செய்திகள் :

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

post image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 6 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மத்திய வங்கக் கடலில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதற்கிடையே, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடலில் புதன்கிழமை(ஆக.13) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி(புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும்.

இதனால், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், புதன்கிழமை முதல் திங்கள்கிழமை(ஆக. 18) வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு புதன்கிழமை காலை(ஆக.13) 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 208 அரசுப் பள்ளிகள் மூடல் ஏன்? தொடக்கக் கல்வித் துறை விளக்கம்

Heavy rain is likely to occur at one or two places in 6 districts of Tamil Nadu, namely Chennai, Chengalpattu, Kanchipuram, Tiruvallur, Villupuram and Cuddalore, for the next 3 hours.

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக புதன்கிழமை பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.74,320-க்கு விற்பனையாகிறது.அதன்படி, தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாள்களில் பவுனுக்கு ரூ.1,240 குறைந்துள்ளது.செ... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் கோர விபத்து: பிக்-அப் வாகனம் லாரியுடன் மோதியதில் 11 பேர் பலி

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் தௌசா-மனோஹர்பூர் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை பிக்-அப் வாகனம் கண்டெய்னர் லாரி மீது மோதியதில் குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகினர். மேலும் 10-க்க... மேலும் பார்க்க

ஆபரேஷன் அகால் 9வது நாள்: குல்காம் தாக்குதலில் 2 வீரர்கள் வீர மரணம்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நடந்து வரும் ஆபரேஷன் அகால் 9வது நாளில், இரண்டு வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக ராணுவம் உறுதி செய்திருக்கிறது.வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் ராணுவத்தினருக்கும்... மேலும் பார்க்க

ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசாங்கம் நடத்துவது துரதிருஷ்டவசமானது: உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வருவது துரதிருஷ்டவசமானது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட... மேலும் பார்க்க

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

சென்னையில் இருந்து ஆந்திரம் மாநிலத்துக்கு கடத்த முயன்ற 900 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை எழும்பூர் ரய... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை தமிழ்நாட்டில் மீட்கப்பட்டது எப்படி?

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தையை 13 நாள்களுக்குப் பின் திருவிடைமருதூர் அருகே திருநீலக்குடியில் சத்தீஸ்கர் மாநில போலீஸார் மீட்டனர். குழந்தையை மீட்ட போ... மேலும் பார்க்க