செய்திகள் :

TVK: '25 ஆண்டுகளாக அதிமுக கோட்டை' - கிணத்துக்கடவைக் கைப்பற்றிய தவெக விக்னேஷின் பின்னணி என்ன?

post image

சட்டமன்றத் தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.க-வில் சபரி கார்த்திகேயன், அ.தி.மு.க-வில் செ.தமோதரன், த.வெ.க-வில் விக்னேஷ், நா.த.க-வில் பானுப்பிரியா போட்டியிட்டனர்.

இத்தொகுதியில் உள்ள 3 லட்சத்து 5 ஆயிரத்து 878 வாக்காளர்களில்,  2 லட்சத்து 66 ஆயிரத்து 349 பேர் வாக்களித்தனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அனைத்து சுற்றுகளிலும் த.வெ.க. வேட்பாளர் விக்னேஷ் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார்.

வாக்கு எண்ணிக்கை இறுதியில் 99 ஆயிரத்து 950 வாக்குகள் பெற்ற விக்னேஷ், 11 ஆயிரத்து 710 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் கோவையில் த.வெ.க. தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

88 ஆயிரத்து 240 வாக்குகள் பெற்ற தி.மு.க. வேட்பாளர் சபரி கார்த்திகேயன் இரண்டாம் இடத்தையும், 67 ஆயிரத்து 789 வாக்குகள் பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் செ.தாமோதரன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இந்தத் தொகுதியில் 4 முறை வெற்றி பெற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இந்தத் தொகுதியில் இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் அ.தி.மு.க 9 முறையும், தி.மு.க. 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக 2001 ம் ஆண்டு முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த அ.தி.மு.க-வின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்துள்ளது.

விக்னேஷ்
விக்னேஷ்

கோவை சுந்தராபுரம் அருகேயுள்ள மச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (38). பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், சிசிடிவி கேமரா விற்பனை கடை நடத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் மக்கள் மன்றத்தில் பணியாற்றி வந்த இவர், த.வெ.க-வில் கோவை தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார்.

முதல் முறையாக தேர்தல் களம் கண்ட விக்னேஷ், அ.தி.மு.க. கோட்டையாகக் கருதப்படும் கிணத்துக்கடவு தொகுதியில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

அவிநாசி: இ-சேவை மையம் நடத்தும் கணவர்; எல்.முருகனை வீழ்த்தி வாகை சூடிய இல்லத்தரசி! யார் இந்த கமலி?

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலா மணி, அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ... மேலும் பார்க்க

ஈரோட்டில் வாஷ் அவுட்டான திமுக கூட்டணி; அமைச்சர் உட்பட 8 பேரை வீழ்த்திய த.வெ.க!

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிப்பாளையம், மொடக்குறிச்சி, பவானி, பவானிசாகர் தனி, அந்தியூர், பெருந்துறை என மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஈரோடு மேற்கு, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்ப... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம்: சோபிக்காத த.மா.கா; சம்பவம் செய்த சக்கரபாணி - 7வது முறை வெற்றி சாத்தியமானது எப்படி?

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார், சக்கரபாணி. தொகுதி முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் என எல்லாவற்றையும் செய்து தொகுதியைத் தன் கன்ட்ரோலி... மேலும் பார்க்க

ஓ.பி.எஸ்ஸிற்கு ’கிலி’யை ஏற்படுத்திய த.வெ.க; திக் திக் வாக்கு எண்ணிக்கை; போராடி கரை சேர்ந்த தி.மு.க!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க -வில் இணைந்து போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார் எனும்போது வெல்வாரா? தோற்பாரா? என்ற எதிர்பார்ப்புகள் எகிறியது. அ.தி.மு.க-வால் இவ்வளவு காலமும் வெற... மேலும் பார்க்க

TVK: சீட் தராத திமுக; பழி தீர்த்த கட்சித்தாவல்; சூலூரை வென்ற தவெக சுகுமாரின் பின்னணி என்ன?

சூலூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 616 வாக்காளர்கள் உள்ள நிலையில்,2 லட்சத்து 71 ஆயிரத்து 567 பேர் வாக்களித்தனர். இதில் 90 ஆயிரத்து 531 வாக்குகள் பெற்ற த.வெ.க. வேட்பாளர் சுகுமார... மேலும் பார்க்க

TVK: 'சென்னைவாசி, சிபி சத்யராஜின் ஆதரவு' - சிங்காநல்லூரை வென்ற ஸ்ரீ கிரி பிரசாத்தின் பின்னணி என்ன?

சிங்காநல்லூர் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 69 ஆயிரத்து 941 வாக்காளர்களில், தேர்தலில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 746 பேர் வாக்களித்தனர். இதில் த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீ கிரி பிரசாத் 84 ஆயிரத்து 163 வாக்... மேலும் பார்க்க