திருப்பரங்குன்றம் விவகாரம்: ``அயோத்தி மாதிரி தமிழகம் மாறுவதில் தவறு இல்லை'' - நய...
Trump: `அமைதிக்கான பரிசு' - ட்ரம்ப் மகிழ்ச்சி; நோபல் பரிசு மிஸ் ஆனாலும் FIFA ஆறுதல்
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து ட்ரம்ப் கேட்டு வந்த ஒன்று... ஆசைப்பட்டு வந்த ஒன்று, 'அமைதிக்கான நோபல் பரிசு'.
ஆனால், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரியா மச்சாடோவிற்கு வழங்கப்பட்டது. இதில் ட்ரம்ப்பிற்கு ஏமாற்றம் தான்.
ட்ரம்பிற்கு பரிசு
இந்த நிலையில் தற்போது FIFA அமைப்பு ட்ரம்பிற்கு ஃபிஃபா அமைதி பரிசை வழங்கி உள்ளது.
ஃபிஃபா அமைப்பு இப்படி ஒரு பரிசை வழங்குவது இதுவே முதல் முறை. அதுவும் அந்தப் பரிசு ட்ரம்பிற்கு வழங்கப்பட்டுள்ளது மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது.
ட்ரம்பிற்கு இந்தப் பரிசு வாஷிங்டன்னில் உள்ள கென்னடி சென்டரில் நடந்த 2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை ட்ராவில் வழங்கப்பட்டுள்ளது.

எதற்கு இது?
உலக அளவில் அமைதிக்கான முயற்சி மற்றும் அதற்கான பேச்சுவார்த்தையே முன்னெடுத்தது போன்றவற்றிற்கு ட்ரம்பிற்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக ஃபிஃபா அமைப்பு கூறியுள்ளது.
இந்தப் பரிசிற்கு நன்றி தெரிவித்துள்ள ட்ரம்ப் தனக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதைகளில் இதுவும் ஒன்று என்றும், தனது ஆட்சிக்காலத்தில் பல லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
எது எப்படியோ, ஒரு வழியாக ட்ரம்பிற்கு அமைதி பரிசு கிடைத்துவிட்டது.
வாழ்த்துகள் ட்ரம்ப்!













