செய்திகள் :

TVK: `கியூ-ஆர் கோடு பாஸ்; 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி!' - புதுச்சேரி கூட்டத்துக்கு தயாராகும் தவெக

post image

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன.

அந்த வரிசையில் த.வெ.க தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். சமீபத்தில் கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தால் அங்கு தொடர்ந்து ரோடு ஷோ நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை.

அதனால் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த த.வெ.க தரப்பில் அனுமதி கேட்டு, புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யிடம் கடிதம் அளித்தனர்.

ஆனால் ரோடு ஷோவுக்கு விதிமுறைகள் வழங்குவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, புதுச்சேரி காவல்துறை அனுமதி கொடுக்க மறுத்து விட்டது.

மாநாடு நடைபெறும் மைதானத்தில் பூஜை
மாநாடு நடைபெறும் மைதானத்தில் பூஜை

அதையடுத்து த.வெ.க பொதுச் செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா முதல்வர் ரங்கசாமி, காவல்துறை டி.ஐ.ஜி உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து, ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்காவது ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.

ஆனால் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்க முடியாது என்று உறுதியாக மறுத்துவிட்ட புதுச்சேரி அரசு, மூடப்பட்ட அரங்கில் பொதுக்கூட்டம் வேண்டுமானால் நடத்திக் கொள்ளுங்கள் என்று புதுச்சேரி காவல்துறை சார்பில் ஆலோசனை கூறப்பட்டது.

அதையடுத்து சீனியர் எஸ்.பி கலைவாணனை அவரது அலுவலகத்தில் சந்தித்த த.வெ.க நிர்வாகிகள், உப்பளம் துறைமுக மைதானத்தில் டிசம்பர் 9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ள அனுமதி கேட்டு மனு அளித்தனர்.

அந்த மனுவில், `கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே வருவார்கள். அவர்கள் அனைவருக்கும் `கியூ-ஆர்’ கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட்டுவிடும்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

அதற்கு காவல்துறை அனுமதி கொடுத்த நிலையில், அந்த இடத்திற்கு அனுமதி கேட்டு பொதுப்பணித்துறைக்கு மனு அளித்தனர்.

அதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் உப்பளம் துறைமுக மைதானத்தை ஆய்வு செய்த டி.ஐ.ஜி சத்தியசுந்தரம் மற்றும் சீனியர் எஸ்.பி கலைவாணன், பொதுக்கூட்டத்திற்காக த.வெ.க போட்டிருந்த வியூகங்களை கேட்டறிந்தனர்.

அதன் பிறகு டிசம்பர் 9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போன்றவர்களை தனித்தனியாக சந்தித்த புஸ்ஸி ஆனந்த், பொதுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கினார்.

தவெக பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம்
தவெக பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம்

அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறும் உப்பளம் துறைமுக மைதானத்தில் சிறப்பு பூஜைகள் செய்து, சீரமைக்கும் பணியில் இறங்கினர் த.வெ.க நிர்வாகிகள்.

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அந்த மைதானத்தில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

அதனால் முதல் கட்டமாக அங்கு லாரிகள் மூலம் மண் எடுத்துவந்து கொட்டப்பட்டு, ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டு அந்த இடத்தை சமப்படுத்தும் பணி வேகவேகமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு நிபந்தனைகளுடன் புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியிருப்பதால், புஸ்ஸி ஆனந்தே முன்னின்று பொதுக்கூட்ட மைதானத்தை சீரமைக்கும் பணிகளை செய்து வருகிறார்.

திருப்பரங்குன்றம்: "உள்நோக்கம் கொண்ட தீர்ப்பு; மதக் கலவர முயற்சி" - முத்தரசன் காட்டம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதியளித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு, பெரும் விவாதங்களுக்கு வித்திட்டது. இந்துத்துவ அமைப்புகள் மற்றும் பாஜகவை... மேலும் பார்க்க

கூட்டணி `டீல்’ - ராகுல் காந்தியை சந்தித்த சபரீசன்! திடீர் விசிட்டின் பின்னணி என்ன?

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்ட... மேலும் பார்க்க

முறையான பராமரிப்பின்றி இருக்கும் கும்பகோணம் புதிய பேருந்து நிலையம்... அவதியுறும் பொதுமக்கள்!

கும்பகோணம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லையென்று மக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர். இதுகுறித்து அங்கிருந்த பயணிகளிடம் கேட்கும் போது," கும்பகோணம் பேருந்து நிலையம் மிக ... மேலும் பார்க்க

Indigo: திணறும் இண்டிகோ; விண்ணைத் தொட்ட விமான டிக்கெட் விலை - மத்திய அரசு நடவடிக்கை!

இண்டிகோ நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் நேற்றையதினம் ஆயிரத்துக்கும் மேலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் விமான ரத்துகள் தொடர்கிறது. நிலைமை இயல்புநிலைக்குத் திரும்ப டிசம்பர் 10-15 வரை ஆக... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: ``அயோத்தி மாதிரி தமிழகம் மாறுவதில் தவறு இல்லை'' - நயினார் நாகேந்திரன்

திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரம் மிகப்பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது. தமிழ்நாடு தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் விவாதப் பொருளாகியிருக்கிறது. தமிழகத்தை அயோத்தியாக மாற்றுவதற்கு... மேலும் பார்க்க