BB TAMIL 9: DAY 44: பாருவிடம் வில்லங்க கேள்வி கேட்ட கம்ரூதீன்; ரைமிங் ஓகே, என்டர...
Roja: " 'என் மகனை காப்பாத்துங்க'னு டாக்டர்கிட்ட சொல்லிட்டே இருந்தேன்!" - பர்சனல் பகிரும் ரோஜா!
90-களில் கோலிவுட், டோலிவுட் என பிஸியான நடிகையாக வலம் வந்தார் ரோஜா. 12 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் திரைத்துறைக்கு வந்திருக்கிறார்.
ஆந்திரா மாநில அரசியலில் சுழன்று இயங்கி வந்தவர் அறிமுக இயக்குநர் பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'லெனின் பாண்டியன்' படத்தின் மூலம் இப்போது கம்பேக் கொடுக்கவிருக்கிறார்.
கங்கை அமரனும் இப்படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார். ரீ-எண்ட்ரிக்கு நடிகை ரோஜாவுக்கு விஷஸ் சொல்லி அவரைப் பேட்டி கண்டோம்.

நம்மிடையே பேசிய நடிகை ரோஜா, “ரீ-என்ட்ரிக்கு ‘லெனின் பாண்டியன்’ படம் சரியாக இருக்கும்னு நினைச்சு செய்திருக்கேன்.
பஞ்சு அருணாச்சலம் சாரோட பையன் சுப்பு இந்தப் படத்துல இந்த கதாபாத்திரத்துல நான் நடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னார். எனக்கும் கொஞ்ச நாட்கள் இடைவெளி ஆகிடுச்சு. பிறகு, இந்தக் கதையைக் கேட்டதுமே நான்தான் நடிக்கணும்னு தீர்க்கமாக முடிவு பண்ணிட்டேன்.
இந்தப் படத்துல கங்கை அமரன் சாரும் முக்கியமானதொரு கேரக்டர்ல நடிச்சிருக்காரு. இதுக்கு முன்னாடி நானும் அவரும் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ படத்துல சின்ன சீன்ல இணைந்து நடிச்சிருப்போம். இப்போ இந்தப் படத்துல முழுவதும் சேர்ந்து நடிச்சிருக்கோம்.” என்றார்.
“இந்த தலைமுறை கணவன்-மனைவி பிரச்னைகளுக்கு தடுக்க, அவர்களுக்கு ஒரு அட்வைஸ் தர வேண்டுமென்றால், என்ன சொல்வீர்கள்?” எனக் கேட்டதற்கு, “ஒரே குடும்பத்துல இருக்கிற அண்ணன்-தங்கைக்கு ஒரே மாதிரியான நடைமுறை இருக்காது.
அவர்களுக்கு இடையில விட்டுக் கொடுத்து போகிற விஷயங்களும் சில சமயங்கள்ல மாறுபடும்.
அப்படியான நேரத்துல இன்னொரு வீட்டுல இருந்து வருகிற பெண் நம்ம நினைச்ச மாதிரிதான் இருக்கணும்னு கிடையாது.
லவ் பண்ற பொண்ணுகிட்ட ப்ளஸ் விஷயங்களை எப்படி எடுத்துக் கொள்கிறோமோ, மைனஸ் விஷயங்களையும் அப்படியே எடுத்துக்கணும்.

அந்த மைனஸ் விஷயம் ரிலேஷன்ஷிப்புக்கு பிரச்னையாக வந்தா, அதை திருத்திக்கிட்டு போகிறது நல்லது.
என்னுடைய கணவர் செல்வா என்னைவிட 10 வயது மூத்தவர். அவர் அனைத்தையும் முதிர்ச்சியோடு அணுகுவாரு.
நான்தான் அதிகமாக சண்டை போடுவேன். அப்படியான நேரங்கள்ல அவர்தான் என்னை சமாதானப்படுத்துவாரு.
இன்றைய தலைமுறையினர்கிட்ட நான் ஏன் விட்டுக் கொடுத்துப் போகணும்னு ஈகோ இருக்கு.
ரிலேஷன்ஷிப்புக்கு விட்டுக் கொடுத்துப் போகிறது ரொம்பவே முக்கியம்!” என்றவர், அவருடைய மகன் குறித்து பேசுகையில், “நான்னா அவனுக்கு உயிர். போட்டோ எடுக்கும்போது அவன் என்னை எப்போதும் கட்டிப் பிடிச்சுதான் போஸ் கொடுப்பான்.
அவன் கருவில இருக்கும்போது ஐந்தாவது மாசத்துல நான் ஒரு கோவில் கும்பாபிஷேகம் நிகழ்விற்காக வெளியூருக்குப் போயிருந்தேன்.
அந்த நேரத்துல அங்க இருந்த கூட்ட நெரிசலினால் எனக்கு திரும்ப வரும்போது ரத்தப்போக்கு ஏற்பட்டிருச்சு.
சென்னை வந்ததும் உடனடியாக நான் மருத்துவமனையில அட்மிட் ஆகிட்டேன். பிறகு இரண்டு மாசத்துக்கு முழுமையாகவே பெட் ரெஸ்ட்தான்.
7 மாசத்திலேயே டெலிவரிக்கான சூழல் வந்திடுச்சு. அப்போ டாக்டர்கிட்ட ‘என் பையனை காப்பாத்துங்க’னு சொல்லிட்டே இருந்தேன். அவனைப் பத்தி எனக்கு பயம் அதிகமாக இருந்தது.

ஆனா, இன்னைக்கு வளர்ந்து நிற்கிறார்! என் மகளை நினைச்சும் நான் பெருமையா உணர்றேன்.
அவங்க இப்போ அவார்ட்ஸ்லாம் வாங்கிட்டு இருக்காங்க. அவங்க படிக்கணும்னு நினைக்கிற விஷயங்களுக்கு நாங்க என்னைக்கும் சப்போர்ட்டாக இருக்கணும்னு நினைக்கிறோம்.
சின்ன கிராமத்துல இருந்து வந்த நான் இன்னைக்கு இங்க இருக்கிறதுக்கு காரணம் என்னுடைய கடின உழைப்புதான். நான் படிக்கணும்னு நினைச்சேன். ஆனா, இங்க வந்ததும் படத்துக்கான ஷூட்டிங்கை தொடங்கிட்டேன். ஆனா, என் பொண்ணு படிப்புல நம்பர் 1.” என்றபடி முடித்துக் கொண்டார்.



















