"பாஜக-வும் திமுக-வும் ஒருபோதும் ஒன்றாக இணைய முடியாது; ஏனென்றால்..." - ஜெயராம் ரம...
Sonam Wangchuk: "'3 இடியட்ஸ்' ராஞ்சோ கதாபாத்திரம் சோனம் வாங்சுக்தானா?' - நடிகர் ஆமீர் கான் விளக்கம்
நீட் தேர்வு முறைகேடுகள், கல்விச் சீர்திருத்தம், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா போன்றவற்றை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கல்வி சீர்திருத்தவாதியும், பொறியியலாளரும், சமூக ஆர்வலருமான சோனம் வாங்சுக் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவரது இந்தக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் 20 நாள்களைக் கடந்துள்ள நிலையில், உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.
இந்நிலையில் அவர் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் பாலிவுட்டில் ஆமீர் கான் நடிப்பில் வெளியாகி உலகளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த '3 இடியட்ஸ்' படத்தில் வரும் ராஞ்சோ கதாபாத்திரம், சோனம் வாங்சுக்கின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நடிகர் ஆமீர் கான் இதுதொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார். "ராஞ்சோ கதாபாத்திரம் சோனம் வாங்சுக் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கவில்லை. இது தவறான புரிதல்.
'3 இடியட்ஸ்' திரைப்படத்தை எடுக்கும்போது எனக்கு சோனம் வாங்சுக் யாரென்றே தெரியாது. படத்தின் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, கதையாசிரியர் அபிஜத் ஜோஷி ஆகியோருக்கும் அவரைப் பற்றி அப்போது தெரியாது.

சோனம் வாங்சுக் செய்து வரும் சமூகப் பணிகள் தனித்துவமானவை. அதை நாம் மதிக்க வேண்டும். அவர் மேற்கொண்டு வரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் விரைவில் முடிவுக்கு வர வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.




















