செய்திகள் :

TNPL: சேப்பாக் அணியை வீழ்த்திய கோவை கிங்ஸ்; அழுத்தத்திலும் அதிரடி காட்டிய ராம் அரவிந்த்!

post image

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2026 தொடரில் நடைபெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், கோவை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சேப்பாக் அணி நிர்ணயித்த 168 ரன்கள் இலக்கை கோவை கிங்ஸ் வெற்றிகரமாக எட்டியது.

இந்தப் போட்டியில் சேப்பாக் அணியின் தோல்வி ஒரு பக்கம் இருந்தாலும், அந்த அணிக்குள் இருந்து கிடைத்த ஒரு நம்பிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அது ராம் அரவிந்தின் அதிரடி ஆட்டம்.

TNPL
TNPL

விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்த நேரத்தில் களமிறங்கிய ராம் அரவிந்த், அணியின் சூழ்நிலையை புரிந்துகொண்டு அதிரடியாக விளையாடினார். 32 பந்துகளில் 63 ரன்கள் குவித்து, சேப்பாக் அணியின் ஸ்கோரை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், தனது திறமையையும் நிரூபித்தார்.

இந்த சீசனின் தொடக்கத்தில் ராம் அரவிந்துக்கு எதிர்பார்த்த அளவிலான பெரிய இன்னிங்ஸ் அமையவில்லை. நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் ஒரு வீரரின் திறமையை நிரூபிக்க சில நேரங்களில் ஒரு சரியான வாய்ப்பும், ஒரு சரியான தருணமும் போதும். அந்த வாய்ப்பு கோவை கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ராம் அரவிந்த்துக்கு வந்தது.

இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய அவர், கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். அழுத்தமான சூழ்நிலையில் காட்டிய அவரது தன்னம்பிக்கையும், தாக்குதல் ஆட்டமும் தான் இந்த இன்னிங்ஸின் சிறப்பு.

இந்த 63 ரன்கள் வெறும் ஒரு போட்டியின் ஸ்கோர் அல்ல. தொடக்கத்தில் அமைதியாக இருந்த ஒரு வீரர், தனக்கான வாய்ப்பு கிடைத்தபோது அதை எப்படி பயன்படுத்தினார் என்பதற்கான பதில் இது.

ராம் அரவிந்த்
ராம் அரவிந்த்

TNPL போன்ற தொடர்களில் ஒரு சிறந்த இன்னிங்ஸ் ஒரு வீரரின் பயணத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ராம் அரவிந்தைப் பொறுத்தவரை, கோவைக்கு எதிரான இந்த ஆட்டம் அவரது அடுத்தடுத்த போட்டிகளுக்கான நம்பிக்கையை உருவாக்கும் முக்கியமான தருணமாக அமைந்துள்ளது.

TNPL 2026 : கோவை கிங்ஸின் கெத்து பவுலிங் - பேட்டிங்கில் கோட்டை விட்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.!

TNPL 2026 தொடரின் 21-வது லீக் போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது கோவை கிங்ஸ்.டாஸ் வென்ற கோவை அணி முதலில்... மேலும் பார்க்க

வரலாற்றுச் சாதனை: 23 ஆண்டுக்கால காத்திருப்பு; ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட்டை வென்ற வங்கதேசம்!

Qqடார்வினில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது வங்கதேச அணி. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் பதிவு செய்யும் முதல் வெற்றி இதுவ... மேலும் பார்க்க

TNPL 2026: மிரட்டிய சச்சின்.. 85 ரன்களில் சுருண்ட திருச்சி! 116 ரன்கள் வித்தியாசத்தில் கோவை வெற்றி!

டி.என்.பி.எல் 2026 தொடரின் 20-வது லீக் போட்டியில் கோவை கிங்ஸ் அணியும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியும் திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற திருச்சி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த... மேலும் பார்க்க

TNPL 2026: ராணிப்பேட்டையிலிருந்து TNPL வரை; அறிமுகப் போட்டியிலேயே 98 ரன்கள் விளாசிய ஹரி ராகவேந்திரா!

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம் வீரர் ஹரி ராகவேந்திரா, டிஎன்பிஎல் 2026 தொடரில் மதுரை பாந்தர்ஸ் அணிக்காக தனது அறிமுகப் போட்டியிலேயே 98 ரன்கள் விளாசி கவனம் ஈர்த்துள்ளார்.திண்டுக்கல் நத்தம... மேலும் பார்க்க

TNPL 2026 : ஹரிஹரன் அதிரடி; திண்டுக்கல் சரவெடியான பேட்டிங்; தோல்வி கண்டது சேலமும் - மதுரையும்.!

TNPL 2026 18-வது மற்றும் 19-வது லீக் போட்டிகள் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்ஸையும்,சேப்பாக் சூப்பர் கில... மேலும் பார்க்க

TNPL-ல் விதிமீறல்... ரஞ்சி வீரருக்கு ₹1 லட்சம் அபராதம்; தொடரிலிருந்து நீக்கம்! நடந்தது என்ன?

TNPL தொடரில், போட்டிக்கான தடை செய்யப்பட்ட பகுதியில் (Players and Match Officials Area - PMOA) அனுமதியின்றி மொபைல் போன் வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்ட ரஞ்சி வீரருக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வ... மேலும் பார்க்க