பிரெஞ்சு சிட்டி’ - தொழிற்சங்கங்கள் போர்க்கொடி

மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்திருக்கும் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. ... மேலும் பார்க்க

`கூட்டணி ஆட்சியா ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்!' - ஸ்டாலினுக்கு காங்கிரஸ் பதிலடி

'India Today' ஊடகத்தின் கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டிருந்தார்.அவரிடம் காங்கிரஸ் கட்சி உடனானக் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், "ஆட்சியில் பங்க... மேலும் பார்க்க

"தவெகவினர் மீது நாங்கள் தாக்குதல் நடத்தினோமா? நடந்தது இதுதான்"- அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

துறைமுகம் தொகுதியில் கருத்துக்கணிப்புக்காக சென்ற தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்டிருந்தனர். இந்த தாக்குதலில் அமைச்சர் சேகர்பாபுவின் ஆதரவாளர்கள்தான் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதனிடையே... மேலும் பார்க்க

'நேரு தவிர்த்ததையும் சேர்த்து' - வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும்? - மத்திய அரசின் நெறிமுறைகள்!

வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு இது.இதையொட்டி, வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும் என்கிற வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். > 'மதச்சார்ப்பற்ற தேசம்' என்று முன்னாள் பிர... மேலும் பார்க்க