செய்திகள் :

RR vs RCB: "களத்தில் நான் பந்துவீச்சாளர்களை கவனிக்க மாட்டேன், மாறாக.!"- சூர்யவன்ஷி சொல்லும் சீக்ரெட்

post image

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.10) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

இதில் ராஜஸ்தான் அணி பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது.

202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு வைபவ் சூர்யவன்ஷி முக்கியப் பங்காற்றியிருந்தார்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

வெறும் 26 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 78 ரன்கள் குவித்த அவர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

விருது வென்ற பிறகு பேசிய சூர்யவன்ஷி, " பயிற்சியில் என்ன செய்வேனோ, அதையே களத்தில் செய்வேன்.

புதிதாக எதையும் முயற்சிக்காமல், இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே என் வழக்கம்.

யார் பந்துவீசுகிறார்கள் எனத் தெரிந்தாலும், பந்துவீச்சாளரைக் கவனிக்காமல், பந்தின் போக்கிலேயே கவனம் செலுத்தினேன்.

என் தந்தை, பயிற்சியாளர்கள், ரோஹி சார் எனக்கு பாதுகாவலர்களாக உள்ளனர்.

'இந்த பயணம் நீளமானது, இது ஆரம்பம்தான். செயல்முறை மற்றும் ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்து' என அவர்கள் தொடர்ந்து அறிவுறுத்துவார்கள்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

நான் களத்தில் நீடித்திருந்தால் 10-20 ரன்கள் அதிகம் எடுக்க முடியும்.

இது இலக்கை துரத்தும்போது இரண்டு ஓவர்கள் முன்பே முடிக்கவோ, அல்லது இலக்கை நிர்ணயிக்கும் போது கூடுதல் ரன்கள் எடுக்கவோ உதவும்" என்று கூறியிருக்கிறார்.

பந்தைக் கொடுக்காமல் டிம் டேவிட் செய்த செயல்; கோபமடைந்த நடுவர்கள் - என்ன நடந்தது?

ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில், பந்தை நடுவர்களிடம் கொடுக்க மறுத்த ஆர்சிபி அணியின் டிம் டேவிட்டால் நடுவர்கள் கோபமடைந்த சம்பவம், இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் ... மேலும் பார்க்க

MI vs RCB: "நாங்கள் இன்னும் கூடுதல் ரன்கள் அடித்திருக்க வேண்டும்; ஆனால்..." - ஆட்டநாயகன் பில் சால்ட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின. இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.சிறப்பாக விளையாடிய பில் சால்ட் ஆட்டநாயகன் ... மேலும் பார்க்க

RCB vs MI: "விராட் பாயும், சால்ட்டும் தொடங்கிய விதம் தான் எங்களை.."- வெற்றி குறித்து ரஜத் பட்டிதார்

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்12) நடைபெற்ற மும்பை vs பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பாயின்ட்ஸ் டேபிலில் மூன்றாவது இடத்... மேலும் பார்க்க

RCB VS MI: "எதுவுமே வேலை செய்யல, இப்படியே போனா வேலைக்கு ஆகாது.!"- ஹர்திக் பாண்டியா வேதனை

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 12) விறுவிறுப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. பந்துவீச்சில் அதிக ரன்களை வாரி வழங்கிய மும்பை அணி, இலக்கை எட்ட முடிய... மேலும் பார்க்க

"220 ரன்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு மேட்டரே இல்லை!" – SRH பந்துவீச்சை சிதறடித்த பஞ்சாப் கிங்ஸ்

போட்டியில் இன்று (ஏப்ரல் 11) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள்மோதின. தோல்வியே காணாத பஞ்சாப் அணி தனது கோட்டையில் ஹைதராபாத்தின் அதிரடியைச் சமாளித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் ஒரு இமாலய... மேலும் பார்க்க

CSK: "எங்கள் அணியின் மீது எழும் விமர்சனங்கள் நியாயமானதுதான்.!"- ஃபிளெமிங் என்ன சொல்கிறார்?

2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான தொடக்கத்தைச் சந்தித்திருக்கிறது. விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் தோல்வியைச் சந்திருக்கிறது. ஒரு வெற்றி கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் 0 பு... மேலும் பார்க்க