`பொய் வழக்கு; தமிழ்நாடு உள்துறை ரூ.8 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும்’ - உயர் நீ...
Rain Alert: தமிழகத்தில் ரெட் அலர்ட்; உருவாகிறதா டிட்வா புயல்?
தென்மேற்கு வங்கக் கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கையில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்திருப்பதாகவும், அடுத்த 60 மணி நேரத்தில் புயலாக வலுவடையக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
புயலாக வலுப்பெறும் பட்சத்தில் ஏமன் நாடு பரிந்துரைத்துள்ள 'டிட்வா' என்ற பெயர் சூட்டப்படும் என்று கூறப்படுகிறது.
சென்னைக்கு 730 கி.மீ தொலைவில் இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (நவ.28) ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் 21 செ.மீக்கும் மிக அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அந்த 2 நாட்கள் மட்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நவம்பர் 29-ம் தேதி தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.

இதேபோன்று, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நவம்பர் 30-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.



.jpeg)















