அமெரிக்காவின் அழுத்தம்; போதைப்பொருள் கடத்தல் மன்னன் மெக்சிக்கோவில் சுட்டுக்கொலை ...
'The Wedding of VIROSH' - டும் டும் டும் அறிவிப்பை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா!
நடிகர்கள் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா காதல் பற்றி அவர்கள் ஓபனாக சொல்லவில்லை என்றாலும், அது ஊரறிந்த ரகசியம்.
கடந்த அக்டோபர் மாதம் சத்தமே இல்லாமல், ஐதராபாத்தில் விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் இருவரின் நிச்சயதார்த்தமும் நடந்தது.
வரும் பிப்ரவரி 26-ம் தேதி, இருவருக்கும் திருமணம் என்கிற செய்திகள் கசிந்தாலும், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தனர்.

இந்த நிலையில் தான், நேற்று இருவரும் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை ஷேர் செய்திருக்கிறார்கள். அதில்...
"நாங்கள் எந்தப் பிளான் செய்வதற்கு முன்பும்... நாங்கள் எங்களுக்காக எதைத் தேர்ந்தெடுப்பதற்கும் முன்பும் நீங்கள் எங்களுடன் இருந்திருக்கிறீர்கள்.
அதீத அன்புடன், நீங்கள் எங்களுக்கு 'VIROSH' என்கிற பெயரைத் தந்தீர்கள்... எங்களை அப்படி அழைத்தீர்கள்.
அதனால், இன்று, நிறைந்த மனதுடன், உங்கள் முன்னிலையில் நாங்கள் இணைகிறோம்.
அதற்கு 'The Wedding of VIROSH' என்று பெயரிட விரும்புகிறோம்.
உங்களுடைய அதீத அன்பால் எங்களைப் பற்றியிருப்பதற்கு நன்றி.
எப்போதுமே நீங்கள் எங்களில் பாதி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களது திருமணம் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் நடக்க உள்ளதாம்.
அதன் பின், ரிசப்ஷன் வருகிற மார்ச் 4-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணாவில் நடைபெறுகிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.



















