Delimitation Bill | Twist கொடுத்த M K Stalin - திமுக மீது கடும் விமர்சனம்! | Imp...
Sai pallavi: ``விமர்சனங்களை நான் பார்க்காமல் இலை; ஆனால்..." - வெளிப்படையாக பேசிய சாய் பல்லவி!
நிதேஷ் திவாரி இயக்கத்தில் வெளியான ‘ராமாயணம்’ படத்தில் சீதையாக சாய் பல்லவி நடித்திருந்தார். அதில் சாய் பல்லவியின் தோற்றம், நடிப்பு குறித்து சமூக ஊடகங்களிலும், சில திரைத்துறையினரிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் பர்கா தத்-யின் ‘வி த விமன்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்திருக்கிறார்.
அவரின் பேட்டியில், ``விமர்சனங்கள் ஒருவரை ரொம்பவும் பாதித்தால், அது விமர்சனம் சொல்பவர்களின் தவறு கிடையாது; பாதிக்கப்படுபவரின் மனதில் இருக்கும் பலவீனமே அதற்குக் காரணம். 'ராமாயணா' படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க நான் தேர்வானபோது, அந்த வேடத்திற்கு நான் சரியாக இருப்பேனா என்று சமூக வலைதளங்களில் நிறைய பேச்சுகள் வந்தன.

சீதா அம்மா எப்படி அழகாக இருக்க வேண்டும் என்றெல்லாம் பல கருத்துகளை நான் பார்க்காமலில்லை. ஆனால், அந்த விமர்சனங்கள் நம் அடித்தளத்தையே ஆட்டுகின்றன என்றால், நம்மிடம்தான் ஏதோ குறை இருக்கிறது என்றும், நாம் இன்னும் மனதளவில் வலிமையாக வேண்டும் என்றும் அர்த்தம். கருத்துகள் வெறும் கருத்துகள்தான். நமக்குள் ஏதாவது பயமோ, பாதுகாப்பின்மையோ இருந்தால், நாம் உள்ளுக்குள் உறுதியாக இருக்க வேண்டும். அப்போதான் ஒட்டுமொத்த உலகத்தையும் எதிர்கொள்ள முடியும்; தேவையில்லாத பேச்சுகளையும் கண்டுகொள்ளாமல் இருக்க முடியும்.
என் வாழ்க்கை எப்போதுமே ஒரு படத்திலிருந்து அடுத்த படத்திற்குப் போய்க்கொண்டேதான் இருக்கிறது. நான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் என்னுள் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், அந்த மாற்றத்தை உலகம் புரிந்துகொள்ள வேண்டும் என்றோ, தெரிந்துகொள்ள வேண்டும் என்றோ அவசியமில்லை. அது அவ்வளவு பெரிய விஷயமும் கிடையாது. படங்களில் பெண்களை வெறும் அழகுப் பொருளாகக் காட்டுவது எனக்குப் பிடிக்காது. ஆரம்பக் காலத்தில் எனக்கு அதிக வாய்ப்புகள் இல்லாதபோது, சில படங்களை 'வேண்டாம்' என்று மறுப்பது ரொம்பக் கஷ்டமாக இருந்தது.
அந்தக் காலத்தில் ஒவ்வொரு நாளும் மனவேதனையாக இருக்கும். கதையில் வரும் கதாபாத்திரங்கள் நல்லவையா என்று யோசிப்பேன்; மற்றவர்கள் செய்வது போல நாமும் சமரசம் செய்துகொண்டு நடித்துவிடலாமா என்றும் தோன்றும். ஆனால், படம் வந்த பிறகு என்னால் என் மனசாட்சிக்கு உண்மையாக வாழ முடியுமா என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன். அப்படி முடிவெடுப்பது சுலபமான விஷயம் இல்லை. போகப்போக நான் உறுதியான முடிவுகளை எடுத்ததால், அதற்குப் பிறகு என்னைத் தேடி வந்த கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்க ஆரம்பித்தது." என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...











