செய்திகள் :

Rajini: `இது ரீ-ரிலீஸ் இல்ல.!' - 37 வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் ரஜினியின் பாலிவுட் படம்!

post image

1989-இல் படமாக்கப்பட்டு, 30 வருடங்களுக்கு மேலாகியும் வெளியாகாமல் இருந்த ரஜினி நடித்த 'ஹம் மெய்ன் ஷஹென்ஷா கவுன்' (Hum Mein Shahenshah Kaun) என்ற இந்தி திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகிறது என அறிவித்திருக்கிறார்கள்.

பிரபல இயக்குநர் ஹர்மேஷ் மல்ஹோத்ரா இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் இப்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Hum Mein Shahenshah Kaun Film
Hum Mein Shahenshah Kaun Film

பாலிவுட் தயாரிப்பாளர் ராஜா ராய் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஷத்ருகன் சின்ஹா, ஹேமா மாலினி, அனிதா ராஜ், ப்ரேம் சோப்ரா, ஷரத் சக்ஸேனா, மறைந்த நடிகர்கள் அம்ரிஷ் பூரி, ஜகதீப் உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படம், 1989-இல் படப்பிடிப்பு முடிந்த பிறகு தயாரிப்பாளர் ராஜா ராய் லண்டனுக்கு பிசினஸ் காரணமாகச் சென்றதால் தாமதமானது. அங்கு அவரது இளம் மகனை இழந்த சோகம், இப்படத்தின் இயக்குநர் ஹர்மேஷ் மல்ஹோத்ராவின் மறைவு உள்ளிட்ட பல காரணங்கள் இப்படத்தின் ரிலீஸை நிறுத்தியது.

ஆனால், இப்போது தயாரிப்பாளர்கள் படத்தை ரசிகர்களுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்கள். AI உதவியுடன் படத்தை ரீமாஸ்டரிங் செய்து நவீன திரையரங்கு தரத்திற்குக் கொண்டு வருவதாக அறிவித்திருக்கிறார்கள்.

Hum Mein Shahenshah Kaun Film
Hum Mein Shahenshah Kaun Film

ரிலீஸ் குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா ராய், "இந்தப் படத்திற்காக நாங்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை.

இன்று இப்படம் இறுதியாகப் பார்வையாளர்களைச் சந்திக்கப் போகிறது என்பதில் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.

அனைத்து தடைகளையும் கடந்து இந்தப் படம் உயிர்ப்புடன் இருக்கிறது" எனக் கூறியிருக்கிறார். ஏப்ரல் மாதத்தில் இத்திரைப்படம் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; கனெக்ட் ஆகிறதா இந்த 'ஆந்தாலஜி' படம்?

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வரும் இந்தப் பாகத்தில் 'ஹாட்ஸ்பாட் 2' படத்திற்காக கதை கேட்டுக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர். இயக்குநராக நினைக்கும் பெண் (ப்ரியா பவானி ஷங்கர்) அத்தயாரிப்பாளரைச் சந்தித்து ... மேலும் பார்க்க

மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்?

2005ம் ஆண்டு கடலூர் சிறையிலிருக்கும் மருத்துவக் கல்லூரி மாணவன் ஜீவா ( ஆகாஷ் நாகராஜன்) ஜெயிலில் செய்கிற ஒரு சம்பவத்தால் உயர் அதிகாரிகளால் கவனிக்கப்படுகிறான். அதன் பின் அவன் ஏன் சிறையில் இருக்கிறான் என்... மேலும் பார்க்க

அனிருத்: ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் - டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸ்! `அனி'யின் லைன்அப்

டாப் ரேஸில் தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். ஸ்பார்ட்டிஃபையில் 13 பில்லியன் ஸ்ட்ரீம்களைக் கடந்த முதல் தென்னிந்திய இசைக்கலைஞர் என்ற சாதனையை படைத்தவர் என்ற பெருமை அனிக்கு... மேலும் பார்க்க

மங்காத்தா: 'தல ரசிகர்’களுக்காக 'தல ரசிகர்’களால் 'தல’ சினிமா! - 15 ஆண்டுகளுக்குமுன் விகடன் விமர்சனம்

அஜித், அர்ஜுன், த்ரிஷா, பிரேம்ஜி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா திரைப்படம், இன்று 15 ஆண்டுகளுக்கு பின்னர் ரீரிலீஸ் ஆகியுள்ளது. அஜித் ரசிகர்கள் இதனால் உற்சா... மேலும் பார்க்க