செய்திகள் :

UPSC / TNPSC: கோயம்புத்தூரில் இலவசப் பயிற்சி முகாம் - அனுமதி இலவசம்!

post image

'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து கோயம்புத்தூரில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.

'நீங்களும் ஆகலாம் IAS' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள SITRA ஆடிட்டோரியத்தில் நடக்க இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது.

UPSC / TNPSC இலவசப் பயிற்சி முகாம்
UPSC / TNPSC இலவசப் பயிற்சி முகாம்

இந்த நிகழ்வில் திரு. ஆதில் பெய்க் (சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர் - King Makers IAS அகாடமி), King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு போட்டித் தேர்வுகள் குறித்த ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள். இதில் டாக்டர். சி. சைலேந்திர பாபு, (ஐபிஎஸ் (ஓய்வு) தமிழ்நாடு முன்னாள் டிஜிபி/ காவல் துறை தலைவர்) சிறப்புரை ஆற்றயிருக்கிறார்.

ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இதுபோன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம் எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

UPSC / TNPSC இலவசப் பயிற்சி முகாம்
UPSC / TNPSC இலவசப் பயிற்சி முகாம்

இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

'நான் ஐ.ஏ.எஸ் பேசுறேன்'னு சொன்னேன்... அம்மா அழுதாங்க.!"- யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற மௌலீஸ்வரன்

இந்த சக்சஸ் என்னோடது மட்டுமில்லை சார்... அம்மாவுக்கும் இதுல நிறைய பங்கிருக்கு. ஐ.ஏ.எஸ் ஆகணும்ங்கிறது அவங்க கனவு. நானாவது அதை எட்டிப்பிடிக்கணும்னு நினைச்சாங்க. நான் கருவுல இருக்கிற காலத்துல இருந்து 'நீ... மேலும் பார்க்க

மருத்துவர் டூ ஐஏஎஸ் - கோச்சிங் இல்லாமல் சிவில் சர்வீஸில் முதலிடம்; யார் இந்த அனுஜ் அக்னிஹோத்ரி?

2025-ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார் அனுஜ் அக்னிஹோத்ரி.25 வயதான அனுஜ் அக்னிஹோத்ரி, ஜோத்பூர் எய்ம்ஸ் மர... மேலும் பார்க்க

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள்: மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி 2-ம் இடம் பிடித்து அசத்தல்!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), 2025-ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகளை இன்று (மார்ச்.6) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. நேர்முகத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ... மேலும் பார்க்க

"போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற முதன்மையான பண்பு இதுதான்" - King Makers IAS சத்யஶ்ரீ பூமிநாதன்

'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.'UP... மேலும் பார்க்க

`ஏதேனும் திருத்தங்கள் இருந்தால்.!' - JEE main 2-ம் பருவத் தேர்வு.! NTA-யின் அறிவிப்பு

JEE main 2-ம் பருவத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 25-ம் தேதி நிறைவு பெறுகிறது. ஜனவரியில் நடந்த முதல் பருவத் தேர்வை எழுதியவர்கள் இந்தத் தேர்வையும் எழுதலாம். புதிய தேர்வர்களும் எழுதலாம். முதல் ... மேலும் பார்க்க