குளித்தலை: `ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; யாருக்காக ஆட்சி நடத்துகிறது திமுக?' -...
Thangamayil: வைர நகை தயாரிப்பில் புதுமை – தங்கமயில் ஜுவல்லரியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிமுகம்!
இந்திய நகைத் துறையில் புதிய மைல்கல்லாக, உலகின் முதல் தனித்துவமான இரட்டை வடிவமைப்பு கொண்ட வைர ( Diamond ) நெக்லஸ் மற்றும் ஹராம் அறிமுகம் 2026 ஜனவரி 25 அன்று தங்கமயில் ஜுவல்லரி – டி.நகர் ஷோரூமில் வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வில் பிரபல நடிகைகள் பிரியா பவானி சங்கர் மற்றும் நிரோஷா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, உலகின் முதல் வைரப் புதுமையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். அவர்களின் பங்கேற்பு, நிகழ்விற்கு பெரும் கவனத்தை ஈர்த்ததோடு, வைர நகைகளின் தனித்துவத்தையும் மதிப்பையும் பொதுமக்களிடையே வெளிப்படுத்தியது.
இந்த நிகழ்வில் தங்கமயில் ஜுவல்லரியின் நிர்வாக இயக்குநர் திரு. பாலராம கோவிந்தாஸ், Vice President திரு. NB. அருண் மற்றும் திரு. கோகுல் ரமேஷ் உள்ளிடோர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு, இந்த புதிய முயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.

இதற்கு முன்னதாக, இந்த உலகின் முதல் வைரநகை அறிமுகம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு ஜனவரி 24 அன்று சென்னை ஹோட்டல் ராமாடா பிளாசாவில் நடைபெற்றது. அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தங்கமயில் ஜுவல்லரியின் இணை நிர்வாக இயக்குநர் திரு. பா. ரமேஷ் மற்றும் பொது மேலாளர் திருமதி ஷைலஜா பிரசன்னன், வைர விற்பனை மேலாளர் திரு.மனோஜ் குமார், சென்னை விற்பனை மேலாளர் திரு. சுரேஷ்குமார் அவர்களும் கலந்து கொண்டு, இந்த புதுமையான வைர நகைகளின் சிறப்புகள், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் சந்தையில் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.
பல ஆண்டுகளாக நம்பிக்கை, தரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் தங்கமயில் ஜுவல்லரி, இந்த உலகின் முதல் வைர நகை மூலம் இந்திய நகைத் துறைக்கு ஒரு புதிய திசையை காட்டியுள்ளது. உயர்தர வைரம், நவீன தொழில்நுட்பம் மற்றும் தனித்துவமான வடிவமைப்பு ஆகியவை இணைந்த இந்த முயற்சி, வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குகிறது.
இந்த அறிமுக நிகழ்வில் வாடிக்கையாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகள், வாடிக்கையாளர்கள் பலரும் கலந்துகொண்டு, தங்கமயில் ஜுவல்லரியின் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்திற்கு ஆதரவாக இருந்தனர்.
பாரம்பரியத்தின் நம்பிக்கையுடன், புதுமையின் பாதையில் தங்கமயில் ஜுவல்லரி தொடர்ந்து முன்னேறுகிறது.















