செய்திகள் :

Pradeep Ranganathan: தயாரிப்பாளராகும் பிரதீப் ரங்கநாதன்; சப்ரைஸ் நடிகர்கள் லிஸ்ட் - அப்டேட்!

post image

'லவ் டுடே', 'டிராகன்', 'டியூட்' ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு முன்னணி நட்சத்திரமாகவே வளர்ந்துவிட்டார் பிரதீப் ரங்கநாதன்.

தற்போது அவர் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். அவருடைய தயாரிப்பு நிறுவனத்திற்குப் 'பி. ஆர். ஷோ' எனப் பெயரிட்டிருக்கிறார்.

Mamitha Baiju - PRS 1
Mamitha Baiju - PRS 1

அவருடைய தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் அறிவிப்பும் தற்போது வெளியாகியிருக்கிறது.

ஒருவர் இல்லாமல் மொத்தமாக 6 பேர் இணைந்து 'தி ஆல்ஃபா யூனிட்' என்கிற பெயரில் இப்படத்தை இயக்குகிறார்கள். பிரதீப் ரங்கநாதனின் கதையை இவர்கள் இணைந்து இயக்குகிறார்கள்.

'டியூட்' படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருந்தார். அப்படத்திற்குப் பிறகு மமிதா பைஜூ, பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

பிரதீப் ரங்கநாதனின் நண்பரும் இயக்குநருமான அஸ்வத் மாரிமுத்து இப்படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'டிராகன்' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தவர், தற்போது ரஜினியின் 'தர்மன்' படத்தை இயக்கி வருகிறார்.

Ashwath Marimuthu - PRS 1
Ashwath Marimuthu - PRS 1

இவர்களோடு, ஸ்வாசிகா, 'கோர்ட்' படத்தின் மூலம் பரிச்சயமான சிவாஜி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். அவர் இசையில் உருவாகியிருக்கும் 'ஆனே வாலே ஸ்டார்' என்கிற தீம் பாடலுடன் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

கருணாஸ் தயாரிப்பில் கென் கருணாஸ்; வெற்றிப்பட இயக்குநருடன் இணையும் கென்! | Exclusive Update

'யூத்' படத்தின் மூலம் இயக்குநராக, ஹீரோவாக கவனம் ஈர்த்தவர் கென் கருணாஸ். அந்தப் படத்தை அடுத்து சத்தமில்லாமல் வெற்றிமாறனின் இயக்கத்தில் 'ராஜன் வகையறா'வில் நடித்து வருகிறார். காதலும், ஃபேமிலி சென்டிமென்ட... மேலும் பார்க்க

காக்க காக்க : காவலின் காதல்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 07

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது`சினி'ஸ்கோப்தொடர்!`சினி'ஸ்கோப் 07காக்க காக்க : காவலின் காதல்!கேங்ஸ்டர் சேது செங்கல்பட்டு ரயில்வே ... மேலும் பார்க்க

அன்பே டயானா: "படத்தின் கடைசி 20 நிமிடம், தமிழ் சினிமாவின் பெஸ்ட்டான..!" இயக்குநர் ராம் பாராட்டு

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'அன்பே டயானா'. இந்தப் படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த ... மேலும் பார்க்க

Arasan: ஸ்லிமான சிலம்பரசன், ஈ.சி.ஆரில் பிரமாண்ட வடசென்னை செட்; மீண்டும் ரெடியாகும் 'அரசன்'- அப்டேட்

வெற்றிமாறன், சிலம்பரசன் கூட்டணியின் 'அரசன்' படப்பிடிப்பு இன்னும் 60 நாள்கள் மட்டுமே மீதம் இருப்பதாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு இடையே சிலம்பரசன் அடுத்ததொரு கெட்டப்பிற்கு ரெடியாகிறார் என்றும் தக... மேலும் பார்க்க

அன்பே டயானா: "எனது பயணம் 'ஜமா' படத்தில் தொடங்கியது இல்லை, 2013-ல்..!"- பாரி இளவழகன் எமோஷனல்

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'அன்பே டயானா'. இந்தப் படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த ... மேலும் பார்க்க

இதயம் முரளி: "இது சரியான ரீ என்ட்ரியாக இருக்கும்னு தோணுச்சு" - 'கனா கானும் காலங்கள்' மோனிஷா ஷேரிங்ஸ்

'கனா காணும் காலங்கள்' தொடரின் முதல் சீசனில் சங்கவியாக நடித்து மக்களுக்கு பேவரிட்டானவர் மோனிஷா ரவிஷங்கர். அத்தொடருக்குப் பிறகு தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்துவதற்காக நடிப்பிலிருந்து முழுமையாகவே விலகி... மேலும் பார்க்க