செய்திகள் :

WPL 2026: '2வது முறை சாம்பியன்' - RCB சாதனை! தொடரும் டெல்லி அணியின் 'பைனல்' சோகம்

post image

மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரின் 2026-ம் ஆண்டுக்கான இறுதிப்போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் டெல்லி அணி தொடர்ச்சியாக நான்காவது முறையாக இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

போட்டியின் ஆரம்பத்தில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா பௌலிங்கைத் தேர்வு செய்தார். முதலில் களம் புகுந்த டெல்லி அணிக்கு லிசெல் லீ மற்றும் சஃபாலி வர்மா ஜோடி அதிரடியான தொடக்கத்தை அளித்தது. பவர் பிளேயின் கடைசி ஓவரில் சஃபாலி வர்மா ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து லிசெல் லீயும் வெளியேற டெல்லிக்குச் சிறு நெருக்கடி ஏற்பட்டது.

ஜெமிமா ரோட்ரிக்ஸ்
ஜெமிமா ரோட்ரிக்ஸ்

அதன்பின் களமிறங்கிய லாரா வோல்வார்ட் 25 பந்துகளில் 44 ரன்களும், அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 37 பந்துகளில் 57 ரன்களும் எடுத்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இறுதியில் ஹென்றி 35 ரன்கள் சேர்க்க, டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 203 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

கடினமான இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணிக்கு ஜி. ஹாரிஸின் விக்கெட் ஆரம்பத்திலேயே சரிந்தது. எனினும், ஜார்ஜியா வோல் மற்றும் கேப்டன் ஸ்மிருதி மந்தனா இணைந்து டெல்லி பந்துவீச்சாளர்களைத் திணறடித்தனர். இருவரும் 165 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

ஜார்ஜியா வோல் 16-வது ஓவரில் ஆட்டமிழந்த பிறகு, ரிச்சா கோஷ் (6), நதின் டி கிளர்க் (7) மற்றும் ராதா யாதவ் (12) ஆகியோர் சொற்ப ரன்களைச் சேர்த்தனர். கடைசி ஓவரில் பெங்களூரு அணி த்ரில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

டெல்லி மகளிர் கிரிக்கெட் அணி
டெல்லி மகளிர் கிரிக்கெட் அணி

டெல்லியின் 'பைனல்' சோகம்: எட்டாக் கனியான கோப்பை

2023-ம் ஆண்டு தொடங்கப்பட்ட WPL தொடரின் அனைத்து இறுதிப்போட்டிகளுக்கும் முன்னேறிய ஒரே அணி என்ற பெருமையைத் டெல்லி கேப்பிடல்ஸ் பெற்றிருந்தாலும், கோப்பையை வெல்வது அவர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது:

  • 2023: மும்பை இந்தியன்ஸிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.

  • 2024: பெங்களூரு அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.

  • 2025: மும்பை இந்தியன்ஸிடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.

  • 2026: பெங்களூரு அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.

தொடர்ந்து நான்கு முறை இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியைத் தழுவிய டெல்லி அணியினருக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது. பெங்களூரு அணியின் இந்த வெற்றி அந்த அணி ரசிகர்களை உற்சாகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

PT Usha: பி.டி.உஷா கணவர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சேர்ந்த பிரபல தடகள வீரங்கனை பி.டி. உஷா. சர்வதேச தடகளப் போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டியிட்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர். தற்போது இவர் இந்திய ஒலிம்பிக் சங்கத... மேலும் பார்க்க

தனது Instagram பக்கத்தை நீக்கினாரா Virat Kohli? அனுஷ்காவை டேக் செய்து கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

ஆசிய விளையாட்டு வீரர்களில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்டவர்களில் ஒருவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. 274 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டவர். இந்த நிலையில், இன்று திடீரென அவரின... மேலும் பார்க்க

"நிராகரிக்கப்பட்ட காலகட்டத்தைக் கடந்து.!"- கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஹர்திக் உருக்கம்

கிரிக்கெட் பயணத்தில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலானப் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " முழு மனதுடன் நான் காதலிக்க... மேலும் பார்க்க

'இந்தியா' தான் காரணமா? T20 உலக கோப்பையில் கலந்துகொள்ளாத வங்கதேசம்; இந்தியா, ICC மீது கடும் சாடல்

வங்கதேசத்தை சேர்ந்த மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதில் இருந்து, இந்தியா – வங்கதேச உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக, பிப்ரவரி 7-ம் தேதியில் இருந்து டி-20 உலகக் கோப்பை நடக்க... மேலும் பார்க்க

Olympics 2028: "ஒலிம்பிக்கில் விளையாடுவதுதான் என்னுடைய ஆசை; ஆனால்" - மனம் திறக்கும் ஸ்டீவ் ஸ்மித்

34-வது ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளன.இந்த ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டும் இடம் பெற்றுள்ளது. 128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் ... மேலும் பார்க்க

'தேசியளவில் சாதித்தவருக்கே இந்நிலை என்றால்' - ரயிலில் தடகள வீரர்களுக்கு நேர்ந்த அவலம்; பின்னணி என்ன?

கம்பம் தாண்டுதல் விளையாட்டில் இந்தியாவின் டாப் வீரர்கள் தேவ் மீனாவும், குல்தீப் யாதவும்.அனைத்து இந்தியா பல்கலைக்கழக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட இருவரும், தங்களது பல்கலைக்கழகத்திற்கு ரயிலில் த... மேலும் பார்க்க