பறை இசைக் கலைஞருடன் ஆனந்தமாக பறை இசைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி | Photo Album
Simran: ``இந்தக் கேள்வி கேட்டதற்கே நன்றி... ரஜினி சாருக்கு வாழ்த்துகள்" - நடிகை சிம்ரன்
சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் நடைபெறும். அதன் அடிப்படையில், 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 11 முதல் 18-ம் தேதி வரை சென்னை பிவிஆர் சினிமாஸிஸ் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் ஜெர்மன், ரஷ்யா, ஸ்பெயின், பிரெஞ்ச், தைவான் என 51 நாடுகளைச் சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
அலங்கு, பிடிமண், மாமன், மருதம், பறந்து போ, வேம்பு, டூரிஸ்ட் பேமிலி, பாட்ஷா, 3 பி.ஹெச்.கே., என 12 தமிழ் திரைப்படங்கள் திரையிட உள்ளன. இந்த நிகழ்வின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அதில் நடிகை சிம்ரன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய நடிகை சிம்ரன், ``நாம் எல்லோரும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் இந்த நிகழ்வுக்கு அதிகம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இதை வெறும் பிசினஸாக மட்டும் பார்க்காமல் கலையாக அணுக வேண்டும். எனக்கு சினிமாவை மிகவும் பிடிக்கும்." என்றார்.
தொடர்ந்து பத்திரிகையாளர் ஒருவர், நடிகர் ரஜினிகாந்துக்கு 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நினைவுப் பரிசு வழங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நடிகை சிம்ரன், ``ரஜினி சாரின் 50 ஆண்டுக்கால திரை வாழ்க்கைக்கு என்னுடைய மிகப்பெரும் வாழ்த்துகள். நான் அவருடைய தீவிரமான ரசிகை. ரஜினி சார் குறித்து கேள்வி கேட்டதற்காகவே நன்றி. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, ரஜினிகாந்த் சாருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்கிறேன்.

இந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் என்னுடைய டூரிஸ்ட் ஃபேமிலி படமும் திரையிடப்படுகிறது. இதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய திரைப்படங்களில் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக நான் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை கருதுகிறேன். எனக்கு ஆதரவளிக்கக்கூடிய என்னுடைய ரசிகர்களுக்கும், புரொடக்சன் டீமுக்கும், இந்த படத்தின் இயக்குநருக்கும் என்னுடைய நன்றிகள்." என்றார்.








.jpg)







