``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அன...
Rajini 75: ``பல தலைமுறைகளைக் கவர்ந்தவர் ரஜினிகாந்த்" - பிரதமர் மோடியின் பிறந்த நாள் வாழ்த்து
தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். திரையுலகில் 50 ஆண்டுகளாக தன் ரசிகர்களை அதே உற்சாகத்துடன் வைத்திருக்கும் ரஜினி, தன் வயதையும் கடந்து தொடர்ந்து நடித்தும் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் ரஜினிக்கு தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர்.
நடிகர் ரஜினியின் உருவ சிலைகளை வைத்துக்கொண்டு தினமும் ஆரத்திக் காட்டுமளவிற்கு தீவிர ரசிகர்களை கொண்ட ரஜினிக்கு இன்று 75- வது பிறந்தநாள்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், ``திரு ரஜினிகாந்த் அவர்களின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.
அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.







.jpg)









