செய்திகள் :

TNPL 2026 : சொல்லி அடித்த சேப்பாக் கில்லீஸ் ; முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்ட மதுரை பாந்தர்ஸ்!

post image

TNPL 2026 தொடரின் 14-வது மற்றும் 15-வது லீக் போட்டிகளில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளும், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகளும் மோதின. இப்போட்டி திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. மாலை நேரம் தொடங்கிய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சேலம் ஸ்பார்டன்ஸை வீழ்த்தியது.

டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஹரி நிஷாந்த் முதல் ஓவரிலே நான்கு பவுண்டரிகளை விளாசி ஒரு மாஸ் தொடக்கத்தை கொடுத்தாலும் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அடுத்த ஓவரில் ரன் ஓடுவதில் தடுமாற்றம் ஏற்பட்டு அணியின் கேப்டன் அபிஷேக் "கோல்டன் டக்கில்" ரன் அவுட் ஆனார்.

சிறிது நேரத்தில் ஹரி நிஷாந்தும் 18(10) மிட்-விக்கெட்டில் கேட்ச் செய்யப்பட்டு வெளியேறினார். முதல் மூன்று ஓவர்களிலே தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழக்க, காற்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பக்கம் சாய தொடங்கியது. அடுத்து வந்த ஆர்.விவேக் மற்றும் பூபதி குமார் கூட்டணி 37 ரன்களை சேர்க்க அதை தனது பவுலிங்கால் தகர்த்தார் எம்.சிலம்பரசன்.

தொடர்ந்து விக்கெட்டுகள் சரிய, நாங்கள் இருக்கிறோம் என்று ஈஷ்வர் மற்றும் ஹரீஷ் சேலத்தின் ஸ்கோரை உயர்த்தினர். இவர்கள் கூட்டணி 68 ரன்கள் சேர்த்து உயிர் கொடுத்தது ஸ்பார்டன்ஸ்க்கு, சிறப்பாக ஆடிய ஹரீஷ் 57*(35) அரைசதம் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் என்ற ஸ்கோரை சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-க்கு இலக்காக வைத்தது சேலம் ஸ்பார்டன்ஸ். சேப்பாக் சூப்பர் கில்லீஸின் எம். சிலம்பரசன் மற்றும் பிரேம் குமார் சிறப்பாக பந்து வீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

அதிரடி காட்டிய ஜெகதீசனின் 78 ரன்கள், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி எளிமையாக வெற்றி பெற வித்திட்டது..!

இரண்டாவதாக ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடக்கத்தில் மோகித் ஹரிஹரன் மற்றும் கே.ஆஷிக் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து சரிவை சந்தித்தது. இருப்பினும், கேப்டன் என்.ஜெகதீசன் சேஸிங் பாதையின் ஒரு பகுதியை தனது கரங்களில் பிடித்துக்கொண்டார். இவருக்கு பக்கபலமாக மற்றொரு பகுதியை ஸ்வப்னில் சிங் பிடித்துக்கொள்ள, 26 பந்துகளில் 45 ரன்களை விளாசி சேலம் ஸ்பார்டன்ஸின் பந்து வீச்சை சிதறடித்தார்.

இறுதியாக வெற்றிக்கு 3 ரன்களே தேவைப்பட்ட நிலையில் ஸ்வப்னில் சிங் ஆட்டமிழந்ததால், ஆட்டத்தின் முடிவு மேலும் சுவாரசியமானது.

அதன் பின் வந்த தினேஷ் ராஜ் பிசக்கில்லாமல் ஆடி ஒரு பிரம்மாண்ட சிக்ஸரை அடித்து மேட்ச்சை முடித்து வைத்தார். இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. இதில் சிறப்பாக ஆடிய என்.ஜெகதீசன் 78(39) "மேன் ஆஃப் தி மேட்ச்" பெற்றார்.

முதல் இடத்தை தக்கவைத்தது 'மதுரை பாந்தர்ஸ்"

திண்டுக்கல் டிராகன்ஸ்-ன் முயற்சி வீண்..!

15-வது லீக் போட்டி மழைக் காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாகி 8.30 மணி அளவில் தான் தொடங்கியது. 21 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ் .

18 ஓவர்கள் மட்டுமே என்று முடிவான இப்போட்டியில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. மதுரை பாந்தர்ஸின் அட்டகாசமான தொடக்கம் பவர்ப்ளேயில் ஒரு நல்ல ஸ்கோரை விளாசியிருந்தது. ராம்குமார் 15 பந்துகளில் 45 ரன்களை குவித்தார். ராம்குமார் மற்றும் மகாதேவனின் கூட்டணி 55 ரன்கள் இருந்த நிலையில், தனது பவுலிங்கால் ராம்குமாரின் விக்கெட்டை எடுத்து பார்ட்னர்ஷிப்பை களைத்தார் சந்தீப் வாரியர்.

பின் சித்தார்த் மகாதேவன் 22 ரன்களில் விஜு அருளின் பந்து வீச்சால் வெளியேறினார். இரு விக்கெட்களினால் ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது திண்டுக்கல் டிராகன்ஸ். இந்நிலையில் என்.எஸ்.சதுர்வேத் மற்றும் ஆதிக் - ன் கூட்டணி 50 ரன்களை எடுத்து தொங்கிக்கொண்டிருந்த அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

முக்கியமான கட்டத்தில் மீண்டும் பந்து வீசிய விஜு அருள், 42 ரன்கள் எடுத்திருந்த சதுர்வேத்தின் விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து அதீக் உர் ரஹ்மாமனயும் ஆட்டமிழக்கச் செய்து சந்தீப் வாரியர் தனது இரண்டாவது விக்கெட்டை கைப்பற்றினார். இது திண்டுக்கல் அணிக்கு மேலும் பலம் சேர்த்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதன் மூலம் 18 ஓவர்களில் 171 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

திண்டுக்கல்லின் முயற்சி வீண்..

மீண்டும் வெற்றி பெற்றது மதுரை பாந்தர்ஸ்..!

வெற்றியை நோக்கி களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் முதல் விக்கெட்டுக்கு 55 ரன்களை சேர்த்திருந்தது சிவம் சிங் மற்றும் வீ.கே.வினீத்-ன் கூட்டணி. ரோஹன் புத்ரா வினீத்தின் விக்கெட்டை எடுத்து இந்த பார்ட்னர்ஷிப்பை தகர்த்தெறிந்தார்.

தொடர்ந்து விக்கெட்டுகள் சரிய தொடங்க ஆரம்பித்தது. கேப்டன் இந்திரஜித்தும் சரவணனின் பவுலிங்கில் அவுட் ஆனார். பின்னர், சிறப்பாக விளையாடி வந்த சிவம் சிங்கின் விக்கெட்டையும் ரோஹன் புத்ரா வீழ்த்தி மீண்டும் ஒரு திருப்புமுனையை நிகழ்த்தினார்.

சிவம் சிங் 26 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். ஹன்னி சைனி 14 பந்துகளில் 20 ரன்கள் விளாசி ஆட்டத்தின் வேகத்தை கொஞ்சம் கூட்டினாலும் 'டீப் மிட்-விக்கெட்' திசையில் அதீக் உர் ரஹ்மான் பிடித்த ஒரு அற்புதமான கேட்ச்சினால் அவரது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. ஆட்டத்தின் கடைசி கட்டங்களில் மதுரை அணியின் பவுலர்கள் மிகுந்த நிதானத்துடன் செயல்பட்டனர்.

இதில் சிறப்பாக பந்து வீசிய ரோஹன் ரவி புத்ரா 'மேன் ஆஃப் தி மேட்ச்' பெற்றார்.

TNPL 2026: திருச்சியின் பந்துவீச்சில் சரிந்த நெல்லை... திருப்பூரின் துரத்தலில் தடுமாறிய கோவை!

TNPL 2026 தொடரின் 12-வது மற்றும் 13-வது லீக் போட்டிகள் திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன. இதில் நெல்லை ராயல் கிங்ஸை திருச்சி கிராண்ட் சோழாஸ் 45 ரன்கள் வித்தியாசத்திலும், கோவை கிங்ஸை திருப்... மேலும் பார்க்க

TNPL 2026 : சொதப்பிய சேலம் ஸ்பார்டன்ஸ்‌ - பவுலிங்கில் ஆதிக்கத்தை இறக்கியது மதுரை பாந்தர்ஸ்!

சேலம் ஸ்பார்டன்ஸ் vs மதுரை பாந்தர்ஸ்-க்கான 11 ஆவது TNPL போட்டி திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 20 ஓவர்களுக்கு மதுரை பாந்தர்ஸ் அணி 195 ரன்கள் குவித்திருந்தனர். இரண்டாவதாக இறங்கிய ... மேலும் பார்க்க

`பூரணை நீங்க எடுத்துக்குங்க; ஹர்திக்க குடுங்க' - LSG யின் டிரேட் டீல்-க்கு ‘ஓகே’ சொல்லுமா மும்பை?

ஐபிஎல் 2027 போட்டிகளுக்கு இன்னும் காலம் இருக்கிறது... ஆனால் அடுத்த சீசனுக்கான டிரேட் பேச்சுகள் எப்போதோ சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்ட்யாவின் டிரேட் பற்றி ... மேலும் பார்க்க

TNPL 2026: ஒரே நாள்... இரு அதிரடி சேஸ்! திண்டுக்கல்லில் தெறிக்கவிட்ட சேப்பாக் –திருப்பூர் அணிகள்!

TNPL 2026-ல் ஆகஸ்ட் 9-ம் தேதி திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் நடந்த இரண்டு போட்டிகளும் பேட்டிங் அதிரடியால் ரசிகர்களை கட்டிப் போட்டன. பிற்பகலில் நடந்த 9-வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸை 7 ... மேலும் பார்க்க

TNPL 2026: 40 பந்துகளில் சதம்... கோவையைச் சிதறடித்த சதுர்வேத்; மதுரையின் மிரட்டல் சேஸ்!

திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற TNPL 2026-ன் 7-வது போட்டியில், கோவை கிங்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் 239 ரன்கள் குவிக்க, அதை 19.3 ஓவர்களில் துரத்த... மேலும் பார்க்க

பிரிட்டன் குடியுரிமை; ஐபிஎல் போட்டியில் பாகிஸ்தான் வீரரா? - யார் இந்த முகமது அமீர்?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது பிரிட்டன் குடியுரிமை ... மேலும் பார்க்க