செய்திகள் :

Venezuela: ஒத்திகை முதல் Spy வரை; அதிபர் மதுரோவைச் சிறைப்பிடிக்க அமெரிக்கா எப்படித் திட்டமிட்டது?

post image

வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவைச் சிறைப்பிடித்து அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றுள்ளது அமெரிக்காவின் ட்ரம்ப் அரசு.

அமெரிக்க நேரப்படி, நேற்று நள்ளிரவில், சிறைப்பிடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி எப்படி சிறைப்பிடிக்கப்பட்டனர் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கைது நடந்தது எப்படி?

வெனிசுலாவின் தலைநகரம் கராகஸ். அங்கே உள்ள பலமான பாதுகாப்புகள் கொண்ட டியுனா கோட்டையில் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் உறங்கிக் கொண்டிருந்திருக்கின்றனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட நிக்கோலஸ் மதுரோ
சிறைப்பிடிக்கப்பட்ட நிக்கோலஸ் மதுரோ

அப்போது டியுனா கோட்டையில் நுழைந்த அமெரிக்க ராணுவப்படை மதுரோ மற்றும் அவரது மனைவியை பெட் ரூமிலேயே சிறைப்பிடித்து உள்ளனர்.

மிகுந்த ராணுவ பாதுகாப்பு உள்ள டியுனா கோட்டையில் அமெரிக்க ராணுவம் நுழைந்தது. அதிபரையும், அவரது மனைவியையும் கைது செய்தது என அனைத்தும் அரை மணிநேரத்திற்குள் நடந்து முடிந்திருக்கிறது.

இந்தத் தகவலை CNN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உறுதி செய்த ட்ரம்ப்

Fox News செய்தி நிறுவனத்தின் தொலைபேசி நேர்காணலில், இந்த விஷயத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்புமே கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி உள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் ட்ரம்ப், "மதுரோவைச் சிறைப்பிடிக்கும்போது, அவர் ஒரு கோட்டையில் இருந்தார். இந்த ஆபரேஷனில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கூட கொல்லப்படவில்லை என்பது ஆச்சரியமான விஷயம்.

இரண்டு பேர் காயமடைந்தனர். ஆனால், அவர்களுமே இப்போது நன்றாக இருக்கின்றனர்" என்று பேசியுள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

பக்கா பிளான்

தற்போது வெளியாகி வரும் தகவலின்படி, வெனிசுலா மீதான தாக்குதலோ, அதிபர் சிறைப்பிடிப்போ சட்டென நடந்த விஷயம் அல்ல. அனைத்தும் பக்காவாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் சிறிய குழு ஒன்று கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே வெனிசுலாவில் இருந்து வந்திருக்கிறது. அவர்கள் மதுரோவின் தினசரி நடவடிக்கைகளைத் தொடர்ந்து ரிப்போர்ட் செய்து வந்திருக்கிறது.

அடுத்ததாக, மதுரோவின் டியுனா கோட்டை போன்ற செட் ஒன்றை அமைத்து, அவரைக் கைது செய்வதற்கான ஒத்திகைகளைப் பார்த்திருக்கிறது அமெரிக்க ராணுவப்படை.

மதுரோவிற்கு மிக நெருக்கமான நபர் ஒருவர் அமெரிக்காவின் ஆளாம். அவர்தான் ஆபரேஷனின் போது, மதுரோ சரியாக எங்கிருக்கிறார் என்பதைக் காட்டிக் கொடுத்திருக்கிறார்.

நான்கு நாள்களுக்கு முன்பே ஒப்புதல்

ட்ரம்ப் நான்கு நாள்களுக்கு முன்பே, இந்த ஆபரேஷனுக்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறார். ஆனால், வெனிசுலாவில் காலநிலை சரியில்லாததால், ஆபரேஷன் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள மார்-எ-லாகோ கிளப்பில் இருந்துகொண்டே, மதுரோ சிறைப்பிடிப்பை ட்ரம்ப் லைவ்வாக பார்த்திருக்கிறார்.

டெல்சி ரோட்ரிக்ஸ் | Delcy Rodriguez
டெல்சி ரோட்ரிக்ஸ் | Delcy Rodriguez

மதுரோ முதலில் தப்பிக்கத்தான் முயன்றிருக்கிறார். ஆனால், அந்த ரூம் மூடப்பட்டிருந்ததால், அவரால் வெளியேற முடியவில்லை.

தற்போது வெனிசுலாவின் இடைக்கால அதிபராக அந்த நாட்டின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை நியமித்திருக்கிறது அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம்.

இப்போது சிறைப்பிடிக்கப்பட்ட மதுரோ நியூயார்க்கில் இருக்கிறார். அடுத்தடுத்து என்ன நடக்க உள்ளது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

பொங்கள் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு: ``இதுதான் திராவிட மாடல் அரசு" - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அ... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகை: ``திமுக அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது" - அன்புமணி ராமதாஸ் காட்டம்

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்டாலின்இந்நிலையில், தமிழ்நா... மேலும் பார்க்க

வெனிசுலா அதிபர் சிறைப்பிடிப்பு: கண்டனமும் பேச்சுவார்த்தை அழைப்புகளும்; உலக நாடுகள் சொல்வது என்ன?

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மாதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்ததற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.ரஷ்யா - "வாஷிங்டனின் இந்த முடிவு கண்டனத்திற்குரியது. வாஷிங்டன் கூற... மேலும் பார்க்க