செய்திகள் :

Rain Alert: ``சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை" - வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

post image

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று (செப். 4) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகக் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலச் சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழ்நாட்டின் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மழை.
மழை.

5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை மாநிலத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை தொடரும். அதைத் தொடர்ந்து 9-ம் தேதி வட தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் பெரிய அளவில் மாற்றமின்றி இயல்பை ஒட்டி வெப்பநிலை பதிவாகும். இருப்பினும், உள் தமிழகத்தில் செப்டம்பர் 7-ம் தேதி வரை வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து காணப்படலாம்.

வியாழக்கிழமை (நேற்று) பதிவான தரவுகளின்படி, பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 40.2°C வெயில் பதிவாகியுள்ளது. திருச்சி, தஞ்சாவூர், மதுரை, ஈரோடு ஆகிய பகுதிகளிலும் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெயில் கொளுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் திருவாதவூர், ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் மற்றும் வாலாஜா ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், ஆற்காட்டில் 40 மி.மீ., ஏற்காடு, மாமல்லபுரம், செய்யூர், ஆரணி மற்றும் சிட்டம்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 30 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது" எனக் கூறப்பட்டிருக்கிறது.

நேபாள வெள்ளம்: ஒரே ஒரு போன் கால்; 1,643 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய தலைமையாசிரியர்!

‘விதியை மதியால் வெல்லலாம்’ என்ற பழமொழியைக் கேட்டிருப்போம். இந்தப் பழமொழிக்கான உதாரணமாகி இருக்கிறார் ராஜேந்திர ததாபி. கடந்த 26-ம் தேதி, நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர். இந... மேலும் பார்க்க

நேபாளம்: 3 நாள்களுக்கு பிறகு இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 6 வயது சிறுமி - துளிர்ந்த நம்பிக்கை!

பல நூறு பேரைக் கொன்ற நேபாள வெள்ளப் பேரிடரில் சின்ன ஆச்சர்யமும் நடந்துள்ளது. கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 26) காலை 9 மணியளவில் பனிப்பாறை சரிந்து நேபாளத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளம் தொடங்கியதே... மேலும் பார்க்க

Nepal: "எங்கள் குழுவைச் சேர்ந்த 80 பேரின் நிலை குறித்து தெரியவில்லை!"- கண்ணீர் மல்கிய ஜக்கி வாசுதேவ்

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் நேற்று (ஆக. 26) காலை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக நேபாள அரசு அதிகாரபூர்வமாக தெரிவி... மேலும் பார்க்க

Nepal Flood: நிலநடுக்கம் அல்ல, பனிப்பாறை சரிவு! - காரணத்தை சொல்லும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்

நேபாளத்தில் புதன்கிழமை காலை ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரழிவிற்கு நிலநடுக்கம் காரணம் என முதலில் கூறப்பட்ட நிலையில், அது ஒரு மிகப்பெரிய பனிப்பாற... மேலும் பார்க்க

Nepal Flood: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு - கலங்க வைக்கும் கோரக் காட்சிகள்! | Video

This is seriously scary. CCTV footage from Gyirong Port in Tibet, China, directly opposite Nepal’s Rasuwa district. This flash flood hit here first and later caused massive havoc in Nepal. Can’t even ... மேலும் பார்க்க

Rain Alert: இடி, மின்னலுடன் மழை; 15 மாவட்டங்களுக்கு காலை வரை அலர்ட்; சென்னைக்கு என்ன?

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்தது. சில இடங்களில் இன்னும் மழை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று ... மேலும் பார்க்க