செய்திகள் :

What To Watch: 'கர' முதல் 'பேட்ரியாட்' வரை! - இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி-யில் என்ன பார்க்கலாம்?

post image
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள் இவைதான்!

கர - தமிழ்:

ஐசரி கணேஷ் தயாரிப்பில் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கியுள்ள 'கர' திரைப்படத்தில் தனுஷ், மமிதா பைஜூ, சுராஜ் வெஞ்சாரமூடு, கே.எஸ். ரவிக்குமார், பிரித்வி பாண்டியராஜன், ஸ்ரீஜா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 30 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Kara Review | கர விமர்சனம்
Kara Review | கர விமர்சனம்

பேட்ரியாட் - மலையாளம்

மகேஷ் நாராயணன் எழுதி இயக்கியுள்ள 'பேட்ரியாட்' திரைப்படம் மம்மூட்டி, மோகன்லால், பகத் பாசில், நயன்தாரா, ரேவதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் நேற்று (மே 1) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. 18 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் இது.

ஜெட்லி - தெலுங்கு:

ரித்தீஷ் ரானா இயக்கிய படம் 'ஜெட்லி'. சத்யா, ரியா சிங்கா, வெண்ணிலா கிஷோர், விவா ஹர்ஷா, கபிர் துகன் சிங் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் நேற்று (மே 1) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Ek Din
Ek Din

ஏக் தின் - இந்தி: ஆமீர் கான் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சுனில் பாண்டே இயக்கத்தில், ஆமீர் கானின் மகன் ஜுனைத் கான், சாய் பல்லவி, குணால் கபூர் ஆகியோர் இணைந்து நடித்த 'ஏக் தின்' திரைப்படம் நேற்று (மே 1) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

தி டெவில் வியர்ஸ் பிராடா 2 - ஆங்கிலம்

'தி டெவில் வியர்ஸ் பிராடா' திரைப்படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் டேவிட் ஃப்ராங்கள் இயக்கத்தில் மேரில் ஸ்ட்ரீப், ஆன் ஹாத்வே, எமிலி பிளண்ட், ஸ்டான்லி துச்சி ஆகியோரின் நடிப்பில் நேற்று (மே 1) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

TN 2026
TN 2026

ஓ.டி.டி ரிலீஸ்:

க்ளோரி (Glory) - Netflix

டிஎன் 2026 (TN 2026) - Amazon Prime Video / Aha

முஸ்தபா முஸ்தபா (Mustafa Mustafa) - Aha

ஆடு 3 (Aadu 3) - ZEE5

தி கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட் (The Kerala Story 2: Goes Beyond) - ZEE5

தமிழ் சினிமாவின் தந்தை `நடராஜ முதலியார்' - வரலாற்றை ஆவணப்படுத்திய இயக்குநர்!

தமிழ் சினிமா வரலாற்றின் தொடக்கம் இயக்குநர் நடராஜ முதலியார். இன்று பெரிய ஆலமரமாகக் கிளைகளோடு படர்ந்து விரிந்திருக்கும் தமிழ் சினிமாவுக்கு முதல் விதை போட்டவர் நடராஜ முதலியார்தான். தமிழ் சினிமாவின் முதல்... மேலும் பார்க்க

"என் வாழ்க்கையை மாற்றிய திரைப்படத்தின்..." - நடிகர் அபிஷன் ஜீவிந்த் நெகிழ்ச்சி; வைரலாகும் வீடியோ!

நடிகர் அபிஷன் ஜீவிந்த் இயக்குநராக அறிமுகமான படம் `டூரிஸ்ட் ஃபேமிலி'. இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள... மேலும் பார்க்க

திருமங்கலம்: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு 'சூப்பர் ஸ்டார் ரஜினி கோவிலில்' 16 வகை அபிஷேகம்! | Photos

ரஜினி கோவிலில்ரஜினி கோவிலில்ரஜினி கோவிலில்ரஜினி கோவிலில்ரஜினி கோவிலில்ரஜினி கோவிலில்ரஜினி கோவிலில்ரஜினி கோவிலில்ரஜினி கோவிலில்ரஜினி கோவிலில்ரஜினி கோவிலில்ரஜினி கோவிலில்ரஜினி கோவிலில்"ஆதவ் அர்ஜுனாவுக்க... மேலும் பார்க்க

Ajith: "'GBU' மூலம் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கியுள்ளோம், இன்னும்.!"- அஜித்தை வாழ்த்திய ஆதிக்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் அஜித் இன்று தனது 55-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் ஆதிக் ர... மேலும் பார்க்க

Exam web series: ``ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில்..." - வெளிப்படையாகப் பேசிய துஷாரா விஜயன்!

'சார்பட்டா பரம்பரை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க நாயகியாக உயர்ந்த துஷாரா விஜயன், தற்போது தனது அடுத்த மைல்கல்லாக எக்ஸாம் என்ற வெப் சீரீஸ் உலகிற்குள் தடம் பதிக்கிறார். புஷ்கர் - காயத்ர... மேலும் பார்க்க

மலேசியா ஷூட்டிங்கில் திரண்ட ரசிகர்கள்; அஜித் செய்த மேஜிக் - பில்லா ரீரிலீஸ் விஷ்ணுவர்தன் Exclusive

அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக நாளை 'பில்லா' ரீரிலீஸ் ஆகிறது. 'அமராவதி' அஜித்தை ஸ்டைலிஷ்ஷான அஜித் ஆக மாற்றிய படம் 'பில்லா' விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் 'பில்லா' இப்போது கலர்... மேலும் பார்க்க