செய்திகள் :

Samantha: "சமந்தா ஒரு பெண் என்பதைத் தாண்டி ஒரு போராளி!" - நடிகை கெளதமி

post image

சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்ஷன் படமான 'மா இண்டி பங்காரம்' ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். கடைசியாக சமந்தா நடிப்பில் 'குஷி' திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

Maa Inti Bangaaram
Maa Inti Bangaaram

அந்தத் திரைப்படத்திற்குப் பிறகு சமந்தா நடித்திருக்கும் இப்படம், ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்தப் படம் 'எங்கள் தங்கம்' என்கிற தலைப்பில் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. சென்னையில் நேற்று இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய நடிகை கெளதமி, "இந்தப் படத்தை நான் ஒத்துக்கிட்டதுக்கு முதல் காரணம் இந்தப் படத்தோட இயக்குனர் நந்தினியும் தயாரிப்பாளர் சமந்தாவும்தான்.

அவர்கள் பெண்கள் என்பதைத் தாண்டி போராளிகள், வலிமையானவர்கள், உறுதியானவர்கள். அவங்க யார் என்பது அவங்களோட வேலையின் மூலம் நமக்குத் தெரியும்.

இந்தப் படத்துல இவங்களோட வேலை செய்வது என் வழியில நான் இவர்களுக்குத் தெரிவிக்கிற பாராட்டு. இந்தப் படத்திற்குப் பின்னாலும், இந்த கதை படமா மாறுவதற்கு பின்னாடி இருக்கிற ஒவ்வொரு செயல்முறையில் சமந்தாவின் மிகப்பெரிய உழைப்பு இருந்திருக்கு.

 Maa Inti Bangaaram Team
Maa Inti Bangaaram Team

பொதுவாக ஒரு படம் பெண்களின் அதிகாரத்தைப் பற்றி எடுத்தா அதை எல்லாரும் போற்றிப் பேசுவாங்க. ஆனா இந்த படம் பெண்களோட அதிகாரத்தைப் பற்றினது இல்லை. இந்த படம் பாலினம் இல்லாத பொதுவான அதிகாரம் பற்றியது.

இந்த படம் நிச்சயமாகப் பார்க்கிற எல்லாருக்குமே பிடிக்கும். அந்த வகையில் தான் இந்த படம் எடுக்கப்பட்டுருக்கு. இந்த படத்திற்காக உண்மையாக உழைப்பு போட்டிருக்கிற அத்தனை பேருக்கும் இலக்குகளும் கனவுகளும் நிறைய இருக்கு" என்றார்.

அரசன்: மிரட்டலான மூன்றாவது கெட்டப்; வெற்றிமாறன் குட்புக்கில் இடம்பிடித்த சிலம்பரசன் - Arasan அப்டேட்

உற்சாகத்தில் இருக்கிறார் சிலம்பரசன். தயாரிப்பாளர் தாணு, வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்துள்ள 'அரசன்' படப்பிடிப்பு சென்னையில் சீறிப்பாய்ந்து போய்க் கொண்டிருக்கிறது. சிலம்பரசன்வடசென்னையை மையமாக வைத்து 'அரச... மேலும் பார்க்க

`விஜய் சார், இதைவிட பெரிய ஏதோ ஒன்றிற்காகவே உருவாக்கப்பட்டவர் என்று...' - முதல்வரைச் சந்தித்த சமந்தா

நடிகை சமந்தா முதல்வர் விஜய்யை இன்று (ஜூன். 17) நேரில் சந்தித்திருக்கிறார். இதனை நெகிழ்ச்சியாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். புகைப்படத்துடன் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "இன்... மேலும் பார்க்க

Engal Thangam: "தமிழில் நிறைய நல்ல படங்கள் பண்ணனும்னு பசியோடு இருக்கேன்!" - சென்னையில் சமந்தா

சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்ஷன் படமான 'மா இண்டி பங்காரம்' ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். கடைசியாக சமந்தா நடிப்பில் 'க... மேலும் பார்க்க

"இந்த விழிப்புணர்வை உலகெங்கும் உள்ள அனைத்துப் பெண்களுக்கும்..!" - நடிகை சமந்தாவின் புதிய பிசினஸ்

திரைப்பிரபலங்கள் பலரும் சினிமாவைத் தாண்டி பல்வேறு பிசினஸ்களை நடத்தி வருகிறார்கள். பெரும்பாலான திரைப்பிரபலங்கள் சொந்தமாகவே உணவகங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களைத் தாண்டி இன்னும் பலர் பல்வேறு துறைகளில்... மேலும் பார்க்க

"அந்தப் புத்தகத்தைக் கொடுக்கத்தான்" - ரஜினியுடனான சந்திப்பு குறித்து நயினார் நகேந்திரன் விளக்கம்

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று (ஜூன்.16) சந்தித்தார். பிரதமர் மோடி​யின் 12 ஆண்​டு​கால சாதனை​கள் குறித்த சிறப்புப் புத்​தகங்​களை ரஜினி​காந்த்திற்... மேலும் பார்க்க

Heartin: `விஜய் படமா? உதயநிதி படமா? யார் படம் புடிக்கும்?' - தங்கம் தென்னரசு மகள் இமையா பதில்

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசின் மகளான இமயா 'ஹார்ட்டின்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஜூன் 26 திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை... மேலும் பார்க்க