``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அன...
Rajini 75: ``ஆறிலிருந்து அறுபது வரை" - நடிகர் ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். திரையுலகில் 50 ஆண்டுகளாக தன் ரசிகர்களை அதே உற்சாகத்துடன் வைத்திருக்கும் ரஜினி, தன் வயதையும் கடந்து தொடர்ந்து நடித்தும் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் ரஜினிக்கு தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர்.
நடிகர் ரஜினியின் உருவ சிலைகளை வைத்துக்கொண்டு தினமும் ஆரத்திக் காட்டுமளவிற்கு தீவிர ரசிகர்களை கொண்ட ரஜினிக்கு இன்று 75- வது பிறந்தநாள். தன் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் ரஜினி, நடிகர் திலகம் சிவாஜி கணேஷன், நடிகை ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா உள்ளிட்ட திரைப் பட்டாளங்கள் நடித்து வெளியான படையப்பா திரைப்படம் இன்று ரீ ரிலிஸ் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்! மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!
ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்!" என வாழ்த்தியிருக்கிறார்.






.jpg)









