ADMK: அதிமுக கூட்டணியில் ஐக்கியமான `அன்புமணி' பாமக - டெல்லி செல்லும் எடப்பாடி பழ...
TAPS: `இது ஓய்வூதியத் திட்டமல்ல, சிறு சேமிப்புத் திட்டம்'- ஒரு தரப்பு அரசு ஊழியர்கள் எதிர்ப்பது ஏன்?
அரசு ஊழியர்களின் 23 ஆண்டுக்கால கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (Tamil Nadu Assured Pension Scheme - TAPS) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (ஜன.3) அறிவித்திருந்தார்.
ஜனவரி 6 ஆம் தேதி போராட்டமென அறிவித்திருந்த ஜாக்டோ ஜியோ சங்கத்தினர், முதல்வரின் அறிவிப்பையொட்டி உற்சாகமாகி, போராட்டத்தையே ரத்து செய்திருக்கின்றனர். பல அரசு ஊழியர்களும் இனிப்பு ஊட்டி மகிழ்ந்தாலும், ஒரு சிலர் இந்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திலும் சில குறைகள் இருக்கின்றன என விமர்சிக்கின்றனர்.

அரசு ஊழியர்களின் 23 ஆண்டுக்காலப் போராட்டம்
அரசு ஊழியர்களுக்கு 2003 ஆம் ஆண்டு வரை பழைய ஓய்வூதியத் திட்டம் அமலில் இருந்தது.
2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்ற புதிய திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது.
மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதை அடுத்து ஒரு சில மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டமே அமலில் இருந்தது.
அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகாலப் போராட்டம்
அரசு ஊழியர்களுக்கு 2003 ஆம் ஆண்டு வரை பழைய ஓய்வூதியத் திட்டம் அமலில் இருந்தது.
2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதனையடுத்து ஒரு சில மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டமே அமலில் இருந்தது.
கிளம்பும் எதிர்ப்புகள்
இந்நிலையில்தான் தமிழ்நாடு அரசின் இந்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தாலும்... சில அரசு ஊழியர்கள் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
பழைய ஓய்வூதியத் திட்டம் Vs பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் Vs உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்தும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அரசு ஊழியர்கள் எதிர்ப்பது ஏன் என்பது குறித்தும் விரிவாகப் பார்க்கலாம்!
பழைய ஓய்வூதியத் திட்டம்
பங்களிப்பு
அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஓய்வூதியத்திற்காக எந்த ஒரு தொகையும் பிடிக்கப்படுவதில்லை.
ஓய்வூதியம்
ஊழியர் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50% தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும்.
அகவிலைப்படி
அரசு அறிவிக்கும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஓய்வூதியதரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.

பணிக்கொடை
ஊழியர்கள் பொது வருங்கால வைப்பு நிதி (GPF) மூலம் ஓய்வூதிய பணத்தை சேமிக்க முடியும், இதற்கு அரசு வட்டி வழங்கும்.
நாமினிக்கான ஓய்வூதியம்
ஓய்வூதியதாரர் உயிரிழந்தால், குறைந்தபட்சம் 7 வருடங்கள் பணிபுரிந்திருந்தால் அவரது நாமினிக்கு, முதல் 10 ஆண்டுகளுக்கு கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50% கிடைக்கும். அதன் பிறகு சாதாரண விகிதத்தில் (30%) கிடைக்கும்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்
பங்களிப்பு
ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10% தொகை பிடிக்கப்படும். அதே அளவு தொகையை அரசும் செலுத்தும்.
ஓய்வூதியம்
ஓய்வு பெறும்போது எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதற்கு எவ்வித நிலையான உத்தரவாதமும் இல்லை.

அகவிலைப்படி
சந்தை சார்ந்த (share Marketing) சூழலை பொறுத்து உறுதியாகும்
பணிக்கொடை
ஓய்வு பெறும்போது மொத்தத் தொகையில் ஒரு பகுதியை (60%) எடுத்துக்கொள்ளலாம். மீதமுள்ள 40% தொகையை ஏதேனும் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்து அதிலிருந்து மாத ஓய்வூதியம் பெற வேண்டும்.
நாமினிக்கான ஓய்வூதியம்
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பயனர் இறந்தால், குடும்பத்தினருக்குக் கிடைக்கும் ஓய்வூதியம், NPS-ல் உள்ள மொத்தத் தொகை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நிலையைப் பொறுத்து தான் வழங்கப்படும்.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்
பங்களிப்பு
ஊழியர்களிடம் இருந்து 10 சதவிகிதம் பங்களிப்பு தொகை பிடிக்கப்படும். அதே அளவு தொகையை அரசும் செலுத்தும்.
ஓய்வூதியம்
கடைசி மாத சம்பளத்திலிருந்து 50 சதவிகிதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.
அகவிலைப்படி
அரசு அலுவலர்களுக்கு இணையான அகவிலைப்படி 6 மாதங்களுக்கு ஒருமுறை உயர்த்தி வழங்கப்படும்.

பணிக்கொடை
பணிக்காலத்திற்கேற்ப 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்
நாமினிக்கான ஓய்வூதியம்
ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவிகிதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
எதிர்க்கும் அரசு ஊழியர்கள்
தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை சில அரசு ஊழியர்கள் எதிர்ப்பது ஏன்? என்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்டக் குழு உறுப்பினர் சி.முருகனிடம் கேட்டோம்.
இது தொடர்பாக நம்மிடம் பகிர்ந்துகொண்ட அவர், "பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் போராட்டத்தை நடத்தினோம்.
ஓய்வூதியம் என்றாலே அரசு ஊழியர்களிடம் ஒரு ரூபாய்கூட பிடித்தம் செய்யாமல் அரசு கொடுப்பதுதான் ஓய்வூதியம்.

ஆனால் தமிழக அரசு இந்த உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் படி 10 சதவிகிதத்தை அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்தே பிடித்தம் செய்துகொண்டு ஓய்வூதியத்தை வழங்க திட்டமிட்டிருக்கிறது.
2003 ஆம் ஆண்டுக்கு முன்பு அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் படி சம்பளம் பிடித்தமின்றி ஓய்வூதியத்தை வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசு வேலையில் சேர்ந்தவர்களுக்கு 10 சதவிகிதம் என்பது நியாயம் கிடையாது.
10 சதவிகிதம் பிடித்தம் என்பது சாதாரண தொகை கிடையாது. எங்களுடைய தொகையைப் பிடித்துக் கொண்டு ஓய்வூதியம் தருவதற்கு அரசு எதற்கு? இது ஓய்வூதியத் திட்டம் மாதிரி இல்லை. சிறு சேமிப்புத் திட்டம் போல் இருக்கிறது. அதனால் இந்த தவறானத் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
ஆதரிக்கும் அரசு ஊழியர்கள்
``கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். இப்போதுதான் பாதி சம்பளத்தை ஓய்வூதியமாகக் கொடுப்பதற்கு ஒத்துழைப்பு தந்திருக்கிறார்கள். இன்றைய தேதியில் இதனை ஒரு முன்னேற்றமாகத் தான் பார்க்கிறோம். இதனை ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவிகிதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்" என்ற கருத்தை முன்வைக்கிறார்கள்.













