செய்திகள் :

RR VS SRH: "கொஞ்சம் முயன்றிருந்தால் முதல் 2 இடங்களுக்குள் வந்திருக்கலாம்" - கம்மின்ஸ் வருத்தம்

post image

ஐபிஎல் 2026 நேற்றைய (மே 27) தொடரின் முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, குவாலிபையர் 1 போட்டியில் தோல்வி அடைந்த அணியுடன் விளையாடும் வாய்ப்பைப் பெறும்.

அதே நேரத்தில், தோல்வி அடையும் அணி இந்தத் தொடரிலிருந்து வெளியேறும் என்பதால் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

RR VS SRH
RR VS SRH

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 243 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணி, இறுதிவரை போராடினாலும் முக்கியமான தருணங்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.

தோல்விக்குப் பிறகு பேசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், "டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமாக இருந்தது. ஆட்டத்தின் இறுதிவரை ஆடுகளத்தின் தன்மையும் நன்றாகவே இருந்தது.

எங்கள் அணியில் பிரஃபுல் மற்றும் சாகிப் உசேன் போன்ற இளம் வீரர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டனர். இந்த ஆண்டு பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகளிலேயே எங்களது அணிதான் அதிக இளம் வீரர்களைக் கொண்ட அணி என்று நினைக்கிறேன்.

இளம் வீரர்களின் திறமையைக் கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கிய பயிற்சியாளர்களுக்குப் பாராட்டுகள். ஒரு கேப்டனாக அவர்களின் ஆட்டத்தைப் பார்ப்பது பெருமையாக இருக்கிறது.

243 ரன்கள் என்ற பெரிய இலக்கைத் துரத்தும்போது அனைத்துச் சூழல்களும் எங்களுக்குச் சாதகமாக அமைய வேண்டும். நாங்கள் பெரும்பாலான ஓவர்களில் தேவையான ரன் ரேட்டைத் தக்கவைத்துக்கொண்டே வந்தோம்.

RR VS SRH
RR VS SRH

ஆனால், தவறான நேரங்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்குப் பின்னடைவாக அமைந்துவிட்டது. இருந்தாலும், நாங்கள் கடைசி பந்து வரை மிகக் கடுமையாகப் போராடி எங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தினோம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளோம். இன்னும் ஒரு சிறிய படி முன்னால் சென்றிருந்தால் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் வந்திருக்கலாம்.

இந்த ஆண்டு முழுவதும் வீரர்கள் காட்டிய உத்வேகமும் விளையாடிய விதமும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது," என தெரிவித்தார்.

'10 வயதில் சதம்' - அண்ணன் வைபவ் வழியில் மிரட்ட வரும் அடுத்த சூறாவளி ஆசீர்வாத் சூர்யவன்ஷி!

இந்திய கிரிக்கெட் உலகமே தற்போது இளம் புயலான வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பார்த்து வியந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதற்குள்ளாகவே சூர்யவன்ஷி குடும்பத்தில் இருந்து இன்னொரு கிரிக்கெட் சூறாவளி உருவாகிவி... மேலும் பார்க்க

"தென்னாப்பிரிக்க அணியில் இப்படிப்பட்ட ஓர் இளம் வீரர் இல்லை.!" - சூர்யவன்ஷியை புகழ்ந்த டேல் ஸ்டேயின்

தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டேயின் இந்திய இளம் வீரர் சூர்யவன்ஷியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். நடந்து முடிந்த ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயது இளம் வீரரான சூர்யவன்ஷி,... மேலும் பார்க்க

'நியூசிலாந்திற்காக விளையாடிய ஒவ்வொரு கணமும் பொன்னானது..!'- ஓய்வை அறிவித்த கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். ஓய்வு குறித்து பேசியிருக்கும் கேன் வில்லியம்சன், " சர்வதேச கிரிக்கெட்... மேலும் பார்க்க

"எல்லா அழுத்தங்களிலும் RCB ஆதரவு தந்திருக்கிறது; இதுதான் என் வீடு" - விராட் கோலி நெகிழ்ச்சி

'ஈசாலா கப் நம்தே' என்ற வாசகத்தோடு கடந்த 17 வருடங்களாக ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த சீசனில் தனது முதல் கோப்பையை முத்தமிட்டிருந்தது. இதனைத்தொடர... மேலும் பார்க்க

நள்ளிரவு விதி! மீண்டும் சர்ச்சையில் பென் ஸ்டோக்ஸ் - நைட் கிளப் தகராறால் பறிபோகுமா பதவி?

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அணி வெற்றி பெற்றதைக் கொண்டாட, சக வீரர் கஸ் அட்கின்ச... மேலும் பார்க்க

Manav Suthar: `ஸ்லோ விக்கெட்... சிம்பிள் பிளான்!' - பந்துவீச்சு ரகசியம் பகிரும் `அறிமுக' ஆட்ட நாயகன்

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது... தனது முதல் போட்டியிலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்திருக்கிறார் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மனவ் சுதர். டெஸ்ட் கிரிக்கெட் சுலபமானதா என்ற கேள்விக்க... மேலும் பார்க்க